சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓதரிய ஐயைந்து தத்துவம் தாகியெவ்வுலகுநின் செயலா வதென்(று)உணரும்வகை யாதிசந் திரதாரி யாய்உலகின்உறுசெனன துரித மாற்றிஆதியுமை யுடனிருந் துயிர்வகை புணர்த்திவிடையாரூட னாய்இ னிதுபேர்அருள்புரிந் துயர்நடன மூர்த்தியாய்ப் பெரிதுவகையானந்த மயம தாக்கிக்காதலியெ னக்கவுரி செங்கைதொட் டருள்பெருகுகலியாண சுந்த ரனெனக்காட்டிநல் வதுவைகொண் டாண்பெண்ணோ டுறைதரக்கருதி யுயர்பிட் சாடனத்தீதிலுரு வங்கொண்டே வர்க்குமெய்ஞ் ஞானமும்சிறந்திட அளிப்பை யன்றோசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.காமனைக் காய்ந்தவடி வங்கொண் டுயிர்க்கெலாம்காமநீத் திடநி னைத்துக்காலாரி யாய்உயிர்ப் பயமொழித் தேமுனர்க்கசடர்புர மூன்றெ ரித்துத்தாமதம் இராசதம் சத்துவம் எனாவரும்தக்க முக்குண மாற்றியேசலந்தர வதஞ்செய்வடி வாகியுயர் மாதவர்தவம்வளர்த் தருளை நல்கிப்பூமிசை கிருத்திவா சத்திறைய தாகியேபொங்குபா சங்க ழித்துப்புகழ்தக்கன் மகம்அழித் திடுவீர னாகியேபொருந்துஅற வினைய ளித்துத்தீமைதவிர் நாரிபங் குடையனாய் உட்பகைகள்தீர்த்திடப் புரிவை யன்றோசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.அம்பிகைமெய் பாதிகொண் டாண்பெண்பு ணர்ந்திடஅமைத்துக் கிராத வடிவாய்அகமருவு மூர்க்கரை யொழித்தரிய கங்காளனாய்உயிர்க் கோக ளித்துப்பம்புசண் டேசர்க் கனுக்கிரக வடிவதாய்ப்பத்தியன் பர்கள் எவர்க்கும்பாலித்து விண்புரந் தருள்நீல கண்டனாய்ப்பயிலுமும் மலமொ ழித்துக்கம்புளணி மாயனுக் காழியருள் வடிவதாய்க்கருதுபோ கங்கள் ஈந்துகருணைதரு விக்கினப் பிரசாத னாயுட்களங்கம தொழித்து முருகன்செம்பரையி னோடமர்ந் துலகின்மனை சேயொடுசிறந்திடப் புரிவை யன்றோசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.பகர்ஏக பாதனாய்ச் சரியைகிரி யாதியபயன்தந்து தருமம் உய்யப்பரமசுக வாதனத்து இறையாகி வைகிமுறைபயில்தெக்க ணாமூர்த் தியாத்தகைகொள்குரு வருள்தந்து இலிங்கவுற் பவபீடசத்தியொடு இருந்து புவனத்தாய்தந்தை யெனவுறைந் தருளநீ ஐயைந்துதத்துவப் படிவம் ஆனாய்உகமுடிவில் அரியயன் உருத்திரன் அனந்தமறைஉம்பர்உயிர் பல்பு வனமும்ஓங்குமுச் சுடர்ஆறு சமயமெனு மற்றதும்ஒடுங்குவடி வங்கொள் தனியாய்ச்செகமுடிவின் அரியசங் காரதாண் டவம்இடும்சிற்பரா காச முதலேசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.