சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கும்மியடி தமிழ்க் கும்மியடி - அந்தக்கோட்டைக் கருப்பரைக் கும்மியடி!நம்பிடக் காக்கும் தெய்வமடி! - அதுநல்லருள் தந்து வாழ்த்துமடி!திருப்புத் தூரிலே கருப்பரடி - அவர்தித்திக்க வரும் வீரரடி!உருவம் பெரிய கருப்பரடி - அவர்உள்ளம் இனிக்கும் வெள்ளமடி!வெள்ளைக் குதிரையில் கருப்பரடி - அவர்வீரம் விளைக்கும் தெய்வமடிஅள்ளக் குறையாக் கருணையடி - அவர்அண்டின பேருக் கருள்வாரடி!சுக்குமாந் தடி வெட்டருவாள் - அவர்கறுக்காய் எடுத்து நடைநடந்துஅக்கிமரச் செயல் அழிப்பாரடி! - அவர்அண்டம் குலுங்கச் சிரிப்பாரடி!குத்தீட்டி சூலம் கொண்டாடி - அவர்குதித்து மிதித்து ஓடோடி!எத்திக்கும் தீப்பொறி பரபரக்க - அவர்எக்காள மிடுவார் புவி சிறக்க!வானவெளிப் பொட்டல் அவர்வீடு! - நாம்வாழ்த்தியே நின்றோம் பண்பாடு!கான மிசைத்துக் கொட்டுங்கடி - அந்தகருப்பரைக் காண முந்துங்கடி!சேமங் குதிரைகள் சித்திரமாம் - நம்சேம நலங்களும் பத்திரமாம்நாமம் போற்றிடக் கும்மியடி - அந்தநாதத் தலைவனை நம்மியடி!இருட்டு நீக்கிய இதயத்திலே - அவர்எல்லை காட்டுவார் உதயத்திலேதிருட்டு வேலைகள் தீய்ந்திடவே - அவர்தீப்பொறி பறக்க விழித்திடுவார்மையிட்ட கருப்புத் திருமேனி - அவர்மனமிட்ட பொறுப்பு அருள்ஞானி!பொய்யிட்ட நெஞ்சில் அன்னியராம் - அவர்புகழிட்ட வாழ்வின் கன்னியராம்கோட்டைக் கருப்பரே குலதெய்வம் - அவர்வேட்டை ஆடிட வருந்தெய்வம்சேட்டை போக்கும் பெருந்தெய்வம் - அவர்காட்டைக் கலக்கும் கருந்தெய்வம்!சங்கிலிக் கருப்பரும் உடன்வருவார் - அவர்சந்தோஷ எண்ணங்கள் தான் தருவார்!பொங்கிட அருளும் புகழ்தருவார் - அவர்போற்றிடக் காத்திடும் தெய்வமம்மா!குங்குமக் காளியைக் கூப்பிடுவோம் - அவள்குறைதீர்க்க வருவாள் வாழ்த்திடுவோம்!பங்கமில்லா அவள் பார்வையிலே - பாவம்பறந்தோட காண்போம் அருளினிலே!சூலம் எடுத்தவள் மாகாளி - அவள்!சுந்தரச் சிந்து பாடுங்கடி!ஞாலம் காப்பவள் காளியம்மா! - அவள்ஞானம் காப்பவள் வாழியம்மா!செக்கச் சிவந்த சேலைகட்டி - காளிசெந்தூரப் பொட்டு நெற்றியிட்டுபக்கத்தில் வந்து காத்திடுவாள் - பக்திப்பாட்டுக்குள் சிந்தாய்ப்பூத்திடுவாள்!