Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழித் தனியன்கள்! பகுதி-2 திருமங்கையாழ்வார் அருளிச்செய்த ...
முதல் பக்கம் » இரண்டாவதாயிரம்
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழித் தனியன்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 டிச
2011
04:12

பெரிய திருமொழித் தனியன்கள்

திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்தது

கலயாமி கலித்த்வம்ஸம் கவிம் லோக திவாகரம்
யஸ்ய கோபி; ப்ரகாஸாபி: ஆவித்யம் நிஹதம்தம:

எம்பெருமானார் அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன்-வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள், மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்

ஆழ்வான் அருளிச்செய்தது

கட்டளைக் கலித்துறை

நெஞ்சுக் கிருள்கடி தீப மடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல வமுதம் தமிழநன் னூல்துறைகள்
அஞ்சுக் கிலக்கியம் ஆரண சாரம், பரசமயப்
பஞ்சுக் கனலின் பொறிபர காலன் பனுவல்களே

எம்பார் அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

எங்கள் கதியே ! இராமா னுசமுனியே
சங்கைகெடுத் தாண்ட தவராசா,-பொங்குபுகழ்
மங்கையர்கோ னீந்த மறையா யிரமனைத்தும்
தங்குமனம் நீயெனக்குத் தா

(மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று,
கோலிப் பதிவிருந்த கொற்றவனே-வேலை
அணைத்தருளும் கையா லடியேன் வினையை,
துணித்தருள வேணும் துணிந்து)

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த வேதார்த்தங்களின் ஸாரமாகிய பெரிய திருமொழி

முதற் பத்து

முதல் திருமொழி

1. வாடினேன்

அஷ்டாக்ஷரத்தின் பெருமை

அஷ்டாக்ஷர மஹாமந்திரத்தைத் திருமந்திரம் என்றும், எட்டெழுத்து என்றும் சொல்லுவதுண்டு. ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு பலனைத்தான் தரும். எல்லா மந்திரங்களும் கொடுக்கும் பலன்களைத் திருமந்திரமே கொடுக்கும். எம்பெருமான் எல்லோரையும் ரக்ஷிப்பதுபோல அவனது திருமந்திரமும் ரக்ஷிக்கிறது.

பகவானுடைய பேரருளால் அவனிடமிருந்தே திருமந்திரத்தைப் பெற்றேன். அது என் பாவத்தைப் போக்கியது. என்னைத் தெளிவடையச் செய்தது. நான் நற்கதி அடையும் தகுதியைப் பெற்றுள்ளேன். புலவர்காள்! அற்ப மனிதர்களைக் கற்பகமே! ரக்ஷகனே! என்கிறீர்கள். நாராயண நாமம் சொல்லி நற்பயன் பெறுங்கள்! சொன்னால் நன்மை; துயர் நீங்கும், அழைமின்; துஞ்சும் போதாவது அழைமின்! நாராயணா என்று கூறுங்கள் என்கிறார் திருமங்கையாழ்வார்.

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆராய்ந்து தெளிந்து அறிந்தது திருமந்திரம்

948. வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

நாட்கள் வீணாயின; இப்பொழுது தெளிந்தேன்

949. ஆவியே அமுதே எனநினைந்துருகி அவரவர்ப்பணைமுலைதுணையா,
பாவியேனுணரா தெத்தனைபகலும் பழுதுபோயொழிந்தனநாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும் சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்.

பக்தர் உள்ளத்தில் பகவான் இருப்பார் 

950. சேமமேவேண்டித் தீவினைபெருக்கித் தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய் ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள் தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.

ஆழியானருளால் கண்டுகொண்டது திருமந்திரம்

951. வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன் என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.

இரவும் பகலும் நாராயணா என்று கூறுங்கள்

952. கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன் கண்டவாதிரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன் சிக்கெனத்திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன் உடம்பெலாம்கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் நாராயணாவென்னும்நாமம்.

தஞ்சை மாமணிக்கோயிலை வணங்கு

953. எம்பிரான், எந்தை, என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு, என்னுடை வாழ்நாள்
அம்பினல் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்,
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி,
நம்பிகாள்! உண்ண நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.

திருக்குடந்தைத் திருமாலையே தொழுமின்

954. இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்இன்னதோர்த்தன்மையென்றுணரீர்
கற்பகம்புலவர்களைகணென்றூலகில் கண்டவாதொண்டரைப்பாடும்,
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின் சூழ்புனற்குடந்தையேதொழுமின்,
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின் நாராயணாவென்னும்நாமம்.

திருமந்திரமே நல்ல துணை

955. கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன் நாராயணாவென்னும்நாமம்.

எல்லாவற்றையும் தரவல்லது திருமந்திரம்

956. குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.

தீவினையை அழிக்கும் நஞ்சு திருமந்திரம்

957. மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்.

அடிவரவு: வாடினேன் ஆவி சேமம் வென்றி கள்வன் எம்பிரான் இல் கற்றிலேன் குலம் மஞ்சு- வாலி


இரண்டாந் திருமொழி

2. வாலி மாவலத்து

திருப்பிருதி

ஆழ்வார் இமயமலையிலுள்ள திருப்பிருதியில் மங்களசாஸனத்தைத் தொடங்குகிறார். இந்த திவ்யதேசத்தைப் பிரிதி, பிருதி என்று பலவாறு கூறுவர். இதனை நந்தப்ரயாகை என்றும் சொல்லுவர். தருமமே வடிவாகிய இராமனை ஸேவிக்க வேண்டுமா? திருப்பிருதி செல்லுங்கள் என்கிறார் ஆழ்வார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனமே! திருப்பிருதி செல்
 
958. வாலிமாவலத் தொருவனதுடல்கெட வரிசிலை வளைவித்து அன்று
ஏலநாறுதண்  தடம்பொழி லிடம்பெற இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகி லதிர்தர அருவரை அகடுறமுகடேறி,
பீலிமாமயில் நடஞ்செயும்தடஞ் சுனைப் பிரிதிசென்றடைநெஞ்சே.

இமயத்தேயுள்ள திருப்பிருதி சேர்
 
959. கலங்கமாக் கடலரிகுலம் பணிசெய்ய அருவரையணைகட்டி,
இலங்கைமா நகர்ப்பொடிசெய்த வடிகள்தாம் இருந்தநல்லிமயத்து,
விலங்கல்போல் வனவிற லிருஞ்சினத்தன வேழங்கள்துயர்க்கூர,
பிலங்கொள் வாளெயிற்றரிய வைதிரிதரு பிரிதிசென்றடைநெஞ்சே.

கண்ணபிரான் இருக்குமிடம் திருப்பிருதி

960. துடிகொள்  நுண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து ஆயர்
இடிகொள்  வெங்குரலின விடையடர்த்தவன் இருந்தநல்லிமயத்து,
கடிகொள் வேங்கையின்நறு மலரமளியின்மணியறை மிசைவேழம்,
பிடியினோடு வண்டிசைசொலத்துயில் கொளும் பிரிதிசென்றடைநெஞ்சே.

நெஞ்சே ! திருப்பிருதி அடை

961. மறங்கொளாளரி யுருவெனவெருவர ஒருவனதகல்மார்வம்
திறந்து வானவர்மணி முடிபணிதர இருந்தநல்லிமயத்துள்,
இறங்கியேனங்கள் வளைமருப்பிடந்திட க்கிடந்தரு கெரிவீசும்,
பிறங்குமாமணி யருவியொடிழிதரு பிரிதிசென்றடைனெஞ்சே.

திருப்பிருதியைத் தேவர்கள் தொழுகின்றனர்

962. கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல் அமரர்கள்தொழுதேத்த,
அரைசெய் மேகலையலர் மகளவளொடும் அமர்ந்தநல்லிமயத்து,
வரைசெய் மாக்களிறீள வெதிர்வளர்முளை அளைமிகுதேன்தோய்த்து,
பிரசவாரி தன்னிளம்பிடிக் கருள்செயும் பிரிதிசென்றடைநெஞ்சே.

அரவணையான் அமரும் இடம் திருப்பிருதி

963. பணங்களாயிர முடையநல்ல வரவணைப் பள்ளிகொள் பரமாவென்று,
இணங்கிவான வர்மணிமுடி பணிதர இருந்தநல்லிமயத்து,
மணங்கொள் மாதவிநெடுங் கொடிவிசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி,
பிணங்குபூம் பொழில்நுழைந்து வண்டிசை சொலும் பிரிதிசென்றடைநெஞ்சே!

தேவர்கள் ஸஹஸ்ரநாமம் சொல்லும் பிரிதி

964. கார்கொள் வேங்கைகள் கனவரைதழுவிய கறிவளர்க்கொடிதுன்னி,
போர்கொள் வேங்கைகள்புன வரைதழுவிய பூம்பொழிலிமயத்துள்,
ஏர்கொள் பூஞ்சுனைத் தடம்படிந் தினமலர் எட்டுமிட்டிமையோர்கள்,
பேர்களாயிரம் பரவிநின்றடி தொழும் பிரிதிசென்றடைநெஞ்சே.

பிரமன் முதலிய யாவரும் திருப்பிருதியை வணங்குவர்

965. இரவுகூர்ந் திருள்பெரு கியவரைமுழை இரும்பசியதுகூர,
அரவமா விக்குமகன் பொழில்தழுவிய அருவரையிமயத்து,
பரமனாதி யெம்பனிமுகில் வண்ணனென்று எண்ணிநின்றிமையோர்கள்,
பிரமனோடு சென்றடிதொழும் பெருந்தகைப் பிரிதிசென்றடைநெஞ்சே.

திருப்பிருதி சேர்ந்தோர் துயரம் நீங்கும்
 
966. ஓதியாயிர நாமங்களு ணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல்,
ஏதமின்றி நின்றருளும்நம் பெருந்தகை இருந்தநல்லிமயத்து,
தாதுமல் கியபிண்டி விண்டலர்கின்ற தழல்புரையெழில்நோக்கி,
பேதைவண்டு களெரியென வெருவரு பிரிதிசென்றடைநெஞ்சே.

இப்பாசுரங்களைப் படித்தால் வினைகள் சேரா

967. கரியமாமுகிற் படலங்கள்கிடந்து அவைமுழங்கிட,களிறென்று
பெரியமாசுணம் வரையெனப் பெயர்தரு பிரிதியெம்பெருமானை,
வரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர் கலியனதொலிமாலை,
அரியவின் னிசைபாடு நல்லடியவர்க்கு அருவினையடயாவே.

அடிவரவு: வாலி கலங்க துடி மறம் கரை பணங்கள் கார் இரவு ஓதி கரிய-முற்றமூத்து


மூன்றாந் திருமொழி

3. முற்றமூத்து

திருவதரி

இலந்தை மரங்களைப் பதரி என்பர். அவை நிறைந்த இடம் பதரிகாசிரமம். அங்குள்ள பெருமான் பத்ரிநாராயணன். இப்பகுதி பதரீ சேக்ஷத்திரத்தின் பெருமையைக் கூறுகிறது. அங்கு சென்று வருவது அருஞ்செயல். உடல் தளர்வதற்குமுன் பதரியை ஸேவித்து வாருங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பேய்ச்சியைக் கொன்றவன் வாழுமிடம் பதரி

968. முற்றமூத்துக் கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து
இற்றகால்போல் தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே.

முதுமை வருமுன் பதரியை வணங்குக
 
969. முதுகுபற்றிக்கைத்த லத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக்கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி,
இதுவென்னப்பர் மூத்தவா றென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே.

ஸஹஸ்ரநாமம் சொல்லியவாறு பதரியை வணங்கு

970. உறிகள்போல்மெய்ந்நரம் பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,
நெறியைநோக்கிக்கண் சுழன்று நின்றுநடுங்காமுன்,
அறிதியாகில்நெஞ்சம் அன்பா யாயிரநாமஞ்சொல்லி,
வெறிகொள்வண்டு பண்கள் பாடும் வதரிவணங்குதுமே.

உடல் தளராமுன் பதரியை வணங்கு

971. பீளைசோரக்கண்ணி டுங்கிப் பித்தெழமூத்திருமி
தாள்கள் நோவத்தம்மில் முட்டித் தள்ளிநடவாமுன்,
காளையாகிக்கன்று மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,
வாளைபாயும்தண்ட டஞ்சூழ் வதரிவணங்குதுமே.

கால் தடுமாறாமுன் பதரியை வணங்கு

972. பண்டுகாமரான வாறும் பாவையர்வாயமுதம்
உண்டவாறும், வாழ்ந்த வாறும் ஒக்கவுரைத்திருமி,
தண்டுகாலாவூன்றி யூன்றித் தள்ளிநடவாமுன்,
வண்டுபாடும்தண்டு ழாயான் வதரிவணங்குதுமே.

நினைவு தவறாமுன் பதரியை வணங்கு

973. எய்த்த சொல்லோ டீளையேங்கி இருமி யிளைத்துடலம்
பித்தர்போலச் சித்தம்வேறாய்ப் பேசி யயராமுன்
அத்தனெந்தை யாதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த
மைத்தசோதி யெம்பெருமான் வதரி வணங்குதுமே.

நம்மை வாழ்விப்பவன் பகவான்

974. பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப ஐக்கள்போத வுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர் மென்கொங்கை நல்லார் தாம்சிரியாதமுன்னம்,
வைப்பும் நங்கள்வாழ்வு மானான் வதரிவணங்குதுமே.

நற்கதி வேண்டுமானால் பதரி செல்க

975. ஈசிபோமினீங்கி ரேன்மின் இருமியிளைத்தீர் உள்ளம்
கூசியிட்டீரென்று பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,
நாசமானபாசம் விட்டு நன்னெறிநோக்கலுறில்,
வாசம்மல்குதண்டு ழாயான் வதரிவணங்குதுமே.

பக்தர்கள் ஆடிப்பாடும் பதரி

976. புலன்கள்நையமெய்யில் மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,
கலங்கவைக்கள்போத வுந்திக் கண்டபிதற்றாமுன்,
அலங்கலாயதண்டு ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி,
வலங்கொள்தொண்டர்ப்பாடி யாடும் வதரிவணங்குதுமே.

வைகுந்தப்பதவி கிடைக்கும்

977. வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை,
கண்டல்வேலிமங்கை வேந்தன் கலியனொலிமாலை,
கொண்டுதொண்டர்ப்பாடி யாடக் கூடிடில்நீள்விசும்பில்,
அண்டமல்லால்மற்ற வர்க்கு ஓராட்சியறியோமே.

அடிவரவு: முற்றமூத்து முதுகு உறிகள் பீளை பண்டு எய்த்த பப்ப ஈசி புலன்கள் வண்டு-ஏனம்.


நான்காந் திருமொழி

4. ஏனமுனாகி

திருவதரியாச்சிரமம் 

பதரிகாச்சிரமம் என்பதை வதரியாச்சிரமம் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார். முன்பு மலையை வணங்கினார்; இதில் நரநாரயணப் பெருமானின் பெருமைகளைக் கூறுகிறார். எம் பெருமான் நர நாராயணணாக அவதரித்தான். நாராயணனாகிய குரு நரனென்னும் சிஷ்யனுக்கு நலம் தரும் சொல்லாகிய திருமந்திரத்தை உபதேசித்த இடம் பதரிகாச்சிரமம்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேவர்கள் வணங்குமிடம் பதரி

978. ஏனமுனாகி யிருநிலமிடந்து அன்றிணையடி யிமையவர்வணங்க,
தானவனாகம் தரணியில்புரளத் தடஞ்சிலை குனித்தவெந்தலைவன்,
தேனமர் சோலைக் கற்பகம்பயந்த தெய்வநன்னறு மலர்க்கொணர்ந்து,
வானவர் வணங்கும்கங்கை யின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.

பிரமன் பகவானைத் துதிக்குமிடம் பதரி

979. கானிடையுருவைச் சுடுசரம்துரந்து கண்டுமுங்கொடுந் தொழிலுரவோன்,
ஊனுடையகலத்தடு கணைகுளிப்ப உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்,
தேனுடைக்கமலத்தயனொடுதேவர் சென்றுசென்றிறைஞ்சிட  பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.

கங்கைக் கரையில் உள்ளது பதரி

980. இலங்கையும் கடலுமடலருந்துப்பின் இருநிதிக்கிறைவனும், அரக்கர்
குலங்களும் கெடமுன் கொடுந் தொழில்புரிந்த கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற,
விலங்கலிலுரிஞ் சிமேல்நின்றவிசும்பில் வெண்துகிற்கொடி யெனவிரிந்து,
வலந்தரு மணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.

மனமே! பதரி நாராயணனைத் தொழு

981. துணிவினியுனக்குச் சொல்லுவன்மனமே. தொழுதெழுதொண்டர்கள்தமக்கு,
பிணியொழித்தமரர்ப்பெரு விசும்பருளும் பேரருளாளனெம்பெருமான்,
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் ஆரமும்வாரிவந்து,
அணிநீர் மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.

கண்ணபிரானே பதரியில் உள்ளான் 

982. பேயிடைக்கிருந்து வந்தமற்றவள்தன் பெருமுலைசுவைத்திட  பெற்ற
தாயிடைக் கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்,
சேய்முகட்டுச் சியண்டமுஞ்சுமந்த செம்பொன்செய் விலங்கலிலிலங்கு,
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.

ஏழு காளைகளை அழித்தவன் வாழுமிடம் பதரி

983. தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி திறத்து ஒருமறத்தொழில்புரிந்து,
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த பனிமுகில்வண்ணனெம்பெருமான்,
காரணந்தன்னால்கடும்புனல்கயத்தகருவரைபிளவெழக்குத்தி,
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.

அன்பர்கட்கு எதையும் தருவான் நாரணன்

984. வெந்திறல்களிறும் வேலைவாயமுதும் விண்ணொடு விண்ணவர்க்கரசும்,
இந்திரற்கருளி யெமக்குமீந்தருளும் எந்தையெம்மடிகளெம்பெருமான்,
அந்தரத்தமரரடி யிணைவணங்க ஆயிரமுகத்தினாலருளி,
மந்தரத்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.

இரணியனைப் பிளந்தவன் இருக்குமிடம் பதரி

985. மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த மன்னவன்பொன்னிறத்துரவோன்,
ஊன்முனிந்த வனதுடலிருபிளவா உகிர்நுதிமடுத்து, அயனரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.

உலகை உண்டவன் பதரி நாராயணன்

986. கொண்டல்மா ருதங்கள்குலவரைதொகுநீர்க் குரைகடலுலகுடனனைத்தும்,
உண்டமா வயிற்றோனொண் சுடரேய்ந்த உம்பருமூழியுமானான்,
அண்டமூடறுத் தன்றந்தரத்திழிந்து அங்கவனியாளலமர, பெருகு
மண்டுமா மணி நீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.

இவற்றைப் படித்தோர் அரசாள்வர்

987. வருந்திரை மணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானை,
கருங்கடல் முந்நீர்வண்ணனையெண்ணிக் கலியன்வாயொலிசெய்தபனுவல்,
வரஞ்செய்த வைந்துமைந்தும்வல்லார்கள் வானவருலகுடன் மருவி,
இருங்கடலுலக மாண்டுவெண்குடைக்கீழ் இமையவராகுவர்தாமே.

அடிவரவு: ஏனம் கான் இல்ஙகை துணிவு பேய் தேர் வெந்திறல் மான் கொண்டல் வருந்திரை-கலை


ஐந்தாந் திருமொழி

5. கலையும் கரியும்

திருச்சாளக்கிராமம்

இராமன் வாழுமிடம் சாளக்கிராமம். ஊரகம், திருக்குடந்தை, திருப்பேர்நகர் ஆகிய இடங்களில் வாழ்பவனே இங்குள்ளான். அவனை ஸேவித்து உய்வு பெறுங்கள் என்கிறார் ஆழ்வார். சாளக்கிராமத்தில் பகவான் தீர்த்தரூபியாக இருக்கிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இராமன் இருக்குமிடம் சாளக்கிராமம்

988. கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய்,
சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து,
மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன்,
தலைபத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே.

மனமே! சாளக்கிராமம் சேர்

989. கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்,
உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்,
இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்,
தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே.

எங்கும் நிறைந்தவன் எம்பெருமான்

990. உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்,
நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி
வலவன், வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்
சலவன், சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே.

அரக்கரை அழித்தவன் வாழுமிடம் சாளக்கிராமம்

991. ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,
தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான்,
பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற
தாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே.

ஆநிரை காத்தவன் வாழுமிடம் சாளக்கிராமம்

992. அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்
விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன்
கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்
தடுத்தான் தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே.

உலகளந்தான் வாழுமிடம் சாளக்கிராமம்

993. தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட
வாயான் தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை
ஏயானிரப்ப மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும் தாயான்
காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே.

நரசிம்மன் வாழுமிடம் சாளக்கிராமம்

994. ஏனோரஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை,
ஊனாரகலம் பிளவெடுத்த ஒருவன்தானே யிருசுடராய்,
வானாய்த் தீயாய்மாருதமாய் மலையாயலை நீருலகனைத்தும்
தானாய் தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே.

சாளக்கிராமம் சேர்! அருள் கிட்டும்

995. வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து ஓர்
சந்தார் தலைகொண்டு லகேழும் திரியும் பெரியோந்தான்சென்று, என்
எந்தாய்! சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில் தந்தான்,
சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே!

அனைவரும் அருள் வேண்டுமிடம் சாளக்கிராமம்

996. தொண்டாமினமுமிமையோரும் துணைநுல்மார்பினந்தணரும்,
அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம்,
வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய,
தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே.

சாளக்கிராமத்தில் ஸஹஸ்ரநாமம் சொல்லுங்கள்

997. தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை,
காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை,
ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள,
பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே.

அடிவரவு: கலை கடம் உலவு ஊரான் அடுத்து தாய் ஏனோர் வெந்தார் தொண்டாம் தாரா-வாணிலா


ஆறாந் திருமொழி

6. வாணிலா முறுவல்

நைமிசாரணியம்

நைமிசாரணியத்தில் பகவான் காடு வடிவமாகவே இருக்கிறான். தம்முடைய தாழ்வுகளை எல்லாம் கூறிக்கொண்டு பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு பகவானைச் சரணடைகிறார் பூமியில் தவம் செய்வதற்கு ஏற்ற சிறந்த இடம் எதுவென்று கேட்டனர். பிரம்மா தர்ப்பத்தைச் சக்கரமாகச் செய்து உருட்டினார். அது இக்காட்டில் வந்து நின்றது. தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இதுவே என்று அது காண்பித்தது. அதனால் நைமிசம்-அரணியம் ஆயிற்று.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எம்பெருமான் பிறவிநோய் நீக்குபவன்

998. வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன் அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான்,
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை
நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

வாழ்நாளை வீணாக்கிவிட்டேனே !

999. சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,
புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,
அலம்புரிதடக்கையாயனே மாயா! வானவர்க்கரசனே! வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

எந்தாய்! உன் திருவடிகளே சரணம்

1000. சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து,
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்,
வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த,
நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

இயமதூதர் தண்டிப்பரே! காப்பாற்று

1001. வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை,
நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்ற எற்றிவைத்து, எரியெழுகின்ற
செம்பினாலியன்றபாவையைப் பாவீ ! தழுவெனமொழிவதர்க்கஞ்சி,
நம்பனே.! வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

இரந்தவர்க்கு இல்லை என்று சொல்லாதீர்கள்

1002. இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று,
நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை,
கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால்படுவதோர் கொடுமிறைக்கஞ்சி,
நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

பரமனே! உன்னையே அடைந்தேன்

1003. கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு,
ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால், நமனார்
பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே! பாற்கடல்கிடந்தாய்!,
நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்!

நெஞ்சை விட்டுப் பிரியாதவன்

1004. நெஞ்சினால்,நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்,
துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய!.,
வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா!  தானவர்க்கென்றும் நஞ்சனே!,
வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

எந்தாய்! உன் திருவடியைச் சேர்ந்துவிட்டேன்

1005. ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு?, ஐவர்
கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா.,
பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து, என்
நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

தவஞ்செய்து நின் திருவடி சேர்ந்தேன்

1006. ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல்,
தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்,
தேனுடைக்கமலத்திருவினுக்கரசே.! திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்!,
நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

இவற்றைப் படித்தோர் தேவர்கள் ஆவர்

1007. ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று, இமையோர்
நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத் தெந்தையைச்சிந்தையுள்வைத்து,
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்,
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே.

அடிவரவு: வாணிலா சிலம்பு சூது வம்பு இடும்பை கோடிய நெஞ்சு ஏவினார் ஊனிடை ஏதம்-அங்கண்


ஏழாந் திருமொழி

7. அங்கண் ஞாலம்

சிங்கவேள் குன்றம்

சிங்கம்-வேல்-குன்றம். நரசிம்மப் பெருமான் எழுந்தருளியுள்ள மலை. அனைவரும் இந்த இடத்தை அகோபிலம் என்றே கூறுகின்றனர். எவரும் இம்மலைமீது எளிதில் ஏறி நரசிம்மனை ஸேவிக்கமுடியாது. இந்த எம்பெருமானை ஸேவிப்பவர் தீமை இன்றி வாழ்வர்.

கலி நிலைத்துறை

புனிதன் வாழுமிடம் சிங்கவேள் குன்றம்

1008. அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே.

இரணியனைக் கொன்றவன் வாழுமிடம்

1009. அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்,
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப,
சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே.

நகங்களால் இரணியனைப் பிளந்தவன் இடம்

1010. ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்,
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்,
தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே.

தேவதைகளே செல்லத்தக்க இடம்

1011. எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.

எளிதில் சென்று ஸேவிக்கமுடியாத இடம்

1012. மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே.

தேவர்கள்கூட அஞ்சும் இடம்

1013. எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று,
இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்,
நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை,
திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே.

மூவுலகும் அஞ்ச நரசிம்மாவதாரம் எடுத்தவன்

1014. முனைத்தசீற்றம் விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ் சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும் கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,
தினைத்தனையும் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.

பிரமன் முதலிய தேவர்கள் வணங்குமிடம்

1015. நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்,
காய்த்த வாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய்,
தேய்த்த தீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே.

மனமே! சிங்கவேளைத் தொழு
 
1016. நல்லைநெஞ்சே. நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான்,
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்,
நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து, அதர்வாய்ச்
சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே.

இவற்றைப் படிப்போர்க்குத் தீங்கு வராது

1017. செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய,
எங்களீசனெம்பிரானை இருந் தமிழ்நூல் புலவன்,
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்,
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே.

அடிவரவு: அங்கண் அலைத்த ஏய்ந்த எவ்வும் மென்ற எரிந்த முனைத்த நா நல்லை செங்கண்-கொங்கு


எட்டாந் திருமொழி

திருவேங்கடம்

திருவேங்கடம்: திருமலை-திருப்பதி மலை. திருமலைக்குச் செல்ல நினைப்பதும். செல்வதும் பாக்கியம். அங்கு சென்று ஸ்ரீநிவாஸானை ஸேவிப்பது பெரும் பாக்கியம். இங்கு ஸ்ரீநிவாஸன், அடியார்கள் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்து உதவுகிறார். தென்னாடும் வடநாடும் தொழநிற்கும் பெருமான் இவர். இவரைக் கண்டு அஞ்சலி செய்வதற்கே பலமணி நேரம் காத்திருக்கவேண்டும். ஆழ்வார் இம்மலையின் சிறப்பை ஈண்டுக் கூறுகிறார்.

எழுசீர்க் கழநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனமே! வேங்கடம் அடை

1018. கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான்,
சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன்,
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம், பொங்குநீர்ச்
செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே.

யாவரும் வணங்கும் இடம் வேங்கடம்

1019. பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை,
பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம்,
வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி, நாடொறும்
தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே.

கண்ணபிரானே வேங்கடத்தில் உள்ளான்

1020. நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான்,
என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான்,
கன்றிமாரிபொழிந்திடக் கடிதானிரைக்கிடர் நீக்குவான்,
சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே.

பார்த்தசாரதியே வேங்கடத்தில் நிற்பவன்

1021. பார்த்தற் காயன்றுபாரதம்கை செய்திட்டு வென்றபரஞ்சுடர்,
கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன்,
ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான்
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே.

மனமே! வேங்கடம் சேர்ந்து துயரம் நீங்கு

1022. வண்கையான வுணர்க்குநாயகன் வேள்வியில் சென்றுமாணியாய்,
மண்கையா லிரந்தான் மராமரமேழு மெய்தவலத்தினான்,
எண்கையா னிமயத்துள்ளான் இருஞ்சோலை மேவியவெம்பிரான்,
திண்கைம்மா துயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே.

நரசிம்மனே வேங்கடத்தில் நிற்பவன்

1023. எண்டிசைகளு மேழுலகமும் வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து,
பண்டோரா லிலைப்பள்ளி கொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன்,
ஒண்டிறல வுணனுரத்துகிர் வைத்தவன் ஒள்ளெயிற்றொடு
திண்டிற லரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே.

எல்லாம் ஆனவன் தங்குமிடம் வேங்கடம்

1024. பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான்,
பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம்,
காரும்வார்ப்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில்தோய்தர,
சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே.

அலர்மேல் மங்கை மணாளனின் இடம் வேங்கடம்

1025. அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன்,
வம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன்,
கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும்,
செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே.

திருமந்திரத்தை எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இரு

1026. பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,
பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்,
வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்,
தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே.

மண்ணுலகும் விண்ணுலகும் ஆள்வர்

1027. செங்கயல்திளைக்கும் சுனைத் திருவேங்கடத்துறைசெல்வனை,
மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள்,
சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே,
வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே.

அடிவரவு: கொங்கு பள்ளி நின்ற பார்த்தன் வண்கை எண்டிசை அம்பரம் பேசுமின் செங்கயல்-தாயே


ஒன்பதாந் திருமொழி

9. தாயே தந்தை

திருவேங்கடம்

ஆழ்வார் தமதுநெஞ்சை இசையவைத்தார்; திருவேங்கடமுடையானை ஸேவிக்க மலைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், ஆழ்வார் எதிர்பார்த்தபடி ஸ்ரீநிவாஸன் ஆழ்வாரை எதிர் கொண்டு அழைக்கவில்லை; கைங்கரியத்தில் ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. ஆழ்வாருக்கு வருத்தம்!

நான் பாவமே செய்து வளர்ந்துள்ளேன் அதற்காக வருந்தி உன்னிடம் வந்திருக்கிறேன், நீ சர்வரக்ஷகன், பிராட்டியும் அருளிலிருக்கிறாள். நான் செய்த குற்றங்களைப் பொறுத்து என்னை ஏற்றுக்கொள் என்கிறார் ஆழ்வார்.

கலிநிலைத்துறை

வேங்கடவா! என்னை ஆட்கொள்

1028. தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்,
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்,
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா.,
நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே.

பாவம் செய்தேன்; எனினும் பொறுத்து ஆட்கொள்

1029. மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,
நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.

குறிக்கோள் இலாதவன் நான்; எனினும் ஆட்கொள்

1030. கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,
என்றேனு மிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,
குன்றேய் மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா!,
அன்றே வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.

நல்லறம் ஒன்றும் செய்யாதவன் நான்

1031. குலந்தா னெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்,
நலந்தா னொன்றுமிலேன் நல்லதோரறம் செய்துமிலேன்,
நிலம் தோய்நீள்முகில்சேர் நெறியார்த் திருவேங்கடவா.,
அலந் தேன்வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.

பாவங்களே செய்தவன்; எனினும் என்னை அடிமைகொள்

1032. எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன்,
துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்,
செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை, என்
அப்பா! வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.

துன்பத்தினால் உடல் தளர்ந்தவன்; என்னை ஆட்கொள்

1033. மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம்,
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்,
விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா,
அண்ணா! வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.

சிறுபிள்ளைத்தனம் உள்ளவன்; என்னை ஆட்கொள்

1034. தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,
பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,
கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா!,
அரிய!. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.

உன்னைக் காண்பதற்காகவே இப்பிறப்பை ஏற்றேன்

1035. நோற்றேன் பல்பிறவி உன்னைக்காண்ப தோராசையினால்,
ஏற்றேனிப் பிறப்பே யிடருற்றனனெம் பெருமான்!,
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா!,
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.

உன்னிடம் பற்றுக் கொள்ளாதவன்; எனினும் ஆட்கொள்

1036. பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன்,
மற்றேலொன்றறியேன் மாயனே!  எங்கள்மாதவனே!,
கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா!,
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.

பாவங்கள் பறந்துவிடும்

1037. கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை,
விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை,
திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன்,
பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே.

அடிவரவு: தாயே மான் கொன்றேன் குலம் எப்பாவம் மண் தெரியேன் நோற்றேன் பற்றேல் கண்ணாய்-கண்ணார்.


பத்தாந் திருமொழி

10. கண்ணார் கடல்சூழ்

திருவேங்கடம்

என்னுடைய அகங்கார மமகாரங்களை நீக்கி, எனக்குப் பக்தியைத் தரவேண்டும். என்னிடம் கைங்கரியங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும்! என்று வேங்கடவனை வேண்டுகிறார் ஆழ்வார்.

கலி விருத்தம்

வேங்கடவா! என் துன்பங்களைப் போக்கு

1038. கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன்,
திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய்.,
விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய,
அண்ணா ! அடியேன் இடரைக்களையாயே.

திருத்துழாய் முடியாய்! அருள் செய்

1039. இலங்கைப்பதிக்கு அன்றீறையாய, அரக்கர்
குலம்கெட்டவர்மாளக் கொடிப்புள்திரித்தாய்!,
விலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய,
அலங்கல்துளபமுடியாய்! அருளாயே!

ஆரா அமுதனே! அருள் செய்

1040. நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு,
ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்!,
சீரார் திருவேங்கடமாமலைமேய,
ஆராவமுதே!அடியேற்கருளாயே!

கண்ணா! வாமனா! அருள் செய்

1041. உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக,
கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே,
விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய,
அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே!

வேங்கடவா! என்னை நினைவில் கொள்

1042. தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி,
பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்.,
சேணார் திருவேங்கடமாமலைமேய,
கோணாகணையாய! குறிக்கொள்ளெனைநீயே!

வேங்கடவன் என் நெஞ்சில் உள்ளான்

1043. மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி,
தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன்,
மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய,
என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே!

வேங்கடவா! என் மனம்தான் உன் குடியிருப்பு

1044. மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த,
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா.,
தேனே. திருவேங்கடமாமலைமேய,
கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே.

வேங்கடவன் அடியன்றி வேறொன்றையும் அறியேன்

1045. சேயனணியன் எனசிந்தையுள்நின்ற
மாயன் மணிவாளொளி வெண்டரளங்கள்,
வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய,
ஆயனடியல்லது மற்றறையேனே.

வேங்கடவா! உன்னை இனி விடமாட்டேன்

1046. வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்,
நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ.,
சிந்தாமணியே திருவேங்கடம்மேய
எந்தாய்!,இனியானுன்னை யென்றும் விடேனே.

இவற்றைப் படிப்போர் தேவர்களாவர்

1047. வில்லார்மலி வேங்கடமாமலைமேய,
மல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை,
கல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை,
வல்லாரவர் வானவராகுவர்த்தாமே.

அடிவரவு: கண் இலங்கை நீர் உண்டாய் தூணாய் மன்னா மானேய் சேயன் வந்தாய் வில்-வானவர்
************
இரண்டாம் பத்து

முதல் திருமொழி

திருவேங்கடம்

நெஞ்சே! நீ தீய வழிகளில் சென்று அவதிப்படாமல் திருவேங்கடமுடையானை அடைந்து தொண்டு செய்யும் பேறு பெற்றாயே உன்னைப் போன்ற பாக்கியசாலிகள் எவருளர்? என்று ஆழ்வார் தம் நெஞ்சைப் புகழ்கிறார்.

ஆசிரியத்துறை

அன்பருள்ளத்தில் உறைபவன் வேங்கடவன்

1048. வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே.இனிவந்து, மாதவ
மானவர் தங்கள் சிந்தையமர்ந்துறை கின்றவெந்தை,
கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள்
ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.

மனமே! வேங்கடவனுக்கே அடிமை செய்

1049. உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன் உகந்தவர் தம்மை, மண்மிசைப்
பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய்,
குறவர் மாதர்க ளோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து,
அறவ நாயகற் கின்று அடிமைத் தொழில் பூண்டாயே.

மனமே! வேங்கடவனை நினைக்கத் தொடங்கிவிட்டாயே !

1050. இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்து வாருற வோடும், வானிடைக்
கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய்,
வண்டு வாழ்வட வேங்கடமலை கோயில் கொண்டத னோடும், மீமிசை
அண்ட மாண்டிருப் பாற்கு அடிமைத்தொழில் பூண்டாயே.

வேங்கடவனை நினை; வைகுந்தம் கிடைக்கும்

1051. பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே! பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை
மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை,
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்க டமலை யாண்டு, வானவர்
ஆவி யாயிருப் பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.

எங்கும் செல்லாதே! வேங்கடவனையே சேர்

1052. பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,
தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்!
எங்கும் வானவர் தான வர்நிறைந் தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்,
அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.

தேவாதி தேவனுக்கே அடிமையாகு

1053. துவரி யாடையர் மட்டை யர்சமண் தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்,
தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய்,
கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை,
அமர நாயகறகு இன்றடிமைத் தொழில் பூண்டாயே.

வேங்கடத்தே நிற்பவனைச் சரணடை

1054. தருக்கி னால்சமண் செய்து சோறுதண் தயிரினால்திரளை,மிடற்றிடை
நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய்,
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும், வானிடை
அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே.

ஆயர் நாயகற்கு அடிமை செய்

1055. சேயனணியன் சிறியன் பெரிய னென்பது சிலர்ப்பேசக் கேட்டிருந்தே,
என் னெஞ்சமென் பாய் எனக் கொன்று சொல்லாதே,
வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி வேங்க டமலை கோயில் மேவிய,
ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.

வேங்கடக் கூத்தனுக்கு அடிமை செய்

1056. கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்நெஞ்சமென் பாய் துணிந்துகேள்,
பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா,
ஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து
ஆடு கூத்தனுக் கின்று அடிமைத்தொழில் பூண்டாயே.

இப்பாடல்களைப் பாடுவோர் தேவர் ஆவர்

1057. மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில்மேவிய,
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை,
கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம்
மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே.

அடிவரவு: வானவர் உறவு இண்டை பாவி பொங்கு துவரி தருக்கினால் சேயன் கூடி மின்னு-காசையாடை


இரண்டாந் திருமொழி

2. காசையாடை

திருஎவ்வுளூர்

சென்னைக்குச் சுமார் 25 கல் தொலைவில் உள்ளது திருவள்ளூர், இவ்வூரைத் திருவெவ்வுளூர் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். சாலிஹோத்ர முனிவருக்குப் பகவான் பிரத்யக்ஷமானான்; நான் சுகமாக வசிக்கக்கூடிய இடம் எது? (வசிப்பதற்கு உரிய உள் எவ்வுள்?) என்று கேட்டான். அதனால் இவ்வூர் எவ்வுளூர் ஆயிற்று. திரு என்பது அடைமொழி. திருவெவ்வுளூர் என்ற தொடர் மருவித் திருவள்ளூர் ஆயிற்று.

இவ்வூரில் இருக்கும் வீரராகவனே கண்ணன்; பாண்டவதூதன் சிறந்த நண்பன்; அடியார்களுக்கு இனியன்; தேவர்களின் தலைவன். இவனுடைய திருவடிகளில் மலரிட்டு வணங்கினால் உலகை ஆளும் தகுதி பெறலாம்

கலிநிலைத்துறை

கண்ணன் இருக்கும் ஊர் திருஎவ்வுளூர்

1058. காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர்,
நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்,
வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று
ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.

இராவணனைக் கொன்றவன் கிடக்கும் ஊர்

1059. தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்,
பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று
செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள,
எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.

பாண்டவ தூதன் கிடக்கும் ஊர்

1060. முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார்,
இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே.

ஏழு எருதுகளை அடக்கியவன் கிடக்கும் ஊர்

1061. பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்,
வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்,
நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்,
எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே.

ஏழுலகும் உண்டவன் கிடக்கும் ஊர்

1062. பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல்,
சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்,
நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி,
ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே.

முனிவர்கள் தொழுதேத்தும் நம்பியின் ஊர்

1063. சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்,
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-
தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.

எல்லோருக்கும் அப்பன் கிடக்கும் ஊர்

1064. திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார்
தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண்
தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற,
எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே.

அடியார்க்கு இனியன் கிடக்கும் ஊர்

1065. முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன்,
தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே.

இந்திரனுக்கும் தலைவன் கிடக்கும் ஊர்

1066. பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள்,
வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன்,
அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த,
இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.

மண்ணுலகும் விண்ணுலகும் ஆள்வர்

1067. இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை,
வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன்,
கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார்,
அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே.

அடிவரவு: காசை தையல் முன் பந்தணைந்த பாலன் சோத்தம் திங்கள் முனிவன் பந்திருக்கும் இண்டை-வில்


மூன்றாந் திருமொழி

3. விற்பெருவிழவும்

திருவல்லிக்கேணி

சென்னையில் திருவல்லிக்கேணி என்பது ஒரு பகுதி. இங்கு ஸ்ரீ பார்த்தசாரதி எழுந்தருளி இருக்கிறார். தொண்டைமான் சக்கரவர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்கித் திருவேங்கடமுடையானே கண்ணனாகக் குடும்பத்தோடு ஸேவை சாதித்தார் என்பது வரலாறு. அதனால் மூலவருக்கு வேங்கடகிருஷ்ணன் என்று திருநாமம். இவர் பார்த்தசாரதி திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்.

எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அருச்சுனன் தேர்த்தட்டில் நின்றவன்

1068. விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் றன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றன் தேர்முன்நின் றானை,
சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

என்னையாளுடையப்பன் தங்கும் இடம்

1069. வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும்,
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத் தோர்தொழு தேத்தும்,
ஆதியை யமுதை யென்னை யாளுடை அப்பனை ஒப்பவ ரில்லா
மாதர்கள் வாழும், மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

அமுதமளித்தவன் வாழும் இடம் திருவல்லிக்கேணி

1070. வஞ்சனை செய்யத் தாயுரு வாகி வந்தபே யலறிமண் சேர,
நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை,
விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து துதிசெய்யப் பெண்ணுரு வாகி,
அஞ்சுவை யமுத மன்றளித் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

கோவர்த்தன மலையால் மழை தடுத்தவன் தங்கும் இடம்

1071. இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த எழில்விழ வில்பழ நடைசெய்,
மந்திர விதியில் பூசனை பெறாது மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்
அந்தமோ டினவா நிரைதள ராமல் எம்பெரு மானரு ளென்ன,
அந்தமில் வரையால் மழைதடுத் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

நப்பின்னையின் மணாளன் தங்கும் இடம்

1072. இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும் இன்பன்நற் புவிதனக் கிறைவன்,
தந்துணை யாயர் பாவைநப் பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம்
வன்துணை, பஞ்ச பாண்டவர்க் காகி வாயுரை தூதுசென் றியங்கும்
என்துணை எந்தை தந்தைதம் மானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

பாஞ்சாலிக்கு அருள் செய்தவன் தங்கும் இடம்

1073. அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற் கிளையவ னணியிழை யைச்சென்று,
எந்தமக் குரிமை செய் எனத் தரியாது எம்பெரு மானருள் என்ன,
சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம் பெண்டிரு மெய்திநூ லிழப்ப,
இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

இராவணனை வதைத்தவன் வாழும் இடம்

1074. பரதனும் தம்பி சத்துருக் கனன்னும் இலக்கும னோடுமை திலியும்
இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந் தகனையெம் மானை,
குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு குயிலொடு மயில்கள்நின் றால,
இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

பிரகலாதனுக்கு அருளியவன் தங்கும் இடம்

1075. பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்,
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்,
தெள்ளிய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

கஜேந்திரன் துயர் தீர்த்தவன் தங்கும் இடம்

1076. மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

இச்சொல்மாலை படித்தோர் தேவருலகு ஆள்வர்

1077. மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும் மாடமா ளிகையும் மண் டபமும்,
தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத் திருவல்லிக் கேணிநின் றானை,
கன்னிநன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க்கலி கன்றி,
சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர்வா னுலகே.

அடிவரவு: வில் வேத வஞ்சனை இந்திரன் இன் அந்தகன் பரதன் பள்ளி மீனமர் மன்னு-அன்றாயர்.


நான்காந் திருமொழி

4. அன்றாயர்

திருநீர் மலை

இப்பகுதி திருநீர்மலை எம்பெருமானைக் குறிக்கிறது. மலையைச் சுற்றி நீர் அரணாக அமைந்துள்ளபடியால், இவ்வூரிலுள்ள மலை நீர்மலையாயிற்று. மலையின் பெயரே ஊருக்கும் ஏற்பட்டது. இங்கிருக்கும் பகவானுக்கு நீர்வண்ணன் என்று திருநாமம்.

நாச்சியார் கோவில் என்ற ஊருக்குச் சென்றால், நின்ற திருக்கோலத்தில் பகவானைச் சேவிக்கலாம்; திருவாலிக்குச் சென்றால் உட்கார்ந்திருக்கும் பெருமாளைச் சேவிக்கலாம். திருக்குடந்தையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளைச் சேவிக்கலாம். திருக்கோவிலூரில் உலகளந்த திருக்கோலத்தில் சேவிக்கலாம். இவ்வூரில் இந்த நால்வகைத் திருக்கோலத்துடன் பெருமாளைச் சேவிக்கலாம். இவ்வூரிலுள்ள தாயாருக்கு அணிமாமலர் மங்கை என்று திருநாமம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நால்வகைத் திருக்கோலங் கொண்டவன் இடம்

1078. அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க்
கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ்
நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,
நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

வாமனனாகவும் திரிவிக்கிரமனாகவும் ஆனவன் இடம்

1079. காண்டாவன மென்பதொர் காடமரர்க் கரையனது கண்டவன் நிற்க,முனே
மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும் அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த்
தாண்டான்,அவுணனவன் மார்வகலம் உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய்
நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

சக்கரத்தால் சூரியனை மறைத்தவன் இடம்

1080. அலமன்னு மடல்சுரி சங்கமெடுத் தடலாழியி னாலணி யாருருவில்,
புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறைதீரமு னாளடு வாளமரில்,
பலமன்னர் படச்சுட ராழியினைப் பகலோன்மறை யப்பணி கொண்டு,அணிசேர்
நிலமன்னனு மாயுல காண்டவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

திரவுபதியின் மானம் காத்தவன் இடம்

1081. தாங்காததோ ராளரி யாயவுணன் றனைவீட முனிந்தவ னாலமரும்,
பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத் ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்,
பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப் பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட,
நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

இராவணன் முடிபத்தும் அறுத்தவன் மலை

1082. மாலுங்கட லாரம லைக்குவடிட் அணைகட்டி வரம்புருவமதிசேர்
கோலமதி ளாயவி லங்கைகெடப் படைதொட்டொரு காலம ரிலதிர,
காலமிது வென்றயன் வாளியினால் கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்,
நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

நெடுமாலுக்கு இடம் திருநீர்மலை

1083. பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்
காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்
பேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,
நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

பவுண்ட்ரக வாசுதேவனை அழித்தவன் மலை

1084. புகராருரு வாகிமுனிந்தவனைப் புகழ்வீட முனிந்துயி ருண்டு,அசுரன்
நகராயின பாழ்பட நாமமெறிந்ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன்,
பகராதவ னாயிர நாமமடிப் பணியாதவ னைப்பணி யாமலரில்,
நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

தன்னை நினைப்பவருக்கு அருள் செய்பவன் மலை

1085. பிச்சச்சிறு பீலிபி டித்துலகில் பிணந்தின்மடவாரவர் போல்,அங்ஙனே
அச்சமிலர் நாணில ராதன்மையால் அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய்,
நச்சிநம னாரடை யாமைநமக் கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு,
நிச்சம்நினை வார்க்கருள் செய்யுமவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

பாவத்தை அழிக்கும் திருநீர்மலை

1086. பேசுமள வன்றிது வம்மின்நமர்! பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள்,
நாசமது செய்திடும் ஆதன்மையால் அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல்
வாசமணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்துழல் வார்,மதியில்
நீசரவர் சென்றடை யாதவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே!

பக்தியுள்ள அரசராகிப் பரமனடி சேர்வர்

1087. நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில்
கடமாகளி யானைவல்லான் கலியன் ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு,
உடனே விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்,
கொடுமாகடல் வையக மாண்டுமதிக் குடைமன்னவ ராயடி கூடுவரே.

அடிவரவு: அன்று காண்டா அலம் தாங்காத மால் பார் புகர் பிச்சம் பேசு நெடுமால்-பாராயது.


ஐந்தாந் திருமொழி

5. பாராயது

திருக்கடல் மல்லை

மாமல்லபுரத்திற்குத் திருக்கடல்மல்லை என்று பெயர். இவ்வூரில் பகவான் தரையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். அதனால் அவருக்கு ஸ்தலசாயீ என்று திருநாமம். புண்டரீகர் என்ற மகரீஷி ஒருவர் இருந்தார். அவர் பக்தியோடு கொண்டு வந்த மலரை அணிந்துகொள்ள பகவான் விரும்பினான். அதனால் பாற்கடலில் பாம்பணையை விட்டு இங்கு வந்து கடற்கரையில் பள்ளி கொண்டான். அடியார்களிடம் அன்பு கொண்டவனன்றோ அவன்! உத்ஸவருக்கு உலகுய்ய நின்றான் என்று திருநாமம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருக்கடல் மல்லையில் திருமாலைக் கண்டேன்

1088. பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப் பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட
சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,
போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,
காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.

காண்டவ வனம் எரித்தவன் கடல்மல்லையில் உள்ளான்
 
1089. பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி
மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.

உலகுய்ய நின்றான் இடம் கடல்மல்லை

1090. உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே.

கண்ணபிரான் ஊர் கடல்மல்லை

1091. பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப் பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்னோக்கின்,
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே
கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

மல்லரைக் கொன்றவன் ஊர் கடல்மல்லை

1092. பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்
காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

வராகாவதாரம் எடுத்தவன் வாழ்விடம் கடல்மல்லை

1093. கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக் கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற
இடந்தானை, வளைமருப்பி னேனமாகி இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

நினைப்பவரின் உள்ளத்தில் நிலையாக வாழ்பவன்

1094. பேணாத வலியரக்கர் மெலியவன்று பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை,
பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப் பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை,
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே.

கமலக்கண்ணன் இடம் கடல்மல்லை

1095. பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,
என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

வேதங்கள் கண்டவனைக் கடல்மல்லையில் காணலாம்

1096. தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,
பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும் கண்டானை,
தொண்டனேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

தீவினைகளின் வேர் அறும்

1097. படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,
தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,
கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,
திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ.

அடிவரவு: பார் பூண்ட உடம்பு பேய் பாய் கிடந்தான் பேணாத பெண் தொண்டு படம்-நண்ணாத.


ஆறாந் திருமொழி

6. நண்ணாத

திருக்கடல் மல்லை

பகவத் பக்தியின் எல்லை நிலம் பாகவத பக்தி. தலசயனத்து உறைவாரை எண்ணும் பாகவதர்களே தமக்குத் தலைவர்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். கடல்மல்லை பெருமையுடையது. தலசயனத் தெம்பெருமான் மிகவும் பெருமை கொண்டவன். அவனையே நினைக்கும் அடியார்கள் பெருமையால் உயர்ந்தவர்கள். அவர்கள் எப்பொழுதும் பகவானையே வணங்குகிறவர்கள். அவர்களுக்கு அடியவராக இருப்பதே தமக்கு ஏற்றம் என்று எண்ணுகிறார் ஆழ்வார்.

தரவு கொச்சகக் கலிப்பா

தலசயனப் பெருமாளை நினையாதவரை மதியோம்

1098. நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு, வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார், மருவினிய
தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை,
எண்ணாதே யிருப்பாரை யிறைப்பொழுது மெண்ணோமே.

தலசயனத்தை நினைப்பாரே எம்மை ஆள்பவர்

1099. பார்வண்ண மடமங்கை பனிநன்மா மலர்க்கிழத்தி,
நீர்வண்ணன் மார்வகத்தி லிருக்கையைமுன் நினைந்தவனூர்,
கார்வண்ண முதுமுந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம்,
ஆரெண்ணும் நெஞ்சுடையா ரவரெம்மை யாள்வாரே.

தலசயனப் பெருமாளை நினைவார் எம் நாயகர்

1100. ஏனத்தி னுருவாகி நிலமங்கை யெழில்கொண்டான்,
வானத்தி லவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத் துறைகின்ற,
ஞானத்தி னொளியுருவை நினைவாரென் நாயகரே.

தலசயனரைக் கொண்டாடுவோரே எம் குலதெய்வம்

1101. விண்டாரை வென்றாவி விலங்குண்ண, மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையா ரவரெங்கள் குலதெய்வமே.

மனமே! தலசயனம் தொழுவாரையே விரும்பு

1102. பிச்சச் சிறுபீலிச் சமண்குண்டர் முதலாயோர்,
விச்சைக் கிறையென்னு மவ்விறையைப் பணியாதே,
கச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,
நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே.

மனமே! தலசயனர் பக்தர்களைப் பிரதட்சிணம் செய்

1103. புலன்கொள்நிதிக் குவையோடு புழைக்கைமா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும் சுமந்தெக்கும் நான்றொசிந்து,
கலங்களியங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்,
வலங்கொள்மனத் தாரவரை வலங்கொள்ளென் மடநெஞ்சே.

மனமே! தலசயனம் தொழுவாரையே தொழு

1104. பஞ்சிச் சிறுகூழை யுருவாகி, மருவாத
வஞ்சப்பெண் நஞ்சுண்ட அண்ணல்முன் நண்ணாத,
கஞ்சைக் கடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே.

தலசயனரின் அன்பர்களையே தொழ வேண்டும்

1105. செழுநீர் மலர்க்கமலம் திரையுந்த வன்பகட்டால்,
உழுநீர் வயலுழவ ருழப்பின்முன் பிழைத்தெழுந்த,
கழுநீர் கடிகமழும் கடன்மல்லைத் தலசயனம்,
தொழுநீர் மனத்தவரைத் தொழுவாயென் தூயநெஞ்சே.

சிவனோடு வாழும் திருமால் பக்தரை வணங்கு

1106. பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு,
இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்,விசும்பில்
கணங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம்,
வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே.

இவற்றைப் படிப்போர் அரசர்க்கரசராவர்

1107. கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து,
அடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான்,
வடிகொள்நெடு வேல்வலவன் கலிகன்றி யொலிவல்லார்,
முடிகொள்நெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே.


ஏழாந் திருமொழி

7. திவளும்

திருவிடவெந்தை

திருக்கடல்மல்லைக்கு அருகில் இருக்கும் திவ்வியதேசம் திருவிடவெந்தை. இவ்வூரை இப்போது திருவிடந்தை என்றே கூறுகிறார்கள். இங்கிருக்கும் வராகப் பெருமாள் இடப்பக்கத்தே பூதேவியைத் தாங்கி நிற்கிறார். உத்ஸவருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்று திருநாமம். பகவானின் கல்யாண குணங்களில் ஈடுபட்ட ஆழ்வார், தாமே தாயாகவும் மகளாகவும் இருந்துகொண்டு, தாய் தன் மகளின் நிலையைப் பகவானிடம் கூறுவதுபோல் இங்கே கூறி அனுபவிக்கிறார்.

தலைவியின் ஆற்றாமையைக் கண்டு தாய் இரங்குதல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பிரானே! என் மகள் நின்னையே விரும்புகிறாள் 

1108. திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை செழுங்கட லமுதினிற் பிறந்த
அவளும்,நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசைவி டாளால்,
குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லுநின் தாள்நயந் திருந்த
இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

பிரானே! என் மகள் உன்னை நினைந்தே ஏங்குகின்றாள்

1109. துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள்,
குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள்,
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள்,
இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

பிரானே! என் மகள் உன் நினைவால் இளைத்தாள்

1110. சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம்,
போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும் பொருகடல் புலம்பிலும் புலம்பும்,
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறைநில்லா, என்தன்
ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

பிரானே! உன்னை நினைந்து புலம்புகிறாள் என்மகள்

1111. ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும் ஒண்சுடர் துயின்றதால் என்னும்,
ஆழியும் புலம்பும். அன்றிலு முறங்கா தென்றலும் தீயினிற் கொடிதாம்,
தோழியோ. என்னும் துணைமுலை யரக்கும் சொல்லுமி னென்செய்கேன் என்னும்,
ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

பிரானே! உன்னை நினைந்து உருகுகிறாள் என் மகள்

1112. ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள் உருகும்நின் திருவுரு நினைந்து,
காதன்மை பெரிது கையற வுடையள் கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்,
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்,
ஏதலர் முன்னா என்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

பிரானே! என் மகள் திறத்தே என்ன செய்யப்போகிறாய்?

1113. தன்குடிக் கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயி லிலங்கை,
வன்குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தைகேட் டின்புறும் மயங்கும்,
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி மென்முலை பொன்பயந் திருந்த,
என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே

பிரானே! உன் புகழே பேசுவாள் என் மகள்

1114. உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால்,
வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை மாயனே! என்றுவாய் வெருவும்,
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோ டவலம்சேர்ந் திருந்த,
இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

பிரானே! நின்னிடம் மயங்குகிறாள் என் மகள்

1115. அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும்,
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி,
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

உனது நினைவால் என் மகளின் உருவம் மாறியது

1116. பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள் பொருகயல் கண்துயில் மறந்தாள்,
அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ ணங்கினுக் குற்றநோ யறியேன்,
மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி வீங்கிய வனமுலை யாளுக்கு,
என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

இவற்றைப் பாடுவோர் பழவினை நீங்கும்

1117. அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆயஎம் மாயனே !அருளாய்,
என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை,
மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே!

அடிவரவு: திவளும் துளம் சாந்தம் ஊழி ஓதிலும் தன் உளம் அலம் பொன் அன்னம்-திரிபுரம்


எட்டாந் திருமொழி

8. திரிபுரம்

திருவட்டபுயகரம்

அட்டபுயகரம் என்ற திவ்வியதேசம் சின்ன காஞ்சீபுரத்தில் இருக்கிறது. இங்கிருக்கும் பகவான் அட்டபுயகரத்தான். தம்மைத் தலைவியாகவும், பகவானைத் தலைவனாகவும் பாவித்துப் பாடுகிறார் ஆழ்வார்.

தலைவனது உருவை மனக்கண்ணால் கண்ட தலைவி தோழிக்கும் தாயர்க்கும் கூறல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அட்டபுயகரத்தான் எனக்குக் காட்சி தந்தான்

1118. திரிபுர மூன்றெரித் தானும்மற்றை மலர்மிசை மேலய னும்வியப்ப,
முரிதிரை மாகடல் போல்முழங்கி மூவுல கும்முறை யால்வணங்க,
எரியன கேசர வாளெயிற்றோ டிரணிய னாக மிரண்டுகூறா,
அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

புலவர் வணங்கும் புனிதரைக் கண்டேன்

1119. வெந்திறல் வீரரில் வீரரொப்பார் வேத முரைத்திமை யோர்வணங்கும்,
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும் தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன்,
வந்து குறளரு வாய்நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த,
அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

நான் கண்டவர் அட்டபுயகரத்தாரே

1120. செம்பொ னிலங்கு வலங்கைவாளி திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்,
உம்ப ரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே,
வெம்பு சினத்தடல் வேழம்வீழ வெண்மருப் பொன்று பறித்து,இருண்ட
அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

பரஞ்சோதியாக இருப்பவரை நான் கண்டேன்

1121. மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி மாமழை காத்தொரு மாயவானை
யஞ்ச,அதன்மருப் பொன்றுவாங்கும் ஆயர்கொல் மாய மறியமாட்டேன்,
வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி வேதமு னோதுவர் நீதிவானத்து,
அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

அலைகடல் போன்றவரை நான் கண்டேன்

1122. கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள் தானும்,மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையி னாலருள் செய்து,நீண்ட
மலைகளும் மாமணி யும்மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற,
அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

நீலமேகம் போன்றவரை நான் கண்டேன்

1123. எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் ஏது மறிகிலம், ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவுமெல்லாம் தம்மன வாகப் புகுந்து,தாமும்
பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம்,
அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

அழகிய ஓவியம் போன்றவரை நான் கண்டேன்

1124. முழுசிவண் டாடிய தண்டுழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும், மேனியஞ்சாந்
திழிசிய கோல மிருந்தவாறும் எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார்,
எழுதிய தாமரை யன்னகண்ணும் ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்,
அழகிய தாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

எனது உயிர் போல்பவரைக் கண்டேன்

1125. மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க வேத முரைப்பர்முந் நீர்மடந்தை
தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால் சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்,
காவியொப் பார்க்கட லேயுமொப்பார் கண்ணும் வடிவும் நெடியராய்,என்
ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

யாரென்று அறியமுடியாதவரைக் கண்டேன்

1126. தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு,
வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி வாய்திறந் தொன்று பணித்ததுண்டு,
நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம் நானிவர் தம்மை யறியமாட்டேன்
அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

இவற்றைப் பாடுவோர்க்கு இடம் வைகுந்தம்தான்

1127. மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன்,
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயகரத் தாதிதன்னை,
கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சீர்க்கலி கன்றி,குன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.


ஒன்பதாந் திருமொழி

9. சொல்லு

பரமேச்சுர விண்ணகரம்

பெரிய காஞ்சீபுரத்தில் வைகுந்தப் பெருமாள் சன்னதி இருக்கிறது. ஆழ்வார் அதைப் பரமேச்சுவர விண்ணகரம் என்று கூறுகிறார். பல்லவ மன்னன் இக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறான். எனவே, இம்மன்னனையும் சேர்த்துப் புகழ்கிறார் ஆழ்வார்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பல்லவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம்

1128. சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை யூறொலி நாற்றமும் தோற்றமுமாய்,
நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
பல்லவன் வில்லவ னென்றுலகில் பல ராய்ப்பல வேந்தர் வணங்குகழற்
பல்லவன், மல்லையர் கோன்பணிநத பர மேச்சுர விண்ணக ரமதுவே.

பாண்டியனைவென்ற பல்லவன் பணிந்த கோயில் இது

1129. கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுடரும் நில னும்மலை யும்,தன்னுந்தித்
தார்மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,
தேர்மன்னு தென்னவ னைமுனையில் செரு வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,
பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.

பாம்பணைப் பள்ளிகொண்டவன் இடமே இக்கோயில்

1130. உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மாவுரு வாய்க்கடலுள்,
வரந்தரும் மாமணி வண்ணனிடம் மணிமா டங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு வாயி லுகச்செரு வில்முனநாள்,
பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே.

உலகம் உண்டவன் இடம் இக்கோயில்தான்

1131. அண்டமு மெண்டிசை யும்நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா
உண்டவன், எந்தைபி ரானதி டமொளி மாடங்கள் சூந்தழ காயகச்சி,
விண்டவ ரிண்டைக்கு ழாமுடனே விரைந் தாரிரி யச்செரு வில்முனைந்து,
பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே.

தென்னவனை வென்றவன் பணிந்த கோயில் இது

1132. தூம்புடைத் திண்கைவன் தாள்களிற்றின் துயர் தீர்த்தர வம்வெருவ,முனநாள்
பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப் பச்செரு மேல்வியந் தன்றுசென்ற,
பாம்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.

பல்லவர்கோன் பணிந்த கோயில் இது

1133. திண்படைக் கோளரி யினுரு வாய்த் திறலோனக லம்செரு வில்முனநாள்,
புண்படப் போழ்ந்த பிரானதிடம் பொரு மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த,
பண்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.

கருவூர் வென்றவன் பணிந்த கோயில் இது

1134. இலகிய நீண்முடி மாவலி தன்பெரு வேள்வியில் மாணுரு வாய்முனநாள்,
சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மாமதிள் சூழ்கரு வூர்வெருவ,
பலபடை சாயவென் றான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே.

நென்மெலி வென்ற பல்லவன் பணிந்த கோயில்

1135. குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா,மலை யால்கடலை
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
விடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த,
படைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.

ஏழு எருதுகளை அடக்கியவன் இடம் இக்கோயில்

1136. பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின்,
மறையுடை மால்விடை யேழடர்த்தாற் கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
கறையுடை வாள்மற மன்னர்க்கெடக் கடல் போல முழங்கும் குரல்கடுவாய்,
பறையுடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.

இவற்றைப் படிப்போர் திருமகள் அருள் பெறுவர்

1137. பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர்கோன் பணிந் தபர மேச்சுர விண்ணகர்மேல்,
கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை வன்கலி கன்றிகுன் றாதுரைத்த,
சீர்மன்னு செந்தமிழ் மாலைவல்லார்த் திரு மாமகள் தன்னரு ளால்,உலகில்
தேர்மன்ன ராயொலி மாகடல்சூழ் செழு நீருல காண்டு திகழ்வர்களே.

அடிவரவு: சொல்லுவன் கார் உரம் அண்டம் தூம்பு திண் இலகிய குடை பிறை பார்-மஞ்சாடு.


பத்தாந் திருமொழி

10. மஞ்சாடு

திருக்கோவலூர்

தொண்டை நாட்டுத் திருப்பதிகளை அனுபவித்த ஆழ்வார் நடுநாட்டுத் திருப்பதிகளை அனுபவிக்கிறார். இப்பகுதியில் திருக்கோவலூர் கூறப்படுகிறது. கோபாலன் என்கிற சொல் கோவலன் எனத் திரிந்தது. கோபாலன் எனப்படும் ஆயன் எழுந்தருளியிருக்கும் தலம் இது. அதனால் திருக்கோவலூர் எனப் பெயர் பெற்றது. முதலாழ்வார்கள் மூவரும் ஒன்று சேர்ந்த இடம் திருக்கோவலூர். தக்ஷிண பிநாகிநீ எனப்படும் தென்பெண்ணையாறு பாயப்பெற்று வளம் நிறைந்த இடமாக இருக்கிறது இவ்வூர்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆலிலைத் துயின்றான் திருக்கோவலூரில் உள்ளான்

1138. மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும் வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்,
எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர் இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை,
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான் மறையாளர் சோமுச் செய்ய,
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

நான்மறைகள் எப்பொழுதும் சிந்தனை செய்யும் இடம் இது

1139. கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம்கொண் டமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில்,
சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை தாமிருவ ரடிவருடும் தன்மை யானை,
வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்,
சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன்நானே.

கஜேந்திரனுக்கு அருள்செய்தவன் இடம் இது

1140. கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி,
அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை,
எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட,
செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

அடியார்களின் ஆரமுது தங்கும் இடம் இது

1141. தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை,
ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும் அடியவர்கட் காரமுத மானான் றன்னை,
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக் குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

வேதங்களை வளர்க்கும் இடம் இது

1142. கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள்,
பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம் பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை,
மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும் மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத,
சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

கண்ணனைத் திருக்கோவிலூரில் கண்டேன்

1143. உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங் குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க,
தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை,
வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு, வியன்கலையெண் தோளினாள் விளங்கு, செல்வச்
செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

கம்சனுக்கு நஞ்சானவன் இருக்கும் இடம்

1144. இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து,
வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை,
கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட,
செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

பார்த்தசாரதியாக விளங்கியவன் தங்கும் இடம்

1145. பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி, பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறலழியச் செற்றான்றன்னை,
போரேறொன் றுடையானு மளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல்,
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

அருள்புரியும் கற்பகமரம் போன்றவனைக் கண்டேன்

1146. தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற,
காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை,
சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை,
தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

இவற்றைப் படித்தோர் பரமனைக் காண்பர்

1147. வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை,
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று
வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,
காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக் கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே.

அடிவரவு: மஞ்சாடு கொந்து கொழுந்து தாங்கு கறை உறி இருங்கை பார் தூவடிவு வாரணம்-இருந்தண்
**************
மூன்றாம் பத்து

முதல் திருமொழி

1. இருந்தண்

திருவயிந்திரபுரம்

திருக்கோவலூரைப் போல் திருவயிந்திரபுரமும் நடுநாட்டுத் திருப்பதியாகும். இங்கு தெய்வநாயகப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீ ஹயக்ரீவன் சன்னதியும், ஸ்ரீதேசிகன் சன்னதியும் இங்கு இருக்கின்றன. ஸ்ரீ வேதாந்ததேசிகருக்கு ஸ்ரீ ஹயக்ரீவன் பிரத்தியட்சமான இடமும் இதுவே. அமைதியும் ஞானமும் கொடுக்கும் ஊர் இது; ஆதிசேஷனின் பெயரால் ஏற்பட்ட ஊர். அஹீந்திரபுரம் என்பது அயிந்திரபுரம் என்றாயிற்று. அயிந்தை என்றும் கூறுவதுண்டு.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வராகாவதாரம் எடுத்தவன் ஊர் திருவயிந்திரபுரம்

1148. இருந்தண் மாநில மேனமதாய் வளை மருப்பினி லகத்தொடுக்கி,
கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம் கமலநன் மலர்த்தேறல்
அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளியம் பொழிலூடே,
செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு திருவயிந் திரபுரமே.

நான்மறைப் பொருளாக இருப்பவன் ஊர் இது

1149. மின்னு மாழியங் கையவன் செய்யவள் உறைதரு திருமார்பன்,
பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய பரனிடம் வரைச்சாரல்,
பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப் பிணியவிழ் கமலத்து,
தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு திருவயிந் திரபுரமே.

தெய்வநாயகன் இடம் திருவயிந்திரபுரம்

1150. வைய மேழுமுண் டாலிலை வைகிய மாயவன், அடியவர்க்கு
மெய்ய னாகிய தெய்வநா யகனிடம் மெய்தகு வரைச்சாரல்,
மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லையங் கொடியாட,
செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு திருவயிந் திரபுரமே.

இரணியனைப் பிளந்தவன் இடம் திருவயிந்திரபுரம்

1151. மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன் மார்பக மிருபிளவா,
கூறு கொண்டவன் குலமகற் கின்னருள் கொடுத்தவ னிடம்,மிடைந்து
சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை விசும்புற மணிநீழல்,
சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ் திருவயிந் திரபுரமே.

ஏழு எருதுகளை அடக்கியவன் இடம் இது

1152. ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட மளந்து ஆயர்,
பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம் பொன்மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் இரைத்தோடி
தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு திருவயிந் திரபுரமே.

இராமன் தங்கும் இடம் திருவயிந்திரபுரம்

1153. கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் திறத்திளங் கொடியோடும்,
கானு லாவிய கருமுகில் திருநிறத் தவனிடம் கவினாரும்,
வானு லாவிய மதிதவழ் மால்வரை மாமதிள் புடைசூழ,
தேனு லாவிய செழும்பொழில் தழுவிய திருவயிந் திரபுரமே.

இராவணனைக் கொன்றவன் இடம் இது

1154. மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசையிலங்கை
மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன திடம்மணி வரைநீழல்,
அன்ன மாமல ரரவிந்தத் தமளியில் பெடையொடு மினிதமர,
செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண் திருவயிந் திரபுரமே.

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தவன் இடம் இது

1155. விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில்லிறுத்து அடல்மழைக்கு,
நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் நிலவிய இடம்தடமார்,
வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு மலைவள ரகிலுந்தி,
திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே.

அருச்சுனனுக்குத் தேரோட்டியவன் இடம் இது

1156. வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில் விசயனுக் காய்,மணித்தேர்க்
கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம் குலவுதண் வரைச்சாரல்,
கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம் பாளைகள் கமழ்சாரல்,
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே

பாடினால் பாவங்கள் பறந்துவிடும்

1157. மூவ ராகிய வொருவனை மூவுல குண்டுமிழ்ந் தளந்தானை,
தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண் திருவயிந் திரபுரத்து,
மேவு சோதியை வேல்வல வன்கலி கன்றி விரித்துரைத்த,
பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே.

அடிவரவு: இருந்தண் மின்னும் வையம் மாறு ஆங்கு கூன் மின்னின் விரை வேல் மூவர்-ஊன் வாட.


இரண்டாந் திருமொழி

2. ஊன் வாட

திருச்சித்திரகூடம்-1

தில்லைநகர் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குள்ளே இக்கோயிலும் உள்ளது. ஸ்ரீவைஷ்ணவர்கள் சிதம்பரத்தைச் சித்திரகூடம் என்றே சொல்லுவார்கள். இக் கோயிலில் கோவிந்தராஜர் எழுந்தருளியிருக்கிறார். உடம்பை உலர்த்திக் காய்கனி இலைகளை உண்டு, தண்ணீரிலும், காடுகளிலும், மலைகளிலும் தவம் செய்து மோட்சத்தை அடைய விரும்புகிறீர்களே! ஏன் இவ்வளவு துன்பம்? சித்திரகூடத்திற்குச் சென்றாலே போதும். நீங்கள் விரும்பும் பயனை மிக எளிதில் பெறலாம் என்று ஆழ்வார் கூறுகிறார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தவம் செய்யவேண்டாம்; சித்திரகூடம் செல்லுங்கள்

1158. ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து,
தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா தமதா இமையோ ருலகாள கிற்பீர்
கானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்,
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

தவம் வேண்டா; திருவாழ்மார்வனை நினையுங்கள்

1159. காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து
தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா திருமார்பனைச் சிந்தை யுள்வைத்து மென்பீர்,
வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த,
தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

பல்லவர்கோன் பணிந்த சித்திரகூடம் செல்லுங்கள்

1160. வெம்பும் சினத்துப் புனக்கேழ லொன்றாய் விரிநீர் முதுவெள்ள முள்புக் கழுந்த,
வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான் அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர்,
பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து படைமன்னவன்பல் லவர்க்கோன் பணிந்த,
செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

உலகளந்தவனின் திருநாமங்களைச் சொல்லுங்கள்

1161. அருமா நிலமன் றளப்பான் குறளாய் அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த,
பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம் பிறவித் துயர்நீங்கு துமென்ன கிற்பீர்!
கருமா கடலுள் கிடந்தா னுவந்து கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல்,
திருமால் திருமங் கையொடாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

பரசுராமனாக அவதரித்தவனே கோவிந்தராஜன்

1162. கோமங்க வங்கக் கடல்வைய முய்யக் குலமன்ன ரங்கம் மழுவில் துணிய,
தாமங் கமருள் படைதொட்ட வென்றித் தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர்,
பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப் புகழ்மங்கை யெங்கும் திகழப்புகழ்சேர்
சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

கிளிகளும் வேதவொலி செய்யும் சித்திரகூடம்

1163. நெய்வா யழலம் புதுரந்து முந்நீர் துணியப் பணிகொண் டணியார்ந்து,இலங்கு
மையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம் மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர்,
அவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான் அருமா மறையந் தணர்சிந் தைபுக,
செவ்வாய்க் கிளிநான் மறைபாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

புண்ணிய தீர்த்தங்கள் சூழ்ந்தது திருச்சித்திரகூடம்

1164. மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து மகரம் சுழலச் சுழல்நீர் பயந்த,
தெய்வத் திருமா மலர்மங்கை தங்கு திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள்,
தெய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

மூவாயிரம் மறையாளர் வணங்கும் சித்திரகூடம்

1165. மாவாயி னங்கம் மதியாது கீறி மழைமா முதுகுன் றெடுத்து,ஆயர் தங்கள்
கோவாய் நிரைமேய்த் துலகுண்ட மாயன் குரைமா கழல்கூ டும்குறிப் புடையீர்,
மூவா யிரநான் மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

பாவம் நீங்கச் சித்திரகூடம் செல்லுங்கள்

1166. செருநீல வேற்கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்,
அருநீல பாவ மகலப் புகழ்சேர் அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர்,
பெருநீர் நிவாவுந்தி முத்தங் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள,
திருநீல நின்று திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

பரமன் அடியில் பலகாலம் வாழ்வர்

1167. சீரார் பொழில்சூழ்ந் தழகாய தில்லைத் திருசித்ர கூடத் துறைசெங்கண் மாலுக்கு,
ஆராத வுள்ளத் தவர்க்கேட் டுவப்ப அலைநீ ருலகுக் கருளே புரியும்,
காரார் புயற்கைக் கலிகன்றி குன்றா ஒலிமாலை யொறொன்ப தோடொன்றும் வல்லார்,
பாரா ருலக மளந்தா னடிக்கீழ்ப் பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே.

அடிவரவு: ஊன்வா காய் வெம்பும் அருமா கோமங்க நெய் மவ்வல் மாவாய் செரு-சீரார்-வாட


மூன்றாந் திருமொழி

திருச்சித்திரகூடம்-2

சிதம்பரத்தில் கோவிந்தராஜர் எழுந்தருளியிருக்கும் இடத்திற்குச் சித்திரகூடம் என்று பெயர். இராமன் சித்திரகூட மலையில் மிகவும் மகிழ்வோடு எழுந்தருளியிருந்தார். இந்தத் திவ்விய தேசத்திலும் அவ்வாறே எழுந்தருளியிருக்கிறார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆநிரை காத்தவன் இருப்பிடம் சித்திரகூடம்

1168. வாட மருதிடை போகி மல்லரைக் கொன்றொக்க லிட்டிட்டு,
ஆடல்நல் மாவுடைத் தாயர் ஆநிரைக் கன்றிடர் தீர்ப்பான்,
கூடிய மாமழை காத்த கூத்த னெனெவரு கின்றான்,
சேடுயர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே.

பூமகள் நாயகன் பொலியுமிடம் இது

1169. பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட பிள்ளை பரிசிது வென்றால்,
மாநில மாமகள் மாதர் கேள்வ னிவனென்றும், வண்டுண்
பூமகள் நாயக னென்றும் புலங்கெழு கோவியர் பாடி,
தேமலர் தூவ வருவான் சித்திர கூடத்துள் ளானே.

மருதமரங்களை முறித்தன் வாழும் இடம் இது

1170. பண்டிவன் வெண்ணெயுண் டானென் றாய்ச்சியர் கூடி யிழிப்ப
எண்டிசை யோரும்வ ணங்க இணைமரு தூடு நடந்திட்டு,
அண்டரும் வானத் தவரு மாயிர நாமங்க ளோடு,
திண்டிறல் பாட வருவான் சித்திர கூடத்துள் ளானே.

காளியன்மேல் நடமாடியவன் தங்கும் இடம் இது

1171. வளைக்கை நெடுங்கண் மடவா ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப,
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண்தடம் புக்கண்டர் காண,
முளைத்த எயிற்றழல் நாகத் துச்சியில் நின்றது வாட,
திலைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்துள் ளானே.

கண்ணனே சித்திரகூடத்தில் உள்ளான்

1172. பருவக் கருமுகி லொத்து முட்டுடை மாகட லொத்து,
அருவித் திரள்திகழ் கின்ற வாயிரம் பொன்மலை யொத்து,
உருவக் கருங்குழ லாய்ச்சி திறத்தின மால்விடை செற்று,
தெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள் ளானே.

கருடவாகனன் சித்திரகூடத்தில் உள்ளான்

1173. எய்யச் சிதைந்த திலங்கை மலங்க வருமழை காப்பான்,
உய்யப் பருவரை தாங்கி ஆநிரை காத்தானென் றேத்தி,
வையத் தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போலே,
தெய்வப்புள் ளேறி வருவான் சித்திர கூடத்துள் ளானே.

குவலயாபீடம் வீழ்த்தியவன் இடம் இது

1174. ஆவ ரிவைசெய் தறிவார் அஞ்சன மாமலை போலே,
மேவு சினத்தடல் வேழம் வீழ முனிந்து,அழ காய
காவி மலர்நெடுங் கண்ணார் கைதொழ வீதி வருவான்,
தேவர் வணங்குதண் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே.

நரசிங்கன் தங்கும் இடம் இது

1175. பொங்கி யமரி லொருகால் பொன்பெய ரோனை வெருவ,
அங்க வனாக மளைந்திட் டாயிரந் தோளெழுந் தாட,
பைங்க ணிரண்டெரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ்வாய்,
சிங்க வுருவில் வருவான் சித்திர கூடத்துள் ளானே.

நிலைமகள், திருமகள் நாயகன் இடம்

1176. கருமுகில் போல்வதோர் மேனி கையன வாழியும் சங்கும்,
பெருவிறல் வானவர் சூழ ஏழுல கும்தொழு தேத்த,
ஒருமக ளாயர் மடந்தை யொருத்தி நிலமகள், மற்றைத்
திருமக ளோடும் வருவான் சித்திர கூடத்துள் ளானே.

தீவினைகள் சாரா

1177. தேனமர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூட மமர்ந்த,
வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன்மரு வார்,
ஊனமர் வேல்கலி கன்றி யொண்டமி ழொன்பதோ டொன்றும்,
தானிவை கற்றுவல் லார்மேல் சாரா தீவினை தானே.

அடிவரவு: வாட பேய் பண்டு வளை பருவம் எய்ய ஆவர் பொங்கி கருமுகில் தேனமர்-ஒருகுறள்


நான்காந் திருமொழி

4. ஒருகுறளாய்

காழிச்சீராம விண்ணகரம்

சீர்காழி என்னும் ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூரைக் காழிச்சீராம விண்ணகரம் என்று ஆழ்வார் பெயரிட்டு அழைக்கிறார். இவ்வூரில்தான் திருஞானசம்பந்தர் என்னும் சைவ சமயப் பெரியாரும் வாழ்ந்து வந்தார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பக்தர்களே! சீகாழிப் பதி சேருங்கள்

1178. ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி உலகனைத்து மீரடியா லொடுக்கி, ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாளணைவீர், தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும் அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும்,
தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

திருமால் திருவடி அணைவீர்! காழிநகர் சேருங்கள்

1179. நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி, நக்கன்
ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை ஒளிமலர்ச்கே வடியணைவீர், உழுசே யோடச்
சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தைத் தொல்குருகு சினையென்னச் சூழ்ந்தி யங்க,
தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

வாணாசுரனின் தோள்களை அறுத்தவன் இடம் காழி

1180. வையணைந்த நுதிக்கோட்டு வராக மொன்றாய் மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து,
நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோள் நேர்ந்தவந்தா ளணைகிற்பீர், நெய்த லோடு
மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும் மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்,
செய்யணைந்து களைகளையா தேறும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

ஏழு எருதுகளை அடக்கியவனின் காழி சேர்மின்

1181. பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள் பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன்பைம்பூண்
நெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட நின்மலந்தா ளணைகிற்பீர், நீல மாலைத்
தஞ்சுடைய விருள்தழைப்பத் தரள மாங்கே தண்மதியின் நிலாக்காட்டப் பவளந் தன்னால்,
செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

பரசுராமனாக அவதரித்தவனின் காழி சேர்க

1182. தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு திருக்குலத்தி லிறந்தோர்க்குத் திருத்தி செய்து,
வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட விண்ணவர்க்கோன் தாளணைவீர், விகிர்த மாதர்
அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல்,
செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

இராமபிரானுக்குரிய காழி சேருங்கள்

1183. பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப் படர்வனத்துக் கவந்தனொடும் படையார்த்திண்கை,
வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த விண்ணவர்க்கோன் தாளணைவீர், வெற்புப்போலும்
துங்கமுக மாளிகைமே லாயங் கூறும் துடியிடையார் முகக்கமல்ச் சோதி தன்னால்,
திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

சேர்தற்குரிய இடம் காழியே

1184. பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந் தனபோலப் புவிமேல் சிந்த,
செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன் திருவடிசேர்ந் துய்கிற்பீர், திரைநீர்த்
தெள்கி மருவிவலம் புரிகைதைக் கழியூ டாடி வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி
தெருவில்வலம் புரிதரள மீனும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

வளம் நிறைந்த காழி சேர்க

1185. பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய் பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்,
மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில் மரங்கொணர்ந்தா னடியணைவீர், அணில்கள்தாவ
நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத்
தெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

இலக்குமியை மார்பில் கொண்டவனது காழி சேர்மின்

1186. பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து,
கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில் கலந்தவந்தா ளணைகிற்பீர், கழுநீர் கூடித்
துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத் தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி,
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

இவற்றைப் படிப்போர் உலகத் தலைவர் ஆவர்

1187. செங்கமலத் தயனனைய மறையோர் காழிச் சீராம விண்ணகரென் செங்கண் மாலை
அங்கமலத் தடவயல்சூ ழாலி நாடன் அருள்மாரி யரட்டமுக்கி அடையார் சீயம்
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன் கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் தடங்கடல்சூ ழுலகுக்குத் தலைவர் தாமே.

அடிவரவு: ஒருகுறள் நான்முகன் வை பஞ்சியல் தெவ்வாய பைங்கண் பொரு பட்டு பிறை செங்கமலத்து-வந்து.


ஐந்தாந் திருமொழி

5. வந்து

திருவாலி-1

திருவாலி என்னும் திவ்வியதேசம் திருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்று. திருமங்கையாழ்வார் அனைவரும் காழிச்சீராம விண்ணகருக்குச் செல்லுங்கள் என்று உபதேசித்தார்.

ஆழ்வார் அந்த இடத்தின் சிறப்பை நினைத்து அங்கேயே தங்கிவிடுவாரோ என்று நினைத்தான் திருவாலி எம்பெருமான்; ஆழ்வார் தன்னை நினையாமல் இருந்தாலும், தானாகவே சென்று ஆழ்வாரின் நெஞ்சில் குடிகொண்டான். ஆழ்வார் பகவானின் செயலே அறிந்தார்; எம்பெருமானே! நான் உன்னை நினையாலேயே தங்கிவிட்டாய்! என் மனம் உன்னைவிட்டு வேறு எங்கும் செல்லாதபடி செய்துவிட்டாய். உன்னை விடமாட்டேன். உன்னை விட்டால் பிழைக்கமாட்டேன். நீ என்றும் என்னைவிட்டுப் பிரியாமல் இருந்து, என் கைங்கர்யத்தை ஏற்க வேண்டும் என்று வேண்டுகிறார்,

ஆசிரியத்துறை

சிந்தனைக்கு இனியான் திருவாலியம்மான்

1188. வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும்,என்
சிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே,
அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து, அவை யெங்கும்
செந்தழல் புரையும் திருவாலி யம்மானே.

அடியேன் மனத்திருந்த அணியாலியம்மான்

1189. நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததுபோல், அரவணை
வேலைத் தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய்,
சோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து, எங்கும்
ஆலைப் புகைகமழும் அணியாலி யம்மானே.

மனத்தில் நிலைபெற்றவன் ஆலியம்மான்

1190. நென்னல்போய் வருமென்றென் றெண்ணி யிராமையென் மனத்தே புகுந்தது,
இம்மைக் கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில்,
செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார் முகத்தெழு வாளைபோய், கரும்பு
அந்நற் காடணையும் அணியாலி யம்மானே.

நின் திருவடிகளை மறக்காமல் இருக்க அருள் செய்தாயே!

1191. மின்னில் மன்னு நுடங்கிடை மடவார்தம் சிந்தை மறந்து வந்து,நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்,
புன்னை மன்னு செருந்தி வண்பொழில் வாயகன் பணைகள் கலந்தெங்கும்,
அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே.

அம்மானே! என்னைவிட்டு நீங்க நினையாதே

1192. நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்தும், என்மனம்
வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா,
பாட லின்னொலி சங்கி நோசை பரந்து பல்பணை யால்மலிந்து, எங்கும்
ஆட லோசையறா அணியாலி யம்மானே.

அம்மானே! நீ எங்கும் செல்ல விடமாட்டேன்

1193. கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர் சேவடி கைதொழுதெழும்,
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்,
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித் தாதி யாய்வரும்,
அந்த ணாள ரறாவணியாலி யம்மானே.

புண்ணியனே! உன்னை நான் விடமாட்டேன்

1194. உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்து உன் அடியேன் மனம்புகுந்த,அப்
புலவ! புண்ணியனே! புகுந்தாயைப் போகலொட்டேன்,
நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல் தண்டாமரை மலரின் மிசை,மலி
அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே.

திருவாலியம்மானே! என் மனத்தில் புகுந்துவிட்டாய்

1195. சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை யுள்கிடந்தாய், அருள்புரிந்து
இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ,
கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி இன்னிள வண்டு போய்,இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே.

ஆயிரநாமமும் கூறினேன்; ஒரு சொல் உரை

1196. ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி நின்னடைந் தேற்கு,ஒரு பொருள்
வேதியர்! அரையா உரையாய் ஒருமாற்றமெந்தாய்!
நீதி யாகிய வேதமா முனியாளர் தோற்ற முரைத்து, மற்றவர்க்
காதியாய் இருந்தாய்! அணியாலி யம்மானே.

இவற்றைப் பாடுவோர்க்கு இடம் வானுலகு

1197. புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ் தென்னாலி யொருந்த மாயனை,
கல்லின் மன்னு திண்டோள் கலிய னொலிசெய்த,
நல்ல இன்னிசை மாலை நாலுமோ ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன்
வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே.

அடிவரவு: வந்து நீல நென்னல் மின்னல் நீடு கந்தம் உலவு சங்கு ஓதி புல்லி-தூவிரிய.


ஆறாந் திருமொழி

6. தூவிரிய

திருவாலி-2

பகவான், தம் மனத்தில் வந்து தங்கியிருந்தாலும் அவனை நேருக்கு நேர் கலந்து அனுபவிக்க ஆசைப்பட்டார் ஆழ்வார். பிரிவாற்றாமை காரணமாகப் பிராட்டியின் நிலையடைந்து தம் நிலையைத் தெரிவிக்கிறார்.

பிரிவாற்றாத தலைவி வண்டு முதலியவற்றை விளித்து இரங்கிக் கூறல் 

தரவு கொச்சகக் கலிப்பா

வண்டே! திருவாலிப் பெருமானிடம் எனது நிலையை உரை

1198. தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.

வண்டே! மணவாளனிடம் என் காதலைச் சொல்

1199. பிணியவிழு நறுநீல மலர்க்கிழியப் பெடையோடும்,
அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே,
மணிகெழுநீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்,
பணியறியேன் நீசென்றென் பயலைநோ யுரையாயே.

குருகே! மணவாளனிடம் குறிப்பறிந்து கூறு

1200. நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நெடுமால்,தன்
தாராய நறுந்துளவம் பெருந்தகையெற் கருளானே,
சீராரும் வளர்ப்பொழில்சூழ் திருவாலி வயல்வாழும்,
கூர்வாய சிறுகுருகே குறிப்பறிந்து கூறாயே.

வண்டே! எனது நோயை மணவாளனிடம் சொல்

1201. தானாக நினையானேல் தன்னினைந்து நைவேற்கு,ஓர்
மீனாய கொடிநெடுவேள் வலிசெய்ய மெலிவேனோ?
தேன்வாய வரிவண்டே. திருவாலி நகராளும்,
ஆனாயற் கென்னுறுநோ யறியச்சென் றுரையாயே.

குடந்தைப் பெருமானே! எனக்குத் துணைவனாகுக

1202. வாளாய கண்பனிப்ப மென்முலைகள் பொன்னரும்ப
நாணாளும் நின்னினைந்து நைவேற்கு,ஓமண்ணளந்த
தாளாளா தண்குடந்தை நகராளா வரையெடுத்த
தோளாளா, என்றனக்கோர் துணையாள னாகாயே.

கருடவாகனன் என் வளையும் கவர்வானோ!

1203. தாராய தண்டுளவ வண்டுழுத வரைமார்பன்,
போரானைக் கொம்பொசித்த புட்பாக னென்னம்மான்,
தேராரும் நெடுவீதித் திருவாலி நகராளும்,
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ.

மணவாளா! என் கண்ணில் நீ உள்ளாயே!

1204. கொண்டரவத் திரையுலவு குரைகடல்மேல் குலவரைபோல்,
பண்டரவி னணைக்கிடந்து பாரளந்த பண்பாளா!
வண்டமரும் வளர்ப்பொழில்சூழ் வயலாலி மைந்தா! என்
கண்டுயில்நீ கொண்டாய்க்கென் கனவளையும் கடவேனோ!

மணவாளா! உனது நினைவால் தூங்கவேயில்லை!

1205. குயிலாலும் வளர்ப்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடி!
துயிலாத கண்ணிணையேன் நின்னினைந்து துயர்வேனோ!
முயலாலு மிளமதிக்கே வளையிழந்தேற்கு, இதுநடுவே
வயலாலி மணவாளா. கொள்வாயோ மணிநிறமே.

மணவாளா! ஒரு நாளாவது என்னைத் தழுவு

1206. நிலையாளா நின்வணங்க வேண்டாயே யாகினும்,என்
முலையாள வொருநாளுன் னகலத்தால் ஆளாயே,
சிலையாளா மரமெய்த திறலாளா திருமெய்ய
மலையாளா, நீயாள வளையாள மாட்டோமே.

இத்தமிழ்மாலை படித்தோரைத் தீவினைகள் சேரா

1207. மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி,
நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை,
கையிலங்கு வேல்கலியன் கண்டுரைத்த தமிழ்மாலை,
ஐயிரண்டு மிவைவல்லார்க் கருவினைக ளடையாவே.

அடிவரவு: தூவிரிய பிணி நீர் தான் வாள் தாராய கொண்டு குயில் நிலை மையிலங்கு-கள்வன்.


ஏழாந் திருமொழி

7. கள்வன்கொல்

திருவாலி-3

ஆழ்வார், நாயகி நிலையை அடைந்து முன்பு வண்டு, குருகு ஆகியவற்றை வயலாகி மணவாளனுக்குத் தூது விட்டார். வயலாளி எம்பெருமான் அன்றிரவில் வந்து பரகாலநாயகியை அழைத்துச் சென்றுவிட்டதாக ஈண்டுக் கூறப்படுகிறது. தன்னோடு படுத்துறங்கிய தன் பெண்ணை (பரகாலநாயகியை)க் காணாமல் தாய் திகைத்துப் புலம்புவதுபோல் இப்பாசுரம் அமைந்துள்ளது. உடன்போக்கு நிகழ்ந்துவிட்டதே என்று தாய் இரங்குகிறாள்.

தலைவனுடன் தலைவி யாரும் அறியாமல் சென்றுவிடுவது உடன்போக்கு எனப்படும்.

உடன்போக்கு நிகழ்ந்தபின் தாய் இரங்குதல்

கலிநிலைத்துறை

கள்வனும் என் மகளும் ஆலிநகர் புகுவரோ?

1208. கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளைவந்து,
வள்ளிமருங் குலென்றன் மடமானினைப் போதவென்று,
வெள்ளிவளைக் கைப்பற்றப் பெற்றதாயரை விட்டகன்று,
அள்ளலம் பூங்கழனி யணியாலி புகுவர்க்கொலோ.

என் மகள் ஆயனுடன் பேசிக்கொண்டே ஆலி புகுவாளோ?

1209. பண்டிவ னாயன்நங்காய். படிறன்புகுந்து, என்மகள்தன்
தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை யுகந்து,அவன்பின்
கெண்டையொண் கண்மிளிரக் கிளிபோல்மிழற் றிநடந்து,
வண்டமர் கானல்மல்கும் வயலாலி புகுவர்க்கொலோ.

சூர்ப்பனகை மூக்கை அறுத்தவனுடன் சென்றாளே! ஐயகோ!

1210. அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய் அரக்கர்க்குலப் பாவைதன்னை,
வெஞ்சின மூக்கரிந்த விறலோந்திறங் கேட்கில்,மெய்யே
பஞ்சியல் மெல்லடியெம் பணைத்தோளி பரக்கழிந்து,
வஞ்சியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ.

மாதவனைத் துணைக்கொண்டு நடந்தாளே!

1211. ஏதுஅவன் தொல்பிறப்பு இளைய வன்வளை யூதி,
மன்னர் தூதுவ னாயவனூர் சொலுவீர்கள்! சொலீரறியேன்,
மாதவன் தந்துணையா நடந்தாள்தடஞ் சூழ்புறவில்,
போதுவண் டாடுசெம்மல் புனலாலி புகுவர்க்கொலோ.

மாயனுடன் அன்னமென நடந்து செல்வாளோ!

1212. தாயெனை யென்றிரங்காள் தடந்தோளி தனக்கமைந்த,
மாயனை மாதவனை மதித்தென்னை யகன்றைவள்,
வேயன தோள்விசிறிப் பெடையன்ன மெனநடந்து,
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர்க்கொலோ.

என்னிடம் இரக்கமின்றிச் சென்றுவிட்டாளே!

1213. எந்துணை யென்றெடுத்தேற் கிறையேனு மிரங்கிற்றிலள்,
தன்துணை யாயவென்றன் தனிமைக்கு மிரங்கிற்றிலள்,
வன்துணை வானவர்க்காய் வரஞ்செற்றரங் கத்துறையும்,
இந்துணை வன்னொடும்போ யெழிலாலி புகுவர்க்கொலோ.

நப்பின்னை மணாளனை விரும்பினாளே!

1214. அன்னையு மத்தனுமென் றடியோமுக் கிரங்கிற்றிலள்,
பின்னைதன் காதலன்றன் பெருந்தோள்நலம் பேணினளால்,
மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கு மிடையாள்நடந்து,
புன்னையும் அன்னமும்சூழ் புனலாலி புகுவர்க்கொலோ.

யாவரும் தொழுமாறு ஆலி புகுவரோ?

1215. முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற,
சிற்றில்மென் பூவையும்விட் டகன்றசெழுங் கோதைதன்னை,
பெற்றிலேன் முற்றிழையைப் பிறப்பிலிபின் னேநடந்து,
மற்றெல்லாம் கைதொழப்போய் வயலாலி புகுவர்க்கொலோ.

நெடுமாலும் என் மகளும் ஆலி புகுவரோ?

1216. காவியங் கண்ணியெண்ணில் கடிமாமலர்ப் பாவையொப்பாள்,
பாவியேன் பெற்றமையால் பணைத்தோளி பரக்கழிந்து,
தூவிசே ரன்னமன்ன நடையாள்நெடு மாலொடும்போய்,
வாவியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ.

இத்தமிழ்மாலை படித்தோர் தேவருலகு அடைவர்

1217. தாய்மனம் நின்றிரங்கத் தனியேநெடு மால்துணையா,
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவரென்று,
காய்சின வேல்கலிய னொலிசெய்தமிழ் மாலைபத்தும்,
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே.

அடிவரவு: கள்வன் பண்டு அஞ்சுவன் ஏதவன் தாய் என் அன்னை முற்றில் காவி தாய்மனம்-நந்தா


எட்டாந் திருமொழி

8. நந்தா விளக்கு

திருநாங்கூர்

திருமணி மாடக் கோயில்

சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் சீர்காழிக்கு ஏழு கல் தொலைவில் திருநாங்கூர் இருக்கிறது. நூற்றெட்டு திவ்வியதேசங்களுள் அடங்கிய பதினொரு திவ்வியதேசங்கள் திருநாங்கூர்ப் பகுதியில் இருக்கின்றன. அவற்றுள் மணிமாடக் கோயிலில் இருக்கும் எம்பெருமானைப் பற்றியது இப்பாசுரம்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனமே! மணிமாடக் கோயிலை வணங்கு 

1218. நந்தா விளக்கே அளத்தற் கரியாய் நரநா ரணனே! கருமா முகில்போல்
எந்தாய், எமக்கே யருளாய், எனநின்று இமையோர் பரவு மிடம்,எத் திசையும்
கந்தா ரமந்தே னிசைபாடமாடே களிவண் டுமிழற் றநிழல் துதைந்து,
மந்தா ரநின்று மணமல் குநாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

கஜேந்திரனின் துயர் தீர்த்தவன் இடம் திருநாங்கூர்

1219. முதலைத் தனிமா முரண்தீர வன்று முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழ முய்ய,
விதலைத் தலைச்சென் றதற்கே யுதவி வினைதீர்த்த வம்மானிடம் விண்ணணவும்
பதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப் பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம்,
மதலைத் தலைமென் பெடைகூடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

திருமகளைத் தழுவியவன் இடம் திருநாங்கூர்

1220. கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று கொடுமா முதலைக் கிடர்செய்து, கொங்கார்
இலைப்புண்ட ரீகத் தவளின்ப மன்போ டணைந்திட்ட வம்மானிடம்,ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பு மகிலும் அணிமுத்தும் வெண்சா மரையோடு,பொன்னி
மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

கருடவாகனனின் மணிமாடக் கோயிலை வணங்கு

1221. சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று திசைநான்கும் நான்கு மிரிய, செருவில்
கறையார் நெடுவே லரக்கர் மடியக் கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்,
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர் ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்,
மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே!

கண்ணபிரானுக்கு இடம் திருநாங்கூர்

1222. இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து,
தழைவாட வந்தாள் குருந்த மொசித்துத் தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்,
குழையாட வல்லிக் குலமாட மாடே குயில்கூவ நீடு கொடிமாட மல்கு,
மழையாடு சோலை மயிலாலு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

பூதகியைக் கொன்றவன் இடம் திருநாங்கூர்

1223. பண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக் கிரங்காது, அவள்தன்
உண்ணா முலைமற் றவளாவி யோடும் உடனே சுவைத்தா நிடம்,ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக் கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து,
மண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

காளியன்மீது நடனமாடியவன் இடம் திருநாங்கூர்

1224. தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத் தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்,
இளைக்கத் திளைத்திட் டதனுச்சி தன்மேல் அடிவைத்த அம்மா னிடம்,மாமதியம்
திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில் செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று,மூன்றில்
வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

கிளிகளும் வேதம் பாடும் திருநாங்கூரை வணங்கு

1225. துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம் துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும், முற்றா
விளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம் விளைவித்த வம்மானிடம்,வேல் நெடுங்கண்
முளைவாளெயிற்று மடவார் பயிற்று மொழிகேட் டிருந்து முதிராதவின்சொல்,
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

தேவர்கள் பணியும் மணிமாடக்கோயிலை வணங்கு

1226. விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த விகிர்தா விளங்கு சுடராழி யென்னும்,
படையோடு சங்கொன் றுடையாய் எனநின்று இமையோர் பரவு மிடம்,பைந் தடத்துப்
பெடையோடு செங்கால வன்னம் துகைப்பத் தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங் கழுநீர்,
மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

இத்தமிழ்மாலை பாடுவார் சக்கரவர்த்தி ஆவார்

1227. வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர் மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு,என்றும்
தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன்கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார்,
கண்டார் வணங்கக் களியானை மீதே கடல்சூ ழுலகுக் கொருகா வலராய்,
விண்டோய் நெடுவெண் குடைநீழ லின்கீழ் விரிநீ ருலகாண் டுவிரும் புவரே.

அடிவரவு: நந்தா முதலை கொலை சிறை இழை பண் தளை துளை விடையோட வண்டார்-சலங்கொண்ட


ஒன்பதாந் திருமொழி

9. சலங்கொண்ட

திருவைகுந்த விண்ணகரம்

எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பது போல் இவ்விடத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறான். அதனால் இத்திருப்பதிக்கு வைகுந்த விண்ணகரம் என்று பெயர் ஏற்பட்டது. திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் இதுவும் ஒன்று.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனமே! வைகுந்த விண்ணகரத்தை வணங்கு

1228. சலங்கொண்ட இரணியன தகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்தமுதங் கொண்டுகந்த காளை,
நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி யம்மான்
நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகையொண் செருந்தி
சண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

நரசிங்கன் உறையும் இடம் வைகுந்த விண்ணகரம்

1229. திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத்
தேவரொடு தானவர்கள் திசைப்ப,இரணியனை
நண்ணியவன் மார்வகலத் துகிர்மடுத்த நாதன்
நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
எண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையும்
ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,
மண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

மூடமனமே! வைகுந்த விண்ணகரையே வணங்கு

1230. அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம்
அமுதுசெய்த திருவயிற்றன் அரன்கொண்டு திரியும்,
முண்டமது நிறைத்தவன்கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
எண்டிசையும் பெருஞ்செந்ந லிளந்தெங்கு கதலி
இலைக்கொடியொண் குலைக்கமுகொ டிகலிவளம் சொரிய
வண்டுபல விசைபாடமயிலாலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

இராமன் தங்குமிடம் வைகுந்த விண்ணகரம்

1231. கலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக்
காதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி,
தலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம்
செழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம்,
மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

இராவணனைக் கொன்றவன் கோயில் இதுதான்

1232. மின்னனைய சுண்மருங்குல் மெல்லியற்கா யிலங்கை
வேந்தன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர
தன்நிகரில் சிலைவளைத்தன் றிலங்கைபொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
செந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை
செங்கழுநீ ரொடுமிடைந்து கழனிதிகழ்ந் தெங்கும்,
மன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

கண்ணபிரான் உறையும் கோயில் இதுதான்

1233. பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப் பெரிய
பேயினது உருவுகொடு மாளவுயி ருண்டு
திண்மைமிகு மருதொடுநற் சகடமிறுத் தருளும்
தேவனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
உண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள்
உதவுகொடை யென்றிவற்றி னொழிவில்லா, பெரிய
வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

வெண்ணெயுண்ட கண்ணன் விரும்புமிடம் இது

1234. விளங்கனியை யிளங்கன்று கொண்டுதிர வெறிந்து
வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள் வைத்ததயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுதுசெய்திவ் வுலகுண்ட காளை
உகந்தினிது நாடோறும் மருவியுறை கோயில்,
இளம்படிநற் கமுகுகுலைத் தெங்குகொடிச் செந்நெல்
ஈன்கரும்பு கண்வளரக் கால்தடவும் புனலால்,
வளங்கொண்ட பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

நரகாசுரனை அழித்தவன் மகிழ்ந்துறையும் இடம் இது

1235. ஆறாத சினத்தின்மிகு நரகனுர மழித்த அடலாழித் தடக்கையன்
அலர்மகட்கும் அரற்கும்,
கூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன் இமையோர்
குலமுதல்வன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி மதுவெள்ள
மொழுகவய லுழவர்மடை யடைப்ப,
மாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

தேவர்கள் வணங்கும் வைகுந்த விண்ணகரை வணங்கு

1236. வங்கமலி தடங்கடலுள் வானவர்க ளோடு
மாமுனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி,
எங்கள்தனி நாயகனே எமக்கருளாய் என்னும்
ஈசனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
செங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச்
சேலுகளும் செழும்பணைசூழ் வீதிதொறும் மிடைந்து,
மங்குல்மதி யகடுரிஞ்சு மணிமாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

மண்ணும் விண்ணும் ஆள்வர்

1237. சங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும் தாமரைக்கண்
நெடியபிரான் தானமரும் கோயில்,
வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ்,
மங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல்துணிய
வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன,
சங்கமலி தமிழ்மாலை பத்திவைவல்லார்கள்
தரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே.

அடிவரவு: சலம் திண்ணியது அண்டமும் கலை மின் பெண்மை விளங்கனி ஆறாத வங்கம் சங்கு-திருமடந்தை.
 

பத்தாந் திருமொழி

10. திருமடந்தை

திரு அரி மேய விண்ணகரம்

அடியார்களின் பகைவர்களை நீக்க விரும்பிய பகவான் ஸ்ரீ தேவி பூதேவியுடன் இந்தத் திவ்விய தேசத்தில் எப்போதும் எழுந்தருளியிருக்கிறான். இத்தலத்தைத் குடமாடு கூத்தர் கோயில் என்றும் கூறுவர். இங்கிருக்கும் பெருமாளுக்குக் குடமாடு கூத்தன் என்று பெயர். திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் இதுவும் ஒன்று.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனமே! அரி மேய விண்ணகரம் வணங்கு 

1238. திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள்நடந்து,இவ் வேழுலகத் தவர்ப்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம் பெரும்புகழ்வே தியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங்கழுநீர்
தாமரைகள் தடங்கடொறு மிடங்கடொறும் திகழ,
அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

தேவர்களுக்கு அமுதளித்தவன் இடம் அரிமேய விண்ணகரம்

1239. வென்றிமிகு நரகனுர மதுவழிய விசிறும்
விறலாழித் தடக்கையன் விண்ணவர்கட்கு, அன்று
குன்றுகொடு குரைகடலைக் கடைந்தமுத மளிக்கும்
குருமணியென் னாரமுதம் குலவியுறை கோயில்,
என்றுமிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையோர்
ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,
அன்றுலகம் படைத்தவனே யனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

கம்சனைக் கொன்றவன் கோயில் இது

1240. உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம்
உண்டபிரான்ண்டர்கள்முன் கண்டுமகிழ வெய்த,
கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன்
குஞ்சிபிடித் தடித்தபிரான் கோயில்,மருங் கெங்கும்
பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப்
பலங்கனிகள் தேன்காட்டப் படவரவே ரல்குல்,
அம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

இரணியனைப் பிளந்தவன் வாழும் இடம் இது

1241. ஓடாத வாளரியி னுருவமது கொண்டு அன்
றுலப்பில்மிகு பெருவரத்த விரணியனைப் பற்றி,
வாடாத வள்ளுகிரால் பிளந்தவன்றன் மகனுக்
கருள்செய்தான் வாழுமிடம் மல்லிகைசெங் கழுநீர்,
சேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,
ஆடேறு வயலாலைப் புகைகமழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

உலகளந்தவன் கோயில் அரிமேய விண்ணகரம்

1242. கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக்
களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென் றிரந்திட்டு,
அண்டமுமிவ் வலைகடலு மவனிகளுமெல்லாம்
அளந்தபிரா னமருமிடம் வளங்கொள்பொழி லயலே,
அண்டமுறு முழவொலியும் வண்டினங்க ளொலியும்
அருமறையி னொலியும்மட வார்சிலம்பி னொலியும்,
அண்டமுறு மலைகடலி னொலிதிகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

தயரதன் மகன் தங்கும் இடம் அரிமேய விண்ணகரம்

1243. வாணெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை
மன்னன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர,
தாணெடுந்தின் சிலைவளைத்த தயரதன்சேய் என்தன்
தனிச்சரண்வா னவர்க்கரசு கருதுமிடம், தடமார்
சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய வுதிர்ந்தசெழு முத்தம்,
வாணெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

காமனைப் பயந்த காளையின் கோயில் இதுதான்

1244. தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனைத னாருயிரும் செகுத்தான்,
காமனைத்தான் பயந்தகரு மேனியுடை யம்மான்
கருதுமிடம் பொருதுபுனல் துறைதுறைமுத் துந்தி,
நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதம் ஐந்து
வேள்வியோ டாறங்கம் நவின்றுகலை பயின்று,அங்
காமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

குடமாடு கூத்தனின் இடம் அரிமேய விண்ணகரம்

1245. கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை
காமருசீர் முகில்வண்ணன் காலிகள்முன் காப்பான்,
குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன்
குலவுமிடம் கொடிமதிள்கள் மாளிகைகோ புரங்கள்,
துன்றுமணி மண்டபங்கள் சாலைகள்தூ மறையோர்
தொக்கீண்டித் தொழுதியொடு மிகப்பயிலும் சோலை,
அன்றலர்வாய் மதுவுண்டங் களிமுரலு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

அரிசரணம் என்று வணங்கும் இடம் இது

1246. வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த
தயிருண்டு வெண்ணெயமு துண்டு, வலிமிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை
கருதுமிடம் காவிரிசந் தகில்கனக முந்தி,
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி,
அஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

இவை படிப்போர் தேவராவர்

1247. சென்றுசின விடையேழும் படவடர்த்துப் பின்னை
செவ்வித்தோள் புணர்ந்துகந்த திருமால்தன் கோயில்,
அன்றயனு மரன்சேயு மனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகர மமர்ந்தசெழுங் குன்றை,
கன்றிநெடு வேல்வலவன் மங்கையர்தம் கோமான்
கலிகன்றி யொலிமாலை யைந்தினொடு மூன்றும்,
ஒன்றினொடு மொன்றுமிவை கற்றுவல்லார் உலகத்
துத்தமர்கட் குத்தமரா யும்பருமா வர்களே.

அடிவரவு: திருமடந்தை வென்றி உம்பர் ஓடாத கண்டவாள் தீமன கன்று வஞ்சனை சென்று-போதலர்ந்த

 
மேலும் இரண்டாவதாயிரம் »
temple news
நான்காம் பத்து முதல் திருமொழி 1. போதலர்ந்த திருத்தேவனார் தொகை தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனைச் சேவிக்க ... மேலும்
 
temple news
ஏழாம் பத்து 1. கறவா மடநாகு முதல் திருமொழி திருநறையூர்-8 பிறவிப் பெருந்துயரை நீக்கித் தமக்கு அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar