வாழ்வின் இனிமை இல்லறம் என்றால், இல்லறத்தில் இனிமை குழந்தைப்பேறுதான். உடல் ரீதியான குறைபாடுகள் இல்லை; ஜாதக ரீதியாக சொல்லப்பட்ட பரிகாரங்கள் பலன் இல்லை என்று சலிக்காமல், இந்த மந்திரத்தை உபதேசமாகப் பெற்று ஜபம் செய்வது சிறப்பானது. முக்கியமான விஷயம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும்.
முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள். 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். இதனை புன்னை மரத்தடியில் ஜபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜபம் செய்ய ஏற்றவை. ஜபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும். மாலையில் வடக்கு திசை நோக்கியும் அமர்ந்து ஜபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூர்யோதயம் வரை ஜபம் செய்ய ஏற்ற காலம்.
தவிர, கலசம் நிறுவி, அதில் இந்த மந்திரத்தை ஜபித்து, மந்திர உருவேறிய அந்த நீரைக் கொண்டு, தம்பதிகள் இருவரையும் அமரவைத்து, அவர்களுக்கு நீராட்டலாம். உடல் ரீதியாக சொல்லப்படும் கண்ணுக்குப் புலனாகாத குறைபாடுகள் இதனால் அகலும். தவிர, சர்க்கரை கலந்த வெண்ணெயை தவழும் கிருஷ்ணனுக்கு சமர்பித்து, குழந்தைகளுக்கு விநியோகித்து, தம்பதிகளும் சாப்பிட்டு வருவது கூடுதல் பயன்தரும்.