சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கைதரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்துஉமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் - விளாசிரித்து அருள் செய்தார் சேரை செந்நெறிச் செல்வனாரே!கலையாறும் முத்தமிழ் கல்வியும் யோகமும் காசினியில்நிலையாகிய பெரும் செல்வமும் நீதியும் நீ அருள்வாய்மாலை ஆசன வருகேச கங்காள பைரவனே!தலைமாலை சூழ்புயனே காழி ஆபதுத் தாரணணே!வயிரவர்பட்டியிலே எழுந்தருளிக் கோயில் கொண்டுபழமறைகள் நாதமெல்லாம் கேட்டுக் கொண்டுகட்டிமையோர் சூழ்ந்திருக்க மனிதர்க் காகக்காவலுக்கோர் தெய்வமான நிலத்திலுற்றுமட்டில்லாச் சூலமுடன் தமடு கத்தைமணிக் கரங்கள் கொண்டிலங்க ஞமலி ஏறிப்பட்டி தொட்டி அத்தனையும் காக்கும் எங்கள்பழந்தெய்வம் வயிரவரே! சரணம் காப்பு!காலத்தை வென்றவனே! காசிக்குச்சென்றவனே! கயிலை வாழும்மூலத்தைக் காட்டியவா! சூலத்தைநீட்டியவா! ஞமலி முற்றும்கோலத்தைக் காட்டியவா! கொடுமையினைவாட்டியவா! கோபம் கொண்டுவேழத்தை உரித்தவனே! வயிரவா!பணிகின்றோம் வினைகள் தீர்ப்பாய்!