காஞ்சி மண்டலத்தின் பாக்கியம்; பெரிய பிராட்டியின் உள்ளத்தின் இஷ்டமாக நிறைந்தவன். நம் புண்ணியங்களின் முதிர்வு; மங்களங்களின் உறைவிடம்; கருணையின் வடிவம்; உலகின் ஒப்பற்ற காரணன் என்னும்படியான வேகாஸேதுப்பெருமான். பாம்பணையை அழகுபடுத்துபவனாக பள்ளி கொண்டிருக்கிறான். சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று விளங்கும் வேகாசேது பெருமாளை. சனிக்கிழமைதோறும் 12 முறை இந்தத் துதியைச் சொல்லி வழிபடுவதால் இஷ்டங்கள் கைகூடும். அரசு தொடர்பான பணிகளில் தடைகள், தாமதங்கள் நீங்கி வெற்றி ஏற்படும்.