இதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும் எல்லாவற்றிலும் அமைதி உண்டாகட்டும் என்பது இதன் பொருள். அமைதி என்பது எப்போது ஏற்படும்? இன்னொன்றின் மேல் விருப்பம், வெறுப்பு, கோபம், ஆசை, எதிர்பார்ப்பு, ஏக்கம், தேடல்.. இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏற்படாத நிலையில்தான் அமைதி உண்டாகும். எப்போது இத்தகைய எண்ணங்கள் ஏற்படாது? அனைத்தும் தனக்குச் சமமானதே; அனைவரும் நம்முடைய உறவே..... இப்படியான உயர் நினைவுகள் ஏற்படும்போது. சலனத்தை ஏற்படுத்துகின்ற தீய எண்ணங்கள் உண்டாகாது. அப்படிப்பட்ட உயர்நலனை விரும்பும் உள்ளம் வாய்க்கட்டும்; அதனால், பிரபஞ்சத்தில் எல்லாவற்றிலும் அமைதி உண்டாகட்டும் என்பது இந்தப் பிரார்த்தனையின் நோக்கம். இதுவே நம் அனைவரின் பிரார்த்தனையாகட்டும், இதனால், இல்லந்தோறும், நாடுதோறும் அருள் வெளிச்சம் பரவட்டும்; பிரபஞ்சத்தில் அமைதி நிலவட்டும்.