கோடான கோடிபிழை செய்யினும் என்னை நீ கொண்டா தரிக்க வேணும் குறையாத நிறைபவிசு தரவேணும் நன்மைகள் கூடியே வரவும் வேணும் தேடாமல் மேலான பேரின்ப வாழ்க்கையும் செல்வமது தரவும் வேணும் தீயரைப் பாடாமல் நின்சரணம் மீதினில் செந்தமிழ் பாட வேணும் 4
நீடாக நல்லறிவு வரவேணும் அன்னமிட நிதியும்வந்த தெய்த வேணும் நீவழித் துணையாக வரவேணும் மேலான நிறையாயுள் தரவும் வேணும் வாடா மலர்த்தரு உறங்காப்பு ளிக்குள்நிதம் வந்துவிளை யாடு முதலே வரமிகுத் திடுசிங்கை நகர்செழித் திடஎங்கும் வளர்கருப் பணசு வாமியே! 5
செல்லுந் திசைக்கெலாம் ஆதார மாகவே திடமுடன் வந்து தவுவாய்! சென்றிடு வழிக்கெல்லாம் மாறாது துணையான சேவகனு மாக வருவாய்! சொல்லு நவரசமொழுகு செந்தமிழ் படி என்று சொல்லி நீ வந்து கேட்பாய்! தூயசெந் தமிழ்மாலை சொன்னவர்க் கேபர சுகானந்த முங்கொடுப்பாய்! 6