சீக்ஷா (அதாவது சிக்ஷா) என்றால் கல்வி; வல்லீ என்றால் பகுதி. கல்விபற்றி சிறப்பாகக் கூறுவதால் இந்தப் பகுதி சீக்ஷா வல்லி என்று அழைக்கப்படுகிறது.
மனிதனுக்கு இரண்டு வகையான தேவைகள் உள்ளன. உணவு, உடை, தங்குமிடம் போன்றவை முதல் வகை; இவை அடிப்படைத் தேவைகள். ஆனால் இவற்றால் மட்டும் அவனால் திருப்தியுற்று நின்றுவிட முடிவதில்லை. அன்பு வேண்டும், ஆற்றல் வேண்டும், இன்பம் வேண்டும், அறிவு வேண்டும், இறைவனை நாட வேண்டும் - இவ்வாறு எத்தனையோ வேண்டியுள்ளன. ஒரு கோணத்தில் பார்க்கும் போது, அடிப்படைத் தேவைகளைவிட இவை முக்கியமானவை. இவை வாழ்க்கைத் தேவைகள் (ஞுதுடிண்tஞுணtடிச்டூ ணஞுஞுஞீண்). இந்த இரண்டுவகைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குத் துணை செய்கின்ற கல்வியே முழுக்கல்வியாக முடியும். அத்தகைய கல்வியையே நாம் வாழ்க்கைக் கல்வி என்கிறோம்.
வேத கால இந்தியாவில், ஏன், அன்னியர் படையெடுப்புகளால் நமது கலாச்சாரம் தடுமாறும்வரை இந்தியாவில் அத்தகைய கல்வியே நிலவியது. அதுவே குருகுலக் கல்வி முறை, புறச் சூழ்நிலை காரணமாகவும், பெற்றோர், சமுதாயம் என்று பலரது ஆதிக்கம் காரணமாகவும் மனம் ஒரு நிறம் பெறுமுன்னரே. அதாவது மிகச் சிறு வயதிலேயே சிறுவர்கள் அறிவொளி பெற்ற குருவின் வீட்டில் அவரது பொறுப்பில் விடப்பட்டனர். வேதங்கள் மட்டுமல்ல, வில் வித்தை போன்ற உபவேதங்கள்,
(உப வேதங்கள் நான்கு. அவை ஆயுர்வேதம் (மருத்துவம்), தனுர்வேதம் (வில்வித்தை போன்ற போர்க் கலைகள்), கந்தர்வ வேதம், (இசை போன்ற நுண்கலைகள்), அர்த்த சாஸ்திர்ம (ஆட்சிக் கலை). ஜோதிடம் போன்ற வேதாங்கங்கள் (வேதாங்கங்கள் ஆறு. அவை சிக்ஷை (உச்சரிப்பு), வியாகரணம் (இலக்கணம்), சந்தஸ் (செய்யுள் அமைப்பு), நிருக்தம் (அகராதி), ஜ்யோதிஷம் (வானவியல், ஜோதிடம்), கலபம் (சடங்குகள்). முதலியவையும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. இயற்கையுடன் இயைந்து வாழ்தல், இறைவனைச் சார்ந்து வாழ்தல் போன்றவை இயல்பாகவே அவர்களது வாழ்வின் அங்கமாகத் திகழ்ந்தன. எனவே குருகுலத்திலிருந்து அவர்கள் நிறைமனிதர்களாக வெளிவந்தனர். அவர்களால் வாழ்க்கையைச் சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது. அடிப்படைத்தேவைகளுடன் வாழ்க்கைத் தேவைகளையும் பூர்த்தி செய்தபடி அவர்கள் சமுதாயத்தின் சிறந்த அங்கங்களாகத் திகழ்ந்தனர்.
ஆன்மீகத்தின் உச்சகங்களைக் கண்ட உபநிஷத முனிவர்களைப் போலவே உலகியல் துறைகளிலும் மாமேதைகளை பாரதம் உருவாக்கியது. இந்த வாழ்க்கைக் கல்வியால்தான் மருத்துவத்தில் சரகர், சுச்ருதர்: வானவியலில் ஆரிய பட்டர், பாஸ்கரர், கணிதத்தில் பாஸ்கரர், லீலாவதி; ஜோதிடத்தில் வராக மிகிரர், அரசியலில் சாணக்கியர் என்று நீள்கிறது. அத்தகைய மேதைகளின் பட்டியல், பிற நாடுகளிலிருந்தும் கடல் கடந்து மாணவர்கள் வந்து படிக்கும் நாடாகத் திகழ்ந்தது. பாரதம், பொருளாதாரத்திலும் வாணிபத்திலும் ஈடினையற்றுத் திகழ்ந்தது நம் நாடு. அதற்கெல்லாம் அடிப்படையாகத் திகழ்ந்தது இந்த வாழ்க்கைக் கல்வி.
சமீப காலத்தில் இந்தக் கல்வியை வற்புறுத்தியவர் யுக ஆச்சாரியரான சுவாமி விவேகானந்தர். அனைவருக்கும் கல்வி அளிப்பதன்மூலம்தான் இந்தியாவில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற முதல் குரல் எழுந்தது அவரிடமிருந்துதான். ஆனால் அவர் கூறுவது தற்போதைய பல்கலைக் கழகங்களில் நிலவுகின்ற கல்வியை அல்ல; நாம் மேலே கூறிய வாழ்க்கைக் கல்வியையே என்பதை நினைவில்கொள்வது இன்றியமையாதது.
கல்வி என்ற மந்திரத்தால் தீர்க்க முடியாத பிரச்சினையே இல்லை.... உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது மனத்தின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது: அது மனத்தின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது: அல்லது மனிதனைச் சரியாக. திறமையாகச் சிந்திக்கப் பயிற்றுவிப்பது.... கல்வி என்பது என்ன? அது புத்தகப் படிப்பா? இல்லை. அது பலவகைப் பட்ட அறிவைத் தேடிக் கொள்வதா? அதுவும் இல்லை. சங்கற்பத்தின் (தீடிடூடூ) போக்கையும் வெளிப்பட்டையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பயனளிக்குமாறு செய்கின்ற பயிற்சியே கல்வி.... நம் மாணவர்கள் பெறும் கல்வி எதிர்மறையானதாக உள்ளது. மாணவன் புதிதாக ஒன்றையும் கற்பதில்லை; அதே வேளையில் தன்னிடம் உள்ளவற்றையும் இழக்கிறான்.... ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் இத்தகைய கல்வி, சுயசிந்தனையுள்ள ஒருவனைக்கூட தோற்றுவிக்கவில்லை... எதனால் அவர்கள் சுயமாகச் சிந்திக்கக் கற்றுக் கொள்வார்களோ, அதில் அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்ட வேண்டும். இந்த அடிப்படைக் கருத்தை மறந்ததுதான் இந்தியாவின் இழிநிலைக்குக் காரணம். மாணவர்களுக்கு இத்தகைய கல்வி அளிக்கப்படுமானால் அவர்கள் மனிதர்கள் ஆவார்கள்; வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வதற்கான ஆற்றல் பெறுவார்கள்.... தற்போதைய நாகரீக நாடுகளின் அறிஞர்கள் அதை ஆராய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள். நமது நாட்டிலோ பல்லாயிர வருடங்களுக்கு முன்பு இது ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டு விட்டது.... அதற்குப் பண்டைய குருகுல வாசம் முதலியவை வேண்டும்.
இவ்வாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு, நமது நாட்டை உன்னதங்களில் திளைக்கச் செய்த குருகுலக் கல்வியான வாழ்க்கைக் கல்வியின் சில அடிப்படை அம்சங்களையே உபநிஷதத்தின் இந்த முதற்பகுதியில் காண்கிறோம்.
1. பிரார்த்தனை
உபநிஷதம் காட்டும் வாழ்க்கைக் கல்வியின் முதல் அம்சம் பிரார்த்தனை உயர்ந்த எதையும் சாதிப்பதற்கு பிரார்த்தனைபூர்வமான வாழ்க்கை தேவை, இயற்கையை அணுகும்போது சரி, இறைவனை நாடும் போதும் சரி, பணிவுடனும் பிரார்த்தனையுடனும் முயற்சிகளைச் செய்தால் பாதை சுலபமாகிறது. வாழ்க்கையை அணுகுகின்ற இந்த உபநிஷதமும் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது.
பல்வேறு தேவர்களிடம் பிரார்த்திப்பதாக இந்தப் பிரார்த்தனை அமைந்துள்ளது. காண்கின்ற புற உலகை இயக்குகின்ற தூல சக்திகளாயினும் சரி, காணாத அக உலகை இயக்குகின்ற சூட்சும சக்திகளாயினும் சரி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வமாகக் கண்டனர் உபநிஷத ரிஷிகள். இந்த தெய்வங்கள் அபிமானி தேவதை எனப்பட்டனர். ஒவ்வொரு தேவதையும் பிரபஞ்சத்தில் ஒன்றையும் மனிதனில் ஒன்றையும் இயக்குவதாகக் கொள்ளப்பட்டனர். உதாரணமாக சூரியனுக்கும் கண்ணுக்கும் அபிமானி தேவதை அர்யமான் பகலுக்கும் பிராணனுக்கும் அபிமானி தேவதை மித்ரன். இந்த தெய்வ சக்திகள் நினைத்தால் நம்மிலும் பிரபஞ்சத்திலும் நமக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்க முடியும். அப்போது முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். எனவே அந்த தேவர்களிடம் பிரார்த்திக்கிறார் உபநிஷத முனிவர்.
இந்தப் பிரார்த்தனையின்மூலம் இயற்கையுடன் இயைபு (டச்ணூட்ணிணதூ தீடிtட ணச்tதணூஞு) என்கின்ற கருத்தும் சுட்டிக்காட்டப் படுகிறது. நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் ஓர் அங்கம். மனிதர்கள் மட்டுமல்ல; மிருகங்கள், செடிகொடிகள், நதிகள், மலைகள் என்று இயற்கையில் காணப்படுகின்ற அனைத்துமே சமுதாயத்தின் அங்கங்கள் இவற்றுடன் இயைந்து வாழும்போதே வாழ்க்கை அதன் முழுப் பரிமாணத்துடன் திகழும். எனவே இயற்கையைப் போற்றுவதற்கு முதலில் போதிக்கப்படுகிறது.
மனித வாழ்வு வளம்பெற வேண்டுமானால் இந்த இயற்கை சக்திகளை வளம்பெறச் செய்ய வேண்டும். அதாவது மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும். உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும் வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கையன்னை தயாராகவே இருக்கிறாள். ஆனால் அதற்கு அவளுடன் இயைந்து வாழ்வது இன்றியமையாதது. இயற்கையை நாம் அழித்தால் நாமும் அழிவோம். மாறாக, நாமும் இயற்கையும் பரஸ்பரம் பேணி வாழ்ந்தால் இயற்கையும் வாழும். நாமும் வாழ்வோம்.
இயற்கைச் சக்திகளான அந்த தேவர்களிடம் பிரார்த்தனை செய்வதாக அமைந்துள்ள மந்திரம். இவ்வாறு இயற்கையுடன் இயைந்து வாழ்வதற்கு வற்புறுத்துகிறது.
1. மித்ரன் நமக்கு நன்மை செய்யட்டும், வருணன் நமக்கு நன்மை செய்யட்டும், அர்யமான் நமக்கு நன்மை செய்யட்டும். இந்திரனும் பிருகஸ்பதியும் நமக்கு நன்மை செய்யட்டும், எங்கும் நிறைந்த வராகிய விஷ்ணு நமக்கு நன்மை செய்யட்டும் பிரம்மனை வணங்குகிறேன். வாயு தேவனே, உன்னை வணங்குகிறேன். நீயே கண்கண்ட தெய்வ மாக இருக்கிறாய். கண்கண்ட தெய்வம் என்று உன்னைப் போற்றுகிறேன்; ரிதம் என்று போற்று கிறேன்; சத்தியம் என்று கூறுகிறேன். அந்தப் பரம் பொருள் என்னைக் காப்பாராக! அவர் ஆசிரியரைக் காப்பாராக! என்னைக் காப்பாராக! ஆசிரியரைக் காப்பாராக!
ரிதம் என்பது பிரபஞ்ச இயக்கத்தின் ஒழுங்குமுறை நியதி. அதற்கு அடிப்படையான உண்மையே சத்தியம். பிரபஞ்சம் இயங்குகிறது, ஏனெனில் இறைவன் அதனைப் பின்னின்று இயக்குகிறார். பிரபஞ்சம் என்பது இயற்கை சக்திகளின் ஒட்டுமொத்தம்.
இவ்வாறு இயற்கை சக்திகளாகவும் அவற்றைப் பின்னின்று இயக்குபவராகவும் விளங்குகின்ற இறைவன் மாணவனையும் ஆசிரியரையும் காக்கட்டும் என்று இந்த மந்திரத்தில் பிரார்த்திக்கப்படுகிறது.
2. வேதம் ஓதுதல்:
வாழ்க்கைக் கல்வியின் அடுத்த அம்சமாக வருவது வேத பாராயணம், அதாவது வேதங்களை ஓதுதல் இதன் முக்கியத்துவம் பற்றி ஏற்கனவே (பக்.18) கண்டோம். வேதங்களை ஓதும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் இங்கே கூறப்படுகின்றன.
சீக்ஷாம் வ்யாக்யாஸ்யாம: வர்ண; ஸ்வர: மாத்ரா பலம் ஸாம ஸந்தான: இத்யுக்த: சீக்ஷாத்யாய://2//
சீக்ஷாம் - உச்சரிப்புபற்றி; வ்யாக்யாஸ்யாம: - விளக்குவோம்: வர்ண: - ஒலி; ஸ்வர: - ஏற்ற இறக்கம்: மாத்ரா - நீட்டல்-குறுக்கல்; பலம் - உச்சரிப்பதற்கான முயற்சி; ஸாம: - நிறுத்தம் விவரம்: ஸந்தான: -தெளிவான உச்சரிப்பு; இதி - இவ்வாறு: சீக்ஷா அத்யாய: - உச்சரிப்பு பற்றிய பாடம்: உக்த: - சொல்லப்பட்டது.
2. உச்சரிப்புபற்றி விளக்குவோம். ஒலி, ஏற்ற இறக்கம், நீட்டல்-குறுக்கல், உச்சரிப்பதற்கான முயற்சி, நிறுத்தும் விவரம், தெளிவான உச்சிரிப்பு ஆகியவை உச்சரிப்புபற்றிய பாடங்கள் ஆகும்.
ஒலி: ஒவ்வோர் எழுத்துக்கும் உரிய ஒலி சரியாக உச்சரிக்கப்படுதல்.
ஏற்ற இறக்கம்: இதுபற்றி ஏற்கனவே (பக் 16) கண்டோம். ரிக், யஜுர், அதர்வண வேதங்களில் இவ்வாறு மூன்று சுரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாம வேதத்தில் ஏழு சுரங்கள், அதாவது ஏழு விதமான ஏற்ற இறக்கங்கள் பயன்படுகின்றன.
நீட்டல்-குறுக்கல்: குறல் (ஹ்ரஸ்வம்), நெடில் (தீர்கம்) மற்றும் இரு மடங்கு நெடில் (ப்லுதம்) ஆகியவை வேத பாராயணத்தில் பயன்படுகின்றன.
உச்சரிப்பதற்கான முயற்சி: தேவையான இடங்களில் தேவையான எழுத்துக்களை அழுத்தி உச்சரிப்பதன்மூலம் வார்த்தையின் பொருளைச் சிறப்பாக வெளிப்படுத்துதல்.
நிறுத்தும் விவரம்: நிறுத்தம் இடங்களில் உரிய கவனம் செலுத்துதல், உதாரணமாக இந்த மந்திரத்தை வர்ண: ஸ்வர: மாத் ராபலம்/ ஸாமஸந் தான:/ என்றெல்லாம் படிக்காமல் இருத்தல்.
தெளிவான உச்சரிப்பு: ஒவ்வோர் எழுத்தும் தெளிவாக உச்சரிக்கப்பட வேண்டும். கும்பகர்ணன் நித்தியத்துவம் கேட்க விரும்பினான், ஆனால் அவன் கேட்டது, உச்சரிப்பில் தெளிவின்மை காரணமாக நித்திரத்துவம் என்று ஆகி விட்டது. அவன் தொடர்ந்து தூங்க வேண்டியவன் ஆனான் என்பார்கள். எனவே உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும்.
வேதங்களை ஓதும் போது இவையெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் இந்த விளக்கங்கள் ஆசிரியரிடமிருந்து மாணவர்கள் நேரடியாக அறிய வேண்டியவை எனவே இங்கே அவை விரிவாகக் கூறப்படவில்லை.
3. மனப் பயிற்சி: என்னைப் பொறுத்தவரையில் கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின்னர் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக் கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரு ஆற்றல்களையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும். என்பார். சுவாமி விவேகானந்தர். உபநிஷதம் காட்டும் வாழ்க்கைக் கல்வியின் ஓர் அம்சமாக மனப்பயிற்சி வைக்கப்பட்டுள்ளது.
மன ஒருமைப்பாட்டின் மூலமாக எதையும் சாதிக்க முடியும். மலைகளைக்கூட அணு அணுவாக உடைத்தெறிய முடியும். மன ஒருமைப்பாடே எல்லா அறிவின் சாரமாகும். மனம் குவியாமல் எதுவும் செய்ய முடியாது. சாதாரண மனிதனில் தொண்ணூறு சதவீதம் எண்ண ஆற்றல் வீணாகிறது. ஆகையால் அவன் அடிக்கடி தவறு செய்கிறான். பயிற்சி பெற்ற மனிதனோ மனமோ தவறே செய்வதில்லை. மனம் ஒருமுகப்பட்டு, தன்னை நோக்கித் திரும்பும்போது. நம்முள் உள்ள எல்லாமே நமது பணியாளர்களாகி விடுகின்றன; நமது எஜமானர்களாக இருப்பதில்லை. எனவே வாழ்க்கையில் உயர்ந்த எதையாவது சாதிக்க வேண்டுமானால் மனத்தை ஒருமைப்படுத்த வேண்டும்.
ஆனால் எடுத்த எடுப்பில் மனத்தை ஒருமைப்படுத்த முயன்றால் அது பொதுவாக தோல்வியிலேயே முடியும். ஏனெனில் மன ஒருமைப்பாடு என்பது படிப்படியாக மனத்தைச் சிறு எல்லைக்குள் கட்டுப்படுத்துதல் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இங்கே உபநிஷதம் மன ஒருங்கிணைப்பு, உணர்வின் விரிவு, தியானம் என்று மூன்று படிகளாக இதனைச் செய்யுமாறு கூறுகிறது. அனைத்திற்கும் அடிப்படையாக பிரார்த்தனையும் வேள்வியும் வைக்கப்படுகின்றன.
சங்கல்பம்: ஆசிரியரும் மாணவரும் செய்கின்ற சங்கல்பத்துடன் இந்தப் பயிற்சிகள் தொடங்குகின்றன. அன்றாட வாழ்க்கையில் நாம் தவறுகளையும் தோல்விகளையும் சந்திப்பதுண்டு. இதற்குப் பொதுவாக மூன்று காரணங்களைச் சொல்லலாம் -1. தன்னறிவு (சங்கல்ப ஸூக்தம் (சுக்ல யஜுர்வேதம், வாஜஸனேயீ ஸம்ஹிதை, வேத மந்திரங்கள்.) (ண்ஞுடூஞூ-ச்தீச்ணூஞுணஞுண்ண்) இன்றி ஒரு செயலைச் செய்வது; 2. ஒரு லட்சியத்திற்காக அல்லாமல் ஏனோதானோ என்று ஒரு காரியத்தைச் செய்வது; 3. திட சங்கல்பம் (தீடிடூடூ) இல்லாமல் வேலை செய்வது இந்த மூன்றிலும் முக்கியமானது திட சங்கல்பம். இது மற்ற இரண்டிற்கும் அடிப்படை சங்கல்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற ஒரு பகுதியே யஜுர்வேதத்தில் உள்ளது. எனவே ஆசிரியரும் மாணவர்களும் அத்தகையதொரு சங்கல்பத்தை இந்த மந்திரத்தில் செய்துகொள்கிறார்கள்.
3.1. நாம் இருவரும் (அதாவது ஆசிரியரும் மாணவரும்) பெருமை பெறுவோம், நாம் இருவரும் புனிதப் பேரொளி பெறுவோம் என்று மாணவர்கள் கூறுகின்றனர். பிறகு ஆசிரியர், இப்போது நாம் பயிற்சிகளை விளக்கத் தொடங்குவோம் என்கிறார்.
உயர்ந்த சிந்தனைகளும் தூய வாழ்வுமே பெருமையையும் புனிதப் பேரொளியையும் தர முடியும். எனவே அத்தகைய வாழ்க்கை வாழ்வோம். என்று ஆசிரியரும் மாணவர்களும் சங்கல்பம் செய்துகொள்வதாக இந்த மந்திரம் அமைந்துள்ளது.
மன ஒருங்கிணைப்புப் பயிற்சி ஐந்து சிந்தனைகள் (3.2-3.7)
அடிப்படை: ஜபம், தியானம் என்று மனம் சம்பந்தமான பயிற்சிகளைச் செய்ய அமர்ந்ததும், சாதாரணமாக அனைவரும் உணர்கின்ற உண்மை ஒன்று உண்டு. மனம் சிதறிக் கிடக்கின்ற உண்மைதான் அது. அலுவலகம், நண்பர்கள், வழியில் கண்ட காட்சிகள் என்று மனம் பல்வேறு துண்டுகளாகக் கிடக்கும். மனம் சிதறிக் கிடக்கிறது - ஒரு பகுதி டாக்காவிற்குப் போயிருக்கிறது. ஒரு பகுதி டில்லிக்கு, மற்றொரு பகுதி கூச்பிகாருக்கு. இந்த மனத்தைத் திரட்ட வேண்டும். திரட்டி ஓரிடத்தில் குவிக்க வேண்டும். பதினாறு அணா விலை உள்ள துணி வேண்டுமென்றால், துணிக்காரனுக்குப் பதினாறு அணாவையும் கொடுக்க வேண்டும் அல்லவா? என்று இதனை விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
எனவே, சிதறிக் கிடக்கின்ற மனத்தை ஒருங்கிணைப்பதே முதற்படி, இதற்காக இங்கே 5 சிந்தனைகள் தரப்பட்டுள்ளன. நாம் தொடர்பு கொண்ட பொருட்களிலும் மனிதர்களிலும் இடங்களிலும் சுற்றுகின்ற மனத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் கொண்டுவர இந்தச் சிந்தனைகள் துணை செய்கின்றன. ஒரு புள்ளியில் குவிப்பதற்கு முன்பு மனத்தை, ஒரு வட்டத்தில் கொண்டு வருவதற்கான முயற்சி இது. இது மனப் பயிற்சியின் முதற்படி.
மொழிக்கு இலக்கணம் முக்கியம். இலக்கணத்தில் சந்தி அல்லது இரண்டு எழுத்துக்களின் சேர்க்கை ஓர் அடிப்படைப் பகுதி, மகேசுவரன் என்ற சொல், மகா என்ற சொல்லும், ஈசுவரன் என்ற சொல்லும் சேர்ந்தது, இதில் மகா முற்பகுதி அல்லது கீழ்ப்பகுதி, ஈசுவரன் பிற்பகுதி அல்லது மேற்பகுதி இந்தச் சேர்க்கையை அடிப்படையாகக் கொண்டு சிந்தனைப் பயிற்சிகளை இங்கே விவரிக்கிறார். உபநிஷத முனிவர்.
3.2 சேர்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பயிற்சி ஐந்து விதமாக விளக்கப்படுகிறது. பிரபஞ்சம், ஒளிப்பொருள், கல்வி, உயிர்களின் உற்பத்தி, உடம்பு ஆகியவற்றை ஆழ்ந்து சிந்திப்பதே அந்து ஐந்து முக்கியமான பயிற்சிகள்.
நமது மனம் ஒரு கணம்கூட இடையீடின்றி சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது; ஆனால் அது பல்வேறு பொருட்களைப்பற்றி சிந்திக்கிறது. அவ்வாறு சிந்திப்பது சிரமமான காரியமும் அல்ல. ஆனால் ஏதேனும் ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு கருத்தைப்பற்றியோ தொடர்ந்து சிந்திப்பது அவ்வளவு எளிதல்ல. அவ்வாறு ஒரு பொருள் அல்லது கருத்தை எடுத்துக் கொண்டு அதன் பல்வேறு அம்சங்களைத் தொடர்ந்து சிந்திக்கும்போது, மனம் ஒரு புள்ளியில் குவிக்கப்படவில்லை என்றாலும் ஒரு வட்டத்திற்குள் சுழலுமாறு செய்யப்படுகிறது. இதன் மூலம் மனம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
3.3. இனி பிரபஞ்ச சிந்தனையைப் பார்ப்போம் இதில் பூமி கீழ்ப்பகுதி, வானம் மேற்பகுதி; இரண்டும் இணைகின்ற இடம் வெளி (ண்ணீச்ஞிஞு); இரண்டையும் இணைப்பது காற்று. இவ்வாறு பிரபஞ்ச சிந்தனை செய்ய வேண்டும்.
வேலை, படிப்பு, குடும்பம், நண்பர்கள், அலுவலகம் என்று நம்மில் பலரது வாழ்வும் நான், எனது என்ற வட்டங்களுக்குள் சுருங்கிவிடுகிறது. இந்த வட்டத்திலிருந்து நாம் வெளியே வர வேண்டும். அப்போது மட்டுமே வாழ்க்கையை ரசிக்க முடியும். அனுபவித்து வாழ முடியும். நம்மைச் சுற்றி பிரபஞ்சம் என்ற ஒன்று எல்லையற்ற அழகுடனும் இனிமையுடனும் விரிந்து கிடக்கிறது. அதைக் காண வேண்டும். அதைப்பற்றி சிந்திக்க வேண்டும். அதனையே இந்த மந்திரம் கூறுகிறது. இந்தச் சிந்தனையின் இரண்டு முக்கிய அம்சங்களைக் காண்போம்.
1. வானமும் பூமியும் சந்திக்கின்ற தொடுவானப் பகுதி ஓர் அற்புதக் காட்சியாகும். மேலே வானம், கீழே பூமி, இரண்டும் வெளியில் சந்திக்கின்றன. இயற்கையின் அழகுகளுக்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு இது. இயற்கையையும் உலகையும் வெறுத்து ஒதுக்கத் தேவையில்லை. அதன் மகிமையைச் சிந்திப்பதும் ஓர் ஆன்மீக சாதனையே என்பதை வலியுறுத்துகிறது இந்த மந்திரம்.
2. இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு படைக்கப்பட்டது. என்பதை இந்த உபநிஷதம் பின்னால் (2:1.2) கூறுகிறது. இங்கே அதன் ஆரம்பப் படிகளுள் ஒன்று சுட்டிக்காட்டப்படுகிறது. வெளியிலிருந்து காற்று தோன்றுகிறது. அதுபற்றி இங்கே கூறப்படுகிறது. படைப்புபற்றி சிந்திக்கச் சொல்கின்ற பகுதியாகவும் இதனைக் கொள்ளலாம்.
3.4. இனி ஒளிப்பொருள் சிந்தனையைப் பார்ப் போம். இதில் அக்கினி முற்பகுதி, சூரியன் பிற்பகுதி இரண்டும் இணைவதால் தண்ணீர் உண்டாகிறது. இரண்டையும் இணைப்பது மின்னல், ஒளிப்பொருள் சிந்தனை இவ்வாறு செய்யப்படுகிறது.
பிரபஞ்சத்தின் அழகில் மனத்தை ஒருங்கிணைக்க வேண்டுமானால் முதலில் அதன் அழகை ரசிக்க வேண்டும். அதில் லயிக்க வேண்டும். அதற்கு அடிப்படைத் தேவை ஒளி. ஒளியின்றி எதையும் காண இயலாது. இனி, ஒளியை நாம் நேரடியாகக் காண முடியாது; ஒளிர்கின்ற பொருட்களை மட்டுமே நாம் காண முடியும். எனவே அக்கினி, சூரியன், மின்னல் போன்ற சில பொருட்கள் இங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்தச் சிந்தனையின் இரண்டு முக்கிய அம்சங்கள்.
1. ஒளிர்கின்ற பொருட்கள் தாம் ஒளிர்வதுடன் பிற பொருட்களையும் ஒளிரச் செய்கின்றன; அதாவது, பிற பொருட்களை நாம் காணுமாறு செய்கின்றன. பிறருக்கும் பயன்படுமாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு இது ஓர் உதாரணமாக அமைகிறது.
2. அக்கினியிலிருந்து தண்ணீர் உருவாகிறது. இது படைப்பின் அடுத்தக் கட்டம். இயற்கையின் நிகரற்ற ஆற்றலுக்கு மின்னல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இயற்கையின் ஆற்றலால் அக்கினியிலிருந்து தண்ணீர் உருவாகிறது.
ஒளியைச் சிந்திப்பது கடினமாகும். எனவே இது பிரபஞ்ச சிந்தனையைவிட சற்று உயர்நிலைச் சிந்தனை ஆகும்.
3.5 இனி, கல்விபற்றிய சிந்தனையைக் காண் போம், இதில் ஆசிரியர் முற்பகுதி, மாணவன் பிற் பகுதி, இருவரும் கல்வியில் இணைகின்றனர்; கற்பித்தல் இணைதலுக்குக் காரணமாக உள்ளது, கல்விச் சிந்தனை இவ்வாறு செய்யப்படுகிறது.
இது இன்னும் சற்று உயர்ந்த சிந்தனை. சிந்தனைக்கு ஒரு பொருள் எடுத்துக் கொள்ளப்படாமல், ஒரு கருத்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. கல்வியை, அதாவது கல்வியின் பல்வேறு அம்சங்களைச் சிந்திக்குமாறு இந்தச் சிந்தனை கூறுகிறது.
3.6 உயிர்களின் உற்பத்திபற்றி சிந்தனையை இனி பார்ப்போம் இதில் தாய் முற்பகுதி, தந்தை பிற் பகுதி, இருவரும் இணைவதால் உயிர் பிறக்கிறது இருவரையும் இணைப்பது உடலுறவு. உயிர்களின் உற்பத்திபற்றிய சிந்தனை இவ்வாறு செய்யப்படுகிறது.
பண்டைய சமுதாயம் ஒரு சிறந்த ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கியதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றை இங்கே காண்கிறோம். காமம், உடலுறவு போன்றவை தகுந்த ஒருவரால் சிறுவயதிலேயே கற்பிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் சிந்திக்குமாறும் இங்கே கூறப்படுகிறது. கல்விக்காலம் முடிந்து வெளியேறும்போது ஒருவன் நல்ல மனிதனாக வாழ்வதற்கு இந்தக் கல்வி, இந்தச் சிந்தனை வழிவகுத்தது. வாழ்க்கையின் ஓர்அடிப்படை அம்சமான காமம்பற்றி உரிய வேளையில், உரிய முறைப்படி, தகுந்த ஒருவர் கற்பிப்பதன்மூலம் நல்ல மனிதன் உருவாகிறான்; நல்ல சமுதாயத்திற்கு அது வழிகோலுகிறது. உயிரை உருவாக்குகின்ற இந்த உறவை கீதை தெய்வீகமாகப் போற்றுவது இங்கு நினைவுகூரத் தக்கது.
3.7. உடம்புபற்றிய சிந்தனையை இனி காண் போம். இதில் கீழ்த்தாடை முற்பகுதி, மேல்தாடை பிற்பகுதி, இரண்டும் இணையும்போது வாக்கு பிறக் கிறது. இணைக்கின்ற பொருளாக இருப்பது நாக்கு. உடம்புபற்றிய சிந்தனை இவ்வாறு செய்யப்படுகிறது.
உடம்புபற்றிய சிந்தனை என்று கூறப்பட்டாலும் இது உண்மையில் வாக்குபற்றிய சிந்தனையாகும். பேச்சுக் கட்டுப்பாடே ஆன்மீக வாழ்வுக்கு முதற்படி
வாக்கின் ஆற்றலைக் கையாள்வதைக் கர்மயோகத்தின் அடிப்படை நியதியாக வைக்கிறார் சுவாமி விவேகானந்தர்; வாக்கின் ஆற்றலை எண்ணிப் பாருங்கள்! உயர்ந்த தத்துவங்களிலும் அதுபோலவே அன்றாட வாழ்விலும் அவை ஒரு மாபெரும் சக்தியாக விளங்குகின்றன. நாம் சிந்தித்துப் பார்க்காமல், ஆராய்ந்து பார்க்காமல் இரவும் பகலும் இந்த ஆற்றலைக் கையாண்டு கொண்டிருக்கிறோம். இந்தச் சக்தியின் இயல்பைத் தெரிந்துகொள்வதும். அதைச் சிறப்பாகப் பயன்படுத்துவதும்கூட கர்மயோகத்தின் ஒரு பகுதியாகும்.
தேவையற்ற பேச்சு உயர் வாழ்க்கைக்கு என்றல்ல, சாதாரண வாழ்க்கைக்கும் பெரிய தடையாகும். நமது ஆற்றலில் கணிசமான பகுதி பேச்சில் செலவழிகிறது. அதனைச் செலவிடாமல் சேமித்தால் அக வாழ்க்கை போன்ற உயர் தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்த முடியும். எனவே பேச்சுக் கட்டுப்பாட்டைப்பற்றி சிந்திக்கும்படி, கடைப்பிடிக்கும்படி மாணவன் இங்கே அறிவுறுத்தப்படுகிறான்.
3.8. இங்கே கூறப்பட்ட இந்த முக்கியமான சேர்க்கைகள்பற்றி அறிபவன் மக்கட் செல்வம், கால்நடைச் செல்வம், புனிதப் பேரொளி, உணவு முதலானவற்றைப் பெறுகிறான். மேலான உலகங் களில் வாழ்வதற்கான வாய்ப்பும் அவனுக்குக் கிடைக்கிறது.
இந்தச் சிந்தனைகளின் பலனாக மக்கட்செல்வம், புனிதப் பேரொளி போன்றவை கூறப்பட்டுள்ளன. இந்த மந்திரங்களில் கூறப்பட்ட சிந்தனைகளைத் தெரிந்து கொள்பவனுக்கு இந்தப் பலன்கள் கிடைக்கும் என்பதல்ல இதன் பொருள். இவற்றைத் தெரிந்துகொண்டு, முறையாகச் செயல்பட வேண்டும். தெரிந்துகொள், தெரிந்த உண்மைகளை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து அவற்றை மனத்தின் ஒரு பகுதியாக்கு, பிறகு ஆழ்ந்து சிந்தனை செய் என்கின்றன உபநிஷதங்கள் சிந்திக்கின்ற மனம் தெளிவு பெறுகிறது. மனத் தெளிவு பெற்றவனுக்குத் தனது நோக்கம் என்ன, அதை அடைவதற்கு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பவை சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகின்றன. அவன் தனது நோக்கத்திற்குப் பாதகமானவற்றை விலக்கி, சாதகமானவற்றை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறான்; வெற்றி காண்கிறான். குருகுல நாட்களுக்குப் பிறகு அவன் இல்லற வாழ்வில் ஈடுபடலாம் அல்லது துறவு வாழ்வை ஏற்கலாம். அவனால் இரண்டிலும் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ முடிகிறது.
மேலும், இந்தச் சிந்தனைகளின்மூலம் மனம் நான், எனது என்ற குறுகிய வட்டங்களிலிருந்து வெளிவருகிறது; அலுவலகம், வேலை என்று பலவாறாகப் பிரிந்து கிடந்த மனம் ஒரு வட்டத்திற்குள் குவிக்கப்படுகிறது.
இந்தச் சிந்தனைகளை உரிய முறையில் ஒழுங்காகத் தொடர்ந்து செய்யும்போது மன அழுத்தம் (ட்ஞுணtச்டூ tஞுணண்டிணிண) குறைகிறது; மனம் லேசாகிறது; வெற்றிகரமான வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான மனத் தெளிவைத் தருகிறது. இதனால்தான் வாழ்க்கைக் கல்வியின் ஆரம்பப் படிகளுள் ஒன்றாக இது வைக்கப்பட்டுள்ளது.
4. பிரார்த்தனை (4.1-4.5)
வாழ்க்கைக் கல்வி என்றல்ல; வேத கால வாழ்க்கைக்கே அடிப்படையாக நாம் காண்பது பிரார்த்தனையும் வேள்வியும். இங்கே சில பிரார்த்தனைகளைக் காண்கிறோம். பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. தன்னுணர்வுடன் (ண்ஞுடூஞூ-ஞிணிணண்ஞிடிணிதண்ணஞுண்ண்) பிரார்த்தனை செய்தால் எல்லா விருப்பங்களும் நிறைவேறும் (ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய:- பிருஹதாரண்யக <உபநிஷதம், 2.4.5 (அ) 4.5.6.) என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
மனப் பயிற்சிகள் ஆனாலும் சரி, சாதாரண வாழ்க்கையானாலும் சரி, எதையாவது சாதிக்க வேண்டுமானால் அதற்கு ஆற்றல் வேண்டும். பிரார்த்தனை அந்த ஆற்றலைத் தருகிறது. அதனால்தான் அது முக்கிய அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளது.
4.2-4.5 மந்திரங்களில் சில பிரார்த்தனைகளைக் காண்கிறோம். இவை ஒவ்வொன்றும் ஸ்வாஹா என்ற சொல்லுடன் நிறைவுறுகிறது. ஸ்வாஹா என்பது யாகங்களில் பயன்படுத்தப்படும் மந்திரம். தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் ஒன்றை அர்ப்பணம் செய்யும்போது இந்த மந்திரத்துடன் அந்தப் பொருளை அக்கினியில் சமர்ப்பிக்க வேண்டும். ஸ்வாஹா என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தப் பிரார்த்தனைகளின் சிறப்பும் நோக்கமும் காட்டப்படுகின்றன. அது என்ன நோக்கம்? பிரார்த்தனைகளின் மூலம் பெற்றவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதுதான். அந்த நோக்கம் பிரார்த்தனைகள்மூலம் செல்வம், கல்வி போன்றவற்றைப் பெற்று, பெற்றபின் அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். திருப்பிக்கொடுத்தல் என்பது வேள்வி- வாழ்க்கையின் அடிப்படை நியதி. அதாவது, பிரார்த்தனை என்பது சுய தேவைகளுக்காக மட்டுமின்றி, பிறர்நலத்தையும் கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும். இந்த உண்மை ஸ்வாஹா என்ற மந்திரத்தின் வாயிலாகக் காட்டப்படுகிறது.
அறிவொளி வேண்டும்:
யச்சந்தஸாம் ரிஷபோவிச்வரூப: சந்தோப்யோ ஸத்யம்ருதாத் ஸம்பபூவ ஸ மேந்த்ரோ மேதயா ஸ்ப்ருணோது அம்ருதஸ்ய தேவ தாரணோ பூயாஸம் சரீரம் மே விசர்ஷணம் ஜிஹ்வா மே மதுமத்தமா கர்ணாப்யாம் பூரி விச்ருவம் ப்ரஹ்மண: கோசோஸஸி மேதயா பிஹித: க்ருதம் மே கோபாய //4.1//
4.1. எந்த நாதம் வேதங்களின் மிகச்சிறந்த பகுதியோ, எல்லாமாக இருக்கிறதோ, அழிவற்ற தான வேதங்களிலிருந்து தோன்றியதோ அந்த ஓங்காரம் எனக்கு அறிவொளியைத் தரட்டும். இறைவா, நான் அழிவற்ற பரம்பொருளைப்பற்றிய அறிவைப் பெறுவேனாக. எனது உடல் ஆரோக்கிய மாக இருக்கட்டும். எனது நாக்கு மிகவும் இனிமையானவற்றைப் பேசட்டும், காதுகள் ஏராள மாக நல்லவற்றைக் கேட்கட்டும், ஓங்காரப் பரம்பொருளே! உலகப் பொருட்களைப்பற்றிய அறிவால் நீ மறைக்கப்பட்டுள்ளாய். இறைவனின் இருப்பிடம் நீ. கற்றவற்றை நான் மறந்துவிடாமல் காப்பாய்!
4.2. பரம்பொருளே! துணிகள், பசுக்கள், உணவு, குடிநீர் போன்றவை தடையின்றி எனக்குக் கிடைக்க வேண்டும்; கிடைத்தவை மேன்மேலும் பெருக வேண்டும். ஒருபோதும் வற்றாத செல்வம் எனக்குக் கிடைக்க வேண்டும். முடி அடர்ந்த மிருகங்க ளான ஆடு போன்றவையும் எனக்குக் கிடைக்க வேண்டும்.
ஒருவனிடம் உள்ள ஆடுமாடுகளின் எண்ணிக்கையை வைத்து சமுதாயத்தில் அவனது அந்தஸ்து பண்டைய நாட்களில் நிர்ணயிக்கப்பட்டது. எனவே கால்நடைச் செல்வம் ஒரு முக்கியச் செல்வமாக இருந்தது. குளிர்ப்பகுதியாகிய வட நாட்டில் கம்பளி ஒரு முக்கியத் தேவை ஆட்டு முடி அதற்கு மிகவும் பயன்பட்டது. எனவே அத்தகைய ஆடுகள் ஒரு முக்கியச் செல்வமாகப் பிரார்த்திக்கப்படுவதை இங்கே காண்கிறோம்.
ஆ - என்றென்றும்; மா - எனக்கு; வி - எல்லா திசைகளிலிருந்தும்; ப்ர - ஏராளமாக; தம் - புலனடக்கம்; சம் - மனக்கட்டுப்பாடு; ப்ரஹ்மசாரிண: - நல்லொழுக்கம் உடைய மாணவர்கள்; ஆய்ந்து - வரட்டும்.
4.3. பரம்பொருளே! புலனடக்கமும் மனக்கட்டுப் பாடும் நல்லொழுக்கமும் உடைய மாணவர்கள் ஏராளமாக எல்லா திசைகளிலிருந்தும் என்னிடம் வர வேண்டும்.
பிரார்த்தனைகளின் கூடவே ஸ்வாஹா என்ற மந்திரமும் இணைந்து வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கேட்பது கொடுப்பதற்காகவே என்பது இதன் உட்பொருள் என்பதை ஏற்கனவே (4.1) கண்டோம். பொருட் செல்வமாகட்டும், அறிவுச் செல்வமாகட்டும், பெற்றதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அறிவுச் செல்வத்தை எவ்வாறு திருப்பிக் கொடுப்பது? தகுந்த மாணவர்களுக்குக் கற்பிப்பதன்மூலம், அதற்காகவே இந்தப் பிரார்த்தனை.
4.4 மக்களிடையே நான் புகழ் பெறுவேனாக செல்வந்தர்களுள் சிறந்தவனாக ஆவேனாக.
செல்வந்தர்களுள் சிறந்தவன் என்றால் அனைவரை விட அதிக பணம் வாய்ந்தவன் என்பது பொருள் அல்ல. பிறருக்குக் கொடுத்து, தானும் அனுபவிப்பவனே சிறந்தவன். அதிகம் செல்வம் இருப்பதால் ஒருவன் மக்களிடையே புகழ்பெறுவதில்லை; கொடுப்பவனே புகழ்பெறுகிறான்.
4.5. பரம்பொருளே! உன்னில் நான் இணைவே னாக. என்னில் நீ இணைவாயாக. ஆயிரம் கிளை களுடன் (வளர்ந்திருக்கின்ற மரம்போல் எங்கும்) பரந்திருக்கின்ற உன்னில் இணைவதன்மூலம் நான் புனிதம் பெறுவேனாக. இறைவா! தண்ணீர் எப்படி கீழ்நோக்கிப் பாய்கிறதோ. மாதங்கள் எப்படி வருட மாகப் பரிணமிக்கின்றனவோ அப்படியே நல்ல மாணவர்கள் எல்லா இடங்களிலிருந்தும் என்னை நாடி வரட்டும். நீயே என் அடைக்கலம். எனக்கு உணர்வின் ஒளியைக் கொடு. என்னை ஏற்றுக்கொள்.
ஆன்மீகத்திற்கு அடிப்படையான ஒரு பண்பு புனிதம். அந்தப் புனிதத்தை எப்படி பெறுவது என்பது இங்கே சுட்டிக் காட்டப்படுகிறது. இறைவனில் இணைவதன்மூலம் என்கிறது மந்திரம். அதாவது நமது வாழ்க்கையை இறைமயமாக ஆக்கிக் கொள்ளும்போது நாம் புனிதம் பெறுகிறோம்.
வாழ்க்கைக் கல்வியின் அடுத்த அம்சம் ஆழ்நிலைச் சிந்தனைகள் எனக்கு உணர்வின் ஒளியைக் கொடு என்ற பிரார்த்தனையை முந்தின பகுதியில் கண்டோம்.
உணர்வு (ஞிணிணண்ஞிடிணிதண்ணஞுண்ண்) என்றால் என்ன?
குழந்தை, வாலிபன், வயோதிகன் ஆகிய மூவரும் ஒரே உலகில்தான் வாழ்கிறார்கள். ஆனால் குழந்தை காண்கின்ற உலகம் ஒன்று, வாலிபன் காண்கின்ற உலகம் வேறு, வயோதிகன் காண்கின்ற உலகம் வேறு, இந்த மாற்றத்தைத் தருவது உணர்வுநிலை. உணர்வுநிலை மாறமாற நமது பார்வையின் கோணம் மாறுகிறது.
வீட்டினரை மட்டுமே நேசிக்கின்ற நாம் நமது உணர்வு விரியவிரிய படிப்படியாக சுற்றத்தினரை, நண்பர்களை, பிறரை, நாட்டை, உலகை நேசிக்கிறோம். சுற்றியிருப்பவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; மாற்றம் நம்மிடமே நிகழந்தது - நமது உணர்வு விரிந்தது.
இவ்வாறு படிப்படியாக விரிகின்ற உணர்வு, ஒளி பெறும்போது உள்ளது உள்ளபடி தெரிகிறது; உலகம் உண்மையில் எதுவோ அதுவாகத் தெரிகிறது. உணர்வை விரிப்பதற்கான சில ஆழ்நிலைச் சிந்தனைகளை இங்கே நாம் காண்கிறோம்.
வியாஹ்ருதிகள்:
பூர்புவஸ் ஸுவரிதி வா ஏதாஸ்திஸ்ரோ வ்யாஹ்ருதய: தாஸாமுஹஸ்மை தாம் சதுர்த்தீம் மாஹாசமஸ்ய: ப்ரவேதயதே மஹ இதி தத்ப்ரஹ்ம ஸ ஆத்மா அங்கான்யன்யா தேவதா: //5.1//
5.1. பூ:, புவ:, ஸுவ; ஆகிய மூன்றும் வியாஹ்ருதிகள். நான்காவதாக ஒன்று உள்ளது என்பதை மாஹாசமர் அறிந்தார். அது மஹ:. அதுவே இறைவன், அவரே ஆன்மா. மற்ற தேவர்கள் அவரது அங்கங்களாக உள்ளனர்.
யாகம் முதலானவற்றில் பயன்படுகின்ற மூன்று மங்கல வார்த்தைகள் இங்கே சிந்தனைக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பூ:, புவ:, ஸுவ: ஆகிய இந்த வார்த்தைகள் வியாஹ்ருதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
பூ: என்றால் பூமி, அதாவது நாம் வாழும் உலகம். புவ: என்றால் பித்ரு லோகம், அதாவது இறந்த முன்னோர் வாழும் உலகம் ஸுவ: என்றால் சொர்க்க லோகம், அதாவது தேவர்கள் வாழும் உலகம், இவை ஒன்றைவிட அடுத்தது நுண்ணியது. இந்த உலகங்கள் வேறு எங்கோ இருப்பவை அல்ல. இவை இங்கேயே உள்ளன. ஆனால் வேறு உணர்வுநிலைகளில் உள்ளன. பூமியிலிருந்து மாறுபட்ட, நுண்ணிய உணர்வுநிலையில் பித்ரு லோகம் உள்ளது. அதுபோலவே, பித்ரு லோகத்திலிருந்து மாறுபட்ட நுண்ணிய உணர்வுநிலையில் உள்ளது சொர்க்க லோகம். இத்தகைய உலகங்களைச் சிந்திக்கச் சொல்வதன் மூலம் பல்வேறு உணர்வுநிலைகளைச் சிந்திக்குமாறு உணர்த்தப்படுகிறது.
மூன்று உணர்வுநிலைகளைக் கூறிவிட்டு, மஹ: என்ற நான்காவது ஒன்றை மாஹாசமர் என்ற ரிஷி அனுபூதியில் உணர்ந்து கூறியதாக இந்த மந்திரம் தெரிவிக்கிறது.
மஹ: என்ற இரு நான்காவது உணர்வுநிலை எது?
அது மற்ற மூன்றையும் உள்ளடக்கியது; அதே வேளையில் அவற்றைக் கடந்தது. எப்படி?
உடம்பையும் அங்கங்களையும்போல், கை, கால், காது என்று பல அங்கங்களைத் தொகுத்தால் உடம்பாகி விடாது. அதேவேளையில் உடம்பு என்றால் இவை அனைத்தும் சேர்ந்தது. அங்கங்கள் இணைவதுடன் உயிரும் சேரும்போதுதான் அதை உடம்பு என்று கூற முடியும். அதாவது உடம்பு என்றால் அங்கங்கள் சேர்ந்தது. அதே வேளையில் அவற்றைக் கடந்ததும் கூட. அதுபோல் மஹ: என்ற இந்த நான்காம் உணர்வுநிலை மற்ற மூன்றும் சேர்ந்தது: அவற்றைக் கடந்ததும் கூட, அதுவே இறைவன். எங்கும் நிறைந்த அந்த இறைவனே மனிதனில் ஆன்மாவாக உள்ளார்.
எனவே மூன்று உணர்வுநிலைகள், அவற்றின் மொத்தமும் அவற்றைக் கடந்தவருமான இறைவன், நம்முள் உள்ள ஆன்மா ஆகியவற்றைச் சிந்திக்கச் சொல்கிறது இந்த மந்திரம்.
இந்தப் பகுதியில் நான்கு ஆழ்நிலைச் சிந்தனைகள் கூறப்படுகின்றன. ஒவ்வொன்றாகக் காண்போம்.
5.2 பூ: என்பது பூமி, புவ: என்பது வானம், ஸுவ: என்பது மறு உலகம்: மஹ: என்பது சூரியன் சூரியனால்தான் எல்லா உலகங்களும் வாழ்கின்றன.
பூமி, வானம், மறுவுலகம், சூரியன் ஆகியவை இங்கே சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சமுதாயத்தைப் பற்றிய சிந்தனை என்று இதனை நாம் கொள்ளலாம்.
எப்படி?
பூமி என்பது மனித சமுதாயம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுடன் நமது உறவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே உயர்வாழ்வைப்பற்றி உண்மையாக நாம் சிந்திக்க முடியும். நம்மைச் சுற்றி வாழ்பவர்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் நம்மைப்பற்றி நல்லெண்ணம் கொண்டால் அவை நமது உயர்சிந்தனைகளுக்குச் சாதகமாக அமையும். இல்லாவிடில் பாதகமாகி விடும். எனவே மனித சமுதாயத்துடன் நல்லூறவு வேண்டும் என்பது இந்தச் சிந்தனையின் முதற்பகுதி.
வானமும் மறுவுலகமும் மரணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கையைக் குறிக்கின்றன. இந்த உலகுடன் எல்லாம் முடிந்துவிடுவதில்லை. மரணம் என்பது ஒரு நிலைமாற்றம் மட்டுமே. மரணத்திற்குப் பின்பும் நமது வாழ்க்கை தொடர்கிறது. மரணத்தைப்பற்றி சிந்திப்பது இப்போதைய வாழ்க்கையை நெறிப்படுத்த வகை செய்கிறது.
கண்கண்ட கடவுளாக சூரியன் போற்றப்படுகிறான். வானமும் பூமியும் எல்லா உயிரினங்களும் வாழ்வதும் வளம் பெறுவதும் சூரியனால்தான் சூரியனைப் போற்றுகின்ற பல துதிகளை வேதங்களில் நாம் காண்கிறோம். எனவே சூரியனைத் துதிப்பதும் இந்தச் சிந்தனையின் ஓர் அங்கமாக வைக்கப்பட்டுள்ளது.
5.3. பூ: என்பது நெருப்பு, புவ: என்பது காற்று. ஸுவ என்பது சூரியன். மஹ: என்பது சந்திரன்: சந்திரனால்தான் எல்லா உயிரினங்களும் வளர் கின்றன.
நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன் ஆகியவை இங்கே சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவை இயற்கையின் பல்வேறு அம்சங்கள். எனவே இது இயற்கையுடன் இயைந்த வாழ்வு (டச்ணூட்ணிணதூ தீடிtட ணச்tதணூஞு) பற்றிய சிந்தனை எனலாம்.
சந்திரனுக்கும் உயிரினங்களின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உயிர்ச்சக்தி வடிவாகிய சந்திரனாக ஆகி செடிகொடிகளை எல்லாம் வளர்க்கிறேன். (புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: - கீதை, 15.13.)
என்று கீதை இதனை விளக்குகிறது. செடிகொடிகள் மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தும் வளர்வதற்கான சக்தியைச் சூரியனிலிருந்து பெறுகின்றன; தனித்தன்மைக் கான உயிர்ச் சக்தியை - உதாரணமாக மூலிகைச் செடிகள் தங்கள் குணப்படுத்தும் ஆற்றலை - சந்திரனிடமிருந்து பெறுகின்றன. சூரிய சக்தியும் சந்திர சக்தியும் சேர்ந்து செடிகளை வளர்க்கின்றன. அந்த இரண்டும் இறைவனிடமிருந்தே வருகின்றன. எனவே முந்தின மந்திரம் சூரியனையும் இந்த மந்திரம் சந்திரனையும் சிந்திக்குமாறு கூறுகின்றன.
5.4. பூ: என்பது ரிக் வேதம், புவ: என்பது சாம வேதம் ஸுவ : என்பது யஜுர் வேதம் மஹ: என்பது ஓங்காரம், ஓங்காரத்தால்தான் எல்லா வேதங்களும் மகிமை பெறுகின்றன.
ரிக், சாம, யஜுர் வேதங்களும் ஓங்காரமும் இங்கே சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. வேதம் என்றால் அறிவு, எனவே இது அறிவின் முக்கியத்துவம் பற்றிய சிந்தனை எனலாம்.
அறிவு, உணர்ச்சிகள் இரண்டும் மனித வாழ்வின் அடிப்படையாக உள்ளன. சாதாரண மனிதனின் வாழ்க்கை அன்பு, பாசம், கோபம், வெறுப்பு என்று உணர்ச்சிகளுடன் பின்னிப் பிணைந்ததாக உள்ளது. அறிவு அவனது வாழ்க்கையில் மிகவும் அபூர்வமாகவே ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் அறிவை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்ற வேலைமட்டுமே மிகச்சிறந்த பலனைத் தருகிறது. என்று சாந்தோக்ய உபநிஷதம் கூறுகிறது.
வேலை என்றல்ல, உணர்ச்சிகள் கூட அறிவைப் பின்னணியாகக் கொள்ளும்போது மட்டுமே மனிதனைச் சரியான பாதையில் செலுத்த முடியும்.
ஓங்காரம் என்பது உலகின் ஒட்டுமொத்த அறிவின் சின்னம் அ+உ+ம் = ஓம். வாயைத் திறக்கும்போதே; அ உச்சரிக்கப்பட்டு விடுகிறது. ம் என்பதுடன் வாய் மூடப்படுகிறது. அதன்பிறகு எந்த வார்த்தையையும் உச்சரிக்க முடியாது. எனவே அனைத்து வார்த்தைகளும் ஓம் என்பதில் அடக்கம், வார்த்தையின்றி சிந்தனை இல்லை. சிந்தனையின்றி அறிவு இல்லை. எனவே ஓம் என்பது அறிவின் சின்னமாகக் கொள்ளப்படுகிறது.
5.5. பூ: என்பது பிராணன், புவ: என்பது அபானன், ஸுவ: என்பது வியானன், மஹ: என்பது உணவு, உணவினால்தான் எல்லா பிராணன்களும் இயங்கு கின்றன.
பிராணன், அபானன் போன்றவை இங்கே சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவை உடம்பிலுள்ள இயக்க சக்திகள்.
பிரபஞ்சத்தை இயக்குகின்ற பிராண சக்தியே நம்மில் நமது உடலையும் மனத்தையும் இயக்குகின்ற பிராணனாகச் செயல்படுகிறது. இந்தப் பிராணன் பத்து விதமாக நமது உடம்பையும் மனத்தையும் இயக்குவதாகக் கூறப்படுகிறது;
பிராணன் - மேல் நோக்கிய இயக்கம் அபானன் - கீழ் நோக்கிய இயக்கம் வியானன் - எல்லா பக்க இயக்கம் உதானன் - மரண வேளையில் உயிர் வெளியேற உதவுதல் ஸமானன் - உணவு ஜீரணம்; உணவை ரத்தம் போன்றவையாக மாற்றுதல் நாகன் - வாந்தி, ஏப்பம் கூர்மன் - கண் இமைகளின் இயக்கம் க்ருகலன் - பசி தேவதத்தன் - கொட்டாவி தனஞ்ஜயன் - <உடம்பிற்கு ஆரோக்கியம் அளித்தல்
எனவே இது உடம்புபற்றிய சிந்தனை எனலாம். உடம்புபற்றி ஒரு சிந்தனையா? ஆம். ஏனெனில் உடம்பு சீர்கெட்டால் உயர்ஞானம் பெற வழியில்லை
உடம்பு ஆரோக்கியமானதாக இருப்பதில் பிராணன் முதலிய சக்திகள் பெரும்பங்கு வகிக்கின்றன. சிலவேளைகளில் உங்கள் உடலில் பிராணன் ஒரு பகுதியில் அதிகமாகவோ குறைவாகவோ செல்கிறது. அப்போது சமநிலை குலைகிறது. சமநிலை குலையும்போது, நோய் என்று நாம் அழைக்கின்ற ஒன்று உண்டாகிறது. பிராணன் அதிகமான இடத்திலிருந்து அதை எடுக்கவோ, குறைந்த இடத்தில் நிரப்பவோ செய்யும்போது நோய் குணமாகிறது. என்கிறார் சுவாமி விவேகானந்தர்.