Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமானுஜர் பகுதி-12 ராமானுஜர் பகுதி-14 ராமானுஜர் பகுதி-14
முதல் பக்கம் » ராமானுஜர்
ராமானுஜர் பகுதி-13
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2011
03:06

திருக்கச்சிநம்பி ராமானுஜரிடம் பெருமாள் சொன்ன விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார். நானே அனைத்தும்; நானே பரப்பிரம்மம். ஜீவர்களுக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் உறுதியாக இருக்கிறது. இனியும் பிறக்காமல் முக்தியடைய வேண்டுமென விரும்புவோர், என்னையே சரணமடைய வேண்டும். சரணாகதி தத்துவமே உயர்ந்தது. ஒருவன் இறக்கும் சமயத்தில் என்னை நினைக்க மறந்து விட்டாலும் பரவாயில்லை; காலமெல்லாம், அவன் என் பக்தனாய் இருந்ததற்காக அவனுக்கு நிச்சயமாக முக்தி அளிப்பேன். அவர்கள் இறந்தவுடனேயே வைகுண்டத்தை அடைந்து விடுகிறார்கள். பெரிய நம்பியே இனி உனக்கு குரு. அவரது திருவடிகளைப் பற்றிக் கொள்,. இதுதான் ராமானுஜருக்கு, பெருமாள் சொல்லி அனுப்பிய விஷயம். ராமானுஜரோ குருவைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர். வைணவத்தலைவர் ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக பெரியநம்பி பெரிதாக மதிக்கப்படுபவர். பெருமாளே அவரைப் பற்றிக் கொள் என கூறியபிறகு, இனி குருவைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாக அவர் மகிழ்ச்சிக் கூத்தாடினார். தனக்காக பெருமாளிடம் பேசி தன் சந்தேகத்தை தீர்த்து வைத்ததுடன், ஒரு குருவையும் அடைய வழிகாட்டிய திருக்கச்சிநம்பியின் கால்களில் விழப்போனார் ராமானுஜர். அவர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், சுவாமி! தங்களை விட பூமியில் உயர்ந்தவர் யாருமில்லை, என்றவாறு அவர் கால்களில் விழுந்துவிட்டார். இந்தக் கணத்தில் இருந்து ராமானுஜர் வீட்டை மறந்தார். மனைவியை மறந்தார். சொந்தபந்தம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீட்டில் சொல்லிக் கொள்ளாமலேயே ஸ்ரீரங்கத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நேரத்தில் ஸ்ரீரங்கமடத்தில் ஆளவந்தாருக்கு பிறகு மடத்தின் பொறுப்பில் இருந்த திருவரங்க பெருமாள் அரையர் சிஷ்ய கோடிகளிடையே பேசிக் கொண்டிருந்தார். ஆளவந்தார் வேத விளக்கங்களில் கரை கண்டவர். அரையரும் இதில் வல்லுநர் தான் என்றாலும், ஆளவந்தாரின் அளவுக்கு தேர்ந்தவர் அல்ல. எனவே அவர் சிஷ்யர்களிடம், சீடர்களே! நீங்கள் என்னிடம் மரியாதை வைக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவன் அல்ல. பரமனுக்கு பூஜை செய்கிறேன்; அவன் புகழ் பாடுகிறேனே ஒழிய ஸ்ரீஆளவந்தாருக்கு பிறகு, அவரைப் போலவே வேத விளக்கங்களை உங்களுக்கு என்னால் தர முடியவில்லை. இவ்விஷயத்தில் மிகவும் அற்ப சக்தியுள்ளவனாகவே இருக்கிறேன். வேத விளக்கங்களில் விற்பன்னரான, ஒருவர் நமது மடத்துக்கு தலைவராக வேண்டும். நானும், அவரது தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். ஆளவந்தார் முக்தியடைவற்கு முன்பு, ராமானுஜரை அழைத்து வரச் சொல்லியிருந்தார். அவரே, ஒருவரை அழைக்கிறார் என்றால், அந்த மகான் கல்வியில் மிகச்சிறந்தவராகவும், வேத விளக்கங்களை தெளிவாக அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இளைஞராயினும் கூட, அவரது தலைமையின் கீழ் இந்த மடம் செயல்படுவதே சரியானதென்று எண்ணுகிறேன். யாராவது ஒருவர் அவரைச் சந்தித்து, அவரை இங்கு அழைத்து வாருங்கள். ஆளவந்தார் மறைந்த நாளில் அவர் இங்கு வந்தார். அப்போது அவர் பேசப்பேச ஆளவந்தாரின் கை விரல்கள் நிமிர்ந்ததை என்னால் மறக்க முடியவில்லை, என்றார்.

நமது மகான்களின் வரலாறை இளைய தலைமுறை கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இதனால் தான். இப்போதெல்லாம், ஒன்றும் தெரியாதவர்கள் பலர் பதவிக்காக போட்டி போட்டு, தங்களையும் அழித்துக் கொண்டு, தாங்கள் சார்ந்துள்ள நிறுவனங்களையும் அழித்து விடுகிறார்கள். தெரியாத ஒன்றை தெரிந்தது போல் காட்டி நாடகமாடும் வழக்கம் மகான்களிடம் இல்லை. அரையர் போன்றவர்களின் வரலாறை சிறுவயதில் படித்திருந்தால், இந்நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது. இதை சீடர்கள் எல்லாரும் ஏற்றனர். ராமானுஜரை அழைத்து வர பெரியநம்பியை அனுப்புவது என முடிவாயிற்று. சீடர்கள் பெரியநம்பியிடம், சுவாமி! தாங்கள் ராமானுஜரை அழைத்து வாருங்கள். ஒருவேளை ராமானுஜர் இப்போதே வரத் தயங்கினால் அவரை வற்புறுத்த வேண்டாம். அரங்கநாதனின் சித்தப்படி அவர் எப்போது வரவேண்டுமென உள்ளதோ, அப்போதே வந்து சேரட்டும். ஆனால், நீங்கள் உடனடியாகத் திரும்பி விட வேண்டாம். ஒரு ஆண்டு ஆனாலும் பரவாயில்லை. காஞ்சிபுரத்திலேயே தங்கியிருந்து, திவ்ய பிரபந்தங்களைக் கற்றுக் கொடுங்கள். அவர் இன்னும் பல விஷயங்களில் தேர்ச்சி பெறட்டும். அவரை தலைவராக்க உள்ளோம் என்ற செய்தியையும் அவர் இங்கு வரும் வரை சொல்ல வேண்டாம், என்றனர். அந்த மடத்தில் திருமணமான சீடர்கள் சிலரும் இருந்தனர். ஆனால், ஊருக்கு வெளியே அவர்களை குடி வைத்திருந்தார்கள் சீடர்கள். பெரியநம்பியும் திருமணமானவர். அவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் மதுராந்தகம் கோயிலில் தங்கினார். கோயில் குளக்கரையில் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது, ஒரு இளைஞன் அவர் திருவடியில் விழுந்து வணங்கினான். யார் இவன்? முன்பின் தெரியாத ஊரில், முன்பின் தெரியாத இந்த இளைஞன் காலடிகளில் விழுந்து கிடக்கிறானே! பெரியநம்பி அவனை, எழுந்திரப்பா! நீ யார்? என்றார்.

 
மேலும் ராமானுஜர் »
temple news
சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. ... மேலும்
 
temple news
ராமானுஜருக்கு இளம்வயது முதலே கல்வியில் பேரார்வம். ஆசிரியர்கள் அவர் மீது கொண்ட அன்பிற்கு அளவில்லை. ... மேலும்
 
temple news
குருவே! தங்கள் ஆசியோடு இப்பதத்திற்கான பொருளைக் கூறுகிறேன், என பணிவுடன் துவங்கினார். ஆசிரியர் பெருமானே! ... மேலும்
 
temple news
நல்லவர்கள் பார்வையில் எல்லாமே நல்லதாகத்தான் தெரியும். ராமானுஜருக்கு இதுபற்றியெல்லாம் எதுவும் ... மேலும்
 
temple news
ராமானுஜருக்கு உள்ளுக்குள் சற்று நடுக்கம். ஏனெனில், எதிரே நின்றவரின் தோற்றம் அப்படி. ஆனால், அவரோடு ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar