ஜயா ச விஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ வீணா புஸ்தக தாரிணீ
ஒரு செயல், எவ்வித தடையும் இல்லாமல் பூர்ண பலனைத் தருவதாக நிறைவடைய வேண்டும். அதில் எவ்விதமான குதர்க்கமும், எதிர்பாராத, விபரீத மாற்றமும் ஏற்பட்டுவிடக் கூடாது. இதற்கு, இந்தத் துதியை அந்த வேலையில் ஈடுபடும்போதெல்லாம் சொல்லி வருவது மிகச் சிறந்த பலனளிக்கும். நடைமுறை வாழ்வில், நாம் மேற்கொள்ளும் சாதாரண செயல்களிலும் குளறுபடி, மறதி, தடை, ஏமாற்றம் போன்றவை ஏற்படாதிருக்க, இந்தத் துதியை தினமும் பத்துமுறை சொல்லி வருவது நல்லது.