சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. ஆரார் புரிந்தபிழை ஆனாலும் அன்பரைக்கண்பாரா திருப்பதுண்டோ? பாடிப்பணியும் என்னைநேரா எழுந்தருளி நெஞ்சுவந்து ரட்சிப்பாய்!காரார் திருமேனிக் கடவுள் கருப்பண்ணனே!2. ஆருக்கு வந்த விருந்தோ என்றகலாமல்பேருக்கு ஒருகுறையும் வாராது பேணியருள்!ஊருக்கு மன்னவனாய் உறங்காப் புளியிருக்கும்பாருக்குள் கண்கண்ட பகவான் கருப்பண்ணனே!3. பாய்மரத்தில் காகம் பறந்து திரும்பி அந்தப்பாய்மரமே தேடிவந்து படிவதுபோல், என்ஐயாதாயகமாய் உன்னைச் சரணடைந்தேன்! சரணடைந்தேன்சேயென்னைக் காப்பாய்நீ தேவா, கருப்பண்ணனே!4. ஐயைந்து திங்கள் அருமையுள்ள கோசலையின்தெய்வ வயிற்றினிலே சோயாய்க் கிடந்தவனே!மெய்யாய்ச் சனகனது வில்வளைத்துச் சீதைதனைக்கையால் அணைத்தவனே! காவாய், கருப்பண்ணனே!5. முந்தி அயோத்திவிட்டு முனிவனவன் பின்சென்றுவிந்தையாய்த் தாடகையை வில்லால் முடித்தவனே!மந்திரமா வேள்வி வகையாகக் காத்தருளும்கந்துகமே! என்னை நீ காவாய் கருப்பண்ணனே!6. அண்டாத பேயும் அடங்காத வினைசூதும்ஒண்டவரும் போதில் உனையே நினைத்திடுவேன்!கொண்டாடும் என்னைக் குதித்துவந்து ஆதரிப்பாய்தண்டாயுதம் கொண்ட சாமீ கருப்பண்ணனே!