பதிவு செய்த நாள்
16
செப்
2018
12:09
ஸ்ரீவில்லிபுத்துார், திருமலை பிரம்மோத்ஸவ 5ம் நாளில் ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிகளைந்த மாலை, கிளி, பட்டு ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து நேற்று எடுத்து செல்லப்பட்டது.நேற்று மதியம் 12:30 மணிக்கு கோயில் வெள்ளிக் கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு, மாலை, கிளி, பட்டு சாற்றி, மங்களப்பொருட்கள் சமர்ப்பிக்க சிறப்பு பூஜைகளை கிரிபட்டர் செய்தார். இதன்பின் ஆண்டாள் சூடிக்களைந்த கிளி, மாலை,பட்டு மற்றும் மங்களபொருட்களை கூடையில் வைத்து, ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் கிருஷ்ணன் தலைமையில் திருப்பதி கொண்டு சென்றனர்.அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெகந்நாதன்,செயல்அலுவலர் இளங்கோவன், தக்கார் ரவிசந்திரன், ராம்கோ நிறுவன இயக்குனர் ஸ்ரீகண்டன்ராஜா, வேதபிரான் அனந்தராமபட்டர், முத்துபட்டர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று திருமலை ஜீயர் மடத்தில் வரவேற்பளிக்கப்பட்டு, சேவாகாலம் மற்றும் திருவீதி சுற்றி கோயிலில் ஒப்படைக்கப் படுகிறது. நாளை ( செப்.17) காலை பெருமாளுக்கும், மாலையில் மலையப்பசுவாமிக்கும் ஆண்டாள் மாலை சாற்றி கருடசேவை நடக்கிறது.