Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

யசோதர காவியம் பகுதி-1
முதல் பக்கம் » யசோதர காவியம்
யசோதர காவியம் பகுதி-2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2013
05:03

இரண்டாவது சருக்கம்- உஞ்சயினியின் சிறப்பு

73 வளவயல் வாரியின் மலிந்த பல்பதி
அளவறு சனபத மவந்தி யாமதின்
விளைபய னமரரும் விரும்பு நீர்மைய
துளதொரு நகரதுஞ் சயினி யென்பவே.

அசோகன் சிறப்பு

74 கந்தடு களிமத யானை மன்னவன்
இந்திர னெனுந்திற லசோக னென்றுளன்
சந்திர மதியெனு மடந்தை தன்னுடன்
அந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள்

இக்காப்பியத் தலைவனான யசோதரன் பிறப்பு

75 இந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே
சந்திர மதியொரு தனயற் றந்தனள்
எந்துயர் களைபவ னெசோத ரன்னென
நந்திய புகழவ னாம மோதினான்.

யசோதரன் மணம்

76 இளங்களி றுழுவையி னேத மின்றியே
வளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய்
விளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியால்
உளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான்.

யசோமதியின் பிறப்பு

77 இளையவ ளெழினல மேந்து கொங்கையின்
விளைபய னெசோதரன் விழைந்து செல்லுநாள
கிளையவ ருவகையிற் கெழும வீன்றனள்
வளையவ ளெசோமதி மைந்தன் றன்னையே.

இதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்.

78 மற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி
பற்றுவா னடிதொழ படிவ நோக்குவான்
ஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை
யுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன்.

இளமை நிலையாமை

79 வண்டளிர் புரைதிரு மேனி மாதரார
கண்டக லுறவரு கழிய மூப்பிது
உண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன்
வண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன்.

துறவின் இன்றியமையாமை

80 இளமையி னியல்பிது வாய வென்னினிவ்
வளமையி லிளமையை மனத்து வைப்பதென்
கிளைமையு மனையதே கெழுமு நம்முளத
தளைமையை விடுவதே தகுவ தாமினி.

81 முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலை
சிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம்
முந்தையின் மும்மடி முயன்று புண்ணிய
மிந்திர வுலகமு மெய்தற் பாலாதே.

யசோதரனுக்கு முடி சூட்டுதல்

82 இனையன நினைவுறீஇ யசோதர னெனுந்
தனையனை நிலமகட் டலைவ னாகெனக
கனை மணி வனைமுடி கவித்துக் காவலன
புனைவளை மதிமதி புலம்பப் போயினான்.

யசோதரன் அரசியல்

அசோகன் துறவு

83 குரைகழ லசோகன் மெய்க் குணதரற் பணிந்
தரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன
உரைசெய லருந்தவத் துருவு கொண்டுபோய்
வரையுடை வனமது மருவி னானரோ.

84 எரிமணி யிமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்துக்
கொருமணி திலதம் போலு முஞ்சயி னிக்கு நாதன்
அருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த
குருமணி குடையி னீழற் குவலயங் காவல் கொண்டான்.

மன்னனின் மனமாட்சி

85 திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு
மருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி
உருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய் மொழியோடொ
அருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான்.

86 அஞ்சுத லிலாத வெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று
வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன்
புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில்
தஞ்சுத லிலாத கண்ணன் றுணிவன துணிந்து நின்றான்

87 தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால்
பாடலொ டியைந்த பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல்
ஊடலங் கினிய மின்னி னொல்கிய மகளி ராடும
நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான்.

யசோதரன் பள்ளியறை சேர்தல்

88 மற்றோர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்துமாலைக
கொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூடமொன்றிற
சுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிர் சேக்கை துன்னி
கற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிதி ருந்தான்.

அமிர்தமதியும் பள்ளியறை சேர்தல்

89 சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக்
கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப
நலம்கவின் றினிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல்
அலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய ணைந்தாள்.

இருவரும் இன்பம் நுகர்தல்

90 ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசி றந்த
பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி
நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித்
தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் திளைத்துவிள்ளாப.ந்

இதுவுமது.

91 மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம
அடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற்
படங்கடந் தகன்ற வல்குற் பாவையே புணைய தாக
விடங்கழித் தொழிவி லின்பக் கடலினுண் மூழ்கி னானே.

இருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்.

92 இன்னரிச் சிலம்புந் தேனு மெழில்வளை நிரையு மார்ப்ப
பொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருகு பொங்க்
மன்னனு மடந்தை தானு மதனகோ பத்தின் மாறாய்த்றே
தொன்னலந் தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன்

பண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்

93 ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச்
சேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும
வேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத்
தீயிடை மெழுகி னைந்த சிந்தையி னுருகினாளே.

அரசி மதிமயங்குதல்

94 பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்
அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க்ந் குரிய போகம்
விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்
மண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள்.
பெண்மையின் புன்மை

95 மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவுந
துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும்
பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர் பெருமை பேணா
என்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே

குணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல்

96 துன்னிய விரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி
யின்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த வெல்லை
துன்னின டொழி துன்னித் துணைவரிற் றமிய ரேபோன்
றென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள்.

அரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்

97 தவழுமா மதிசெய் தண்டார் மன்னவன் றகைமை யென்னுங்
கவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை
பவளவய் மணிக்கை கொண்ட பண்ணிய றோட்டி பற்றித்
ந்துவளுமா றொருவ னெல்லி தொடங்கின னோவ வென்றாள்.

தோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல்.

98 அங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன னல்லளே போல்
கொங்கவிழ் குழலி மற்றக் குணவதி பிறிது கூறும்
நங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட
ந்பங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண்டனையென் னென்றாள்.

அரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற, தோழி அஞ்சுதல்.

99 என்மனத் திவரு மென்னோ யிவணறிந் திலைகொ லென்றே
தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும்
நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல்
சின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள்.

அரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.

100 மாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற்
கேளல னாயி னாமுங் கேளல மாது மாவி
நாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை
வாளள வுண்கண் மாதே மறுத்துரை மொழியி னென்றாள்.

அரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக் கூறாவண்ணம் புகழுதல்.

101 என்னுயிர்க் கரண நின்னோ டின்னிசை புணர்த்த காளை
தன்னின்மற் றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன
என்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே
துன்னும்வா யவளோ டெண்ணித் தோழியு முன்னி னாளே.

தோழி, பாகனைக் கண்டு மீளல்.

102 மழுகிரு ளிரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன்
ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே
கழுதுரு வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத் (டாள்
தொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண்

(மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்

103 மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத்
தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான் (டேன்
றன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்
என்னைநீ முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள்..

104 நரம்புகள் விசித்த மெய்ய னடையினில் கழுதை நைந்தே
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரிற்
குரங்கினை யனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன்
நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள்.

105 பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா
சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம்
நீதவிர்ந் திட்டு நெஞ்சி னிறையினைச் சிறைசெய் கென்றாள்
கோதவிழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே

அமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத் தோழிக்குக் கூறல்

106 என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம
ந்சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும
ஒன்றிய வழகுங் கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம்
நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ

107 காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல்
காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன்
ஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய னாக்
நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள்.

தோழியின் அச்சம்

108 தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான்
ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும்
பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனையெ
நாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள்.

இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின் வாயிலாகக் கூறுகின்றார்.

109 ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க னாருங்ந்1
கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப
பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே
தோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்ந் .

110 தனிவயி னிகுளை யானே தரப்படு சார னோடு
கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து செல்நாள்
முனிவினை மன்னன் றன்மேல் முறுகின ளொழுகு முன்போ
லினியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே..

மன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல்

111 அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன்
உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின்
விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லேன்று காமத்
துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே.

மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்.

112 துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்திந்
மயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக்
கயல்விழி யவடன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண்
செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான்.

அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்

113 கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால்
இடைநிலஞ் செல்ல வீர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்ந்
புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க வென்றே.
துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே

அரசி மூர்ச்சை யெய்துதல்

114 இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல்
வெருளியான் மதிப்புண் டையோ விம்மிய மிடற்ற ளாகித்ந்
தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்டே ந்
மருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான்.

அரசி மூர்ச்சை தௌபிந்து காலம் கடந்ததற்குக்காரணம் கூறல்

115 தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி
வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக் கிறைவன் றன்னோந்
விடையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய் ங்றாள்.
வெய்யபா வங்கள்2 செய்தேன் விளம்பலன் விளைந்த தென்ந்

அரசியின் உறுதிமொழி

116 பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங்
கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ
எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர்
சொற்பகர்ந் தருளு காளை துணைவரா பவரு முண்டோ.

மறைந்து நின்ற மன்னனின் செயல்

117 என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச் சீறிக்
கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே
யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும்
சென்றிடை விலக்கி நின்றோர் தௌபிந்துணர் வெழுந்ததன்றே

118 மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர்
பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன்
டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற் (றுண்
றீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான்.

மன்னன் காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல்.
 
120 எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும்
மண்ணிய புகழை மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத்
திண்மையையுடைக்கு மாண்மை திருவொடுசிதைக்குஞ்சிந்தை
கண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படுகாம மென்றான்.

இதுவுமது

121 உருவினொ டழகு மொளியமை குலனும் பேசின்
திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக்
கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்த
துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான்

மண்ணாசையையும் துறக்க எண்ணுதல்

122 மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள்
புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்
பெண்ணிய லதுவ தன்றோ பெயர்கமற் றிவர்கள் யாமும்
கண்ணிய விவர்க் டம்மைக் கடப்பதே கரும மென்றான்.

மன்னன் தன்உள்ளக் கிடக்கையை மறைத்திருத்தல்.

124 மற்றைநாள் மன்னன் முன்போல் மறைபுறப் படாமை
சுற்றமா யவர்கள் சூழத் துணிவில னிருந்த வெல்லை ங்யின்பச
மற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே
கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள்.

இதுவுமது

125 நகைவிளை யாடன் மேவி நரபதி விரகி னின்றே
மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும்
பிபுகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்
மிகைகமழ் நீரிற் றேற்ற மெல்லிய றேறி னாளே.

இதுவுமது.

126 புரைவிரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய
விருநிற மலரி னாலின் றிவளுயி ரேக லுற்ற
தரிதினில் வந்த தின்றென் றவளுட னசதி யாடி
விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான்.

சந்திரமதி ஐயுறல்.

127 மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமு மாறா
வணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கோந்
பிணியென வெனது நெஞ்சிற் பெருநவை யுறுக்குமைய
துணியலெ னுணரச் சொல்வாய் தோன்றனீ யென்று.

அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு உள்ளுறையாகத் தெரிவித்தல்.

128 விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே
மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக
கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ
தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான்

உண்மையை உணரவியலாத தாய், மகனிடம் அக்கனவு சண்டிகையால் விளைந்ததெனக் கூறல்

129 கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா
இரவினிற் கனவு தீமைக் கேது வென்றஞ்சல் மைந்த
பாவிநற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால
விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம்

130 ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கந் தன்னின்
மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்
கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளை
மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு

131 மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே
கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே
சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல
கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள்.

மன்னன் நெறியறிந்து கூறல்

132 ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுதலோடுந்
தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி
ஈங்கருள் செய்த தென்கொ லிதுபுதி தென்று நெஞ்சில்
தாங்கல னுருகித் தாய்முன் தகுவன செப்பு கின்றான்.

133 என்னுயிர் நீத்த தேனும் யானுயிர்க் குறுதி சூழா
தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின்
என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய்
மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ ரல்லரோ தான்.

134 யானுயிர் வாழ்த லெண்ணி யௌபியவர் தம்மைக் கொல்
வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி (லின்
ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி
மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே.

135 அன்றியு முன்னின்1 முன்ன ரன்னைநின் குலத்து ளோபந்கள்
கொன்றுயிபந் கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லாந்
இன்றுயிபந் கொன்ற பாவத் திடாந்பல விளையு மேலால்
நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம்.

மன்னனை மாக்கோழி பலியிடப் பணித்தல்

136 என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென்
சென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி பிறிது கூறுங் (றே
கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து
சென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள்.

137 மனம்விரி யல்குன் மாய மனத்ததை வகுத்த மாயக்
கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற்
றெனைவினை யுதயஞ் செய்ய விடர்பல விளைந்த வென்பால்
வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான்.
 
138 உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்ந்கொலை போலுமென்னும
பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவின் மன்னன
செயிர்த்தவளுரைத்த செய்கைசெய்வதற் கிசைந்ததென்றான்
அயிர்ப்பதென் னறத்தின் றிண்மை யறிவதற்கமைவிலாதான்.

139 மாவினில் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய
பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய ங்செய்தே
தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ்
ஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண் டருளி தென்றான்.

மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்

140 மேலியற் றெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட
சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி
கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ
மாலிய லரசன் றன்சை வாள்விடுத் துருகி னானே.

141 என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி
சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல
பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த
கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுகொ லென்றான்.

142 ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை
ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை
ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும் ங்ன்.
ஆதகாவினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றா.

அரசன் துறவு மேற் கொள்ள வீழைதல்

143 இனையன நினைவு தம்மா லிசோதர னகர மெய்தித்
தனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான்
அனையதை யறிந்து தேவி யவமதித் தெனைலவிடுத்தான்
எனநினைந் தேது செய்தா ளெரிநர கத்த வீழ்வாள.

144 அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே
விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும்
அரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால்
அரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள்.

145 ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும்
வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக வென்றே
தாங்கல னவ்வை தன்னோ டவண்மனை தான மர்ந்தான்
தீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம தாமே.

146 நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக
எஞ்சலி லட்டு கங்க ளிருவரு மருந்து கென்றே
வஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள்
ந்சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள்.

மன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல்

147 நஞ்சது பரந்த போழ்தி னடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்
அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தாங்கண்ந்
புஞ்சிய வினைக டீய புகுந்தன பொறிகள் பொன்றித்
துஞ்சினர் துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே.

உழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல்

148 எண்களுக் கிசைவி லாத விறைவியா மிவடன் செய்கை
கண்களுக் கிசைவ லாத கடையனைக் கருதி நெஞ்சின்
மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள்
பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார்.

விஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக் கொன்ற பாபத்தால் மரணம் நேர்ந்ததென்று நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொள்ளல்

149 தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை யின்கண்
காதர முலகி தன்கட் கருதிய முடித்தல் கண்டுஞ்
சேதன வடிவு தேவிக் கெறிந்தனர் தெரிவொன் றில்லார்
ஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம்.

நகரத்து அறிஞர் கூறுதல்

150 அறப்பொரு ணுகர்தல் செல்லா னருந்தவர்க் கௌபியனல்லன்
மறப்பொருள் மயங்கி வையத் தரசியன் மகிழ்ந்து சென்றான்
இறப்பவு மிளையர் போகத் திவறின னிறிது யின்கண
சிறப்புடை மரண மில்லை செல்கதி யென்கொ லென்றார்.

151 இனையன வுழையர் தாமு மெழினக ரத்து ளாரும்
நினைவன நினைந்து நெஞ்சி னெகிழ்ந்தனர் புலம்பி வாடக்
கனைகழ லரசன் றேவி கருதிய ததுமு டித்தாள்
மனநனி வலிதின் வாடி மைந்தனை வருக வென்றாள்.

152 இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண்
வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்ந்
புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே
மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள்.

யசோமதி முடிபுனைந்து அரசனாதல்

153 வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி
யேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச்
சீரணி யடிகள் செல்வத் திருவற மருவல் செல்லான்
ஓரணி யார மார்ப ருவகை2 யங் கடலு ளாழ்ந்தான்.

154 இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின்
இனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம
இனையது தௌபிவி லாதா ரிருநில வரசு செய்கை
வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான்.

 
மேலும் யசோதர காவியம் »
தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar