எருமேலியில் இன்று சந்தனகுட பவனி நாளை மதியம் பேட்டைதுள்ளல்

ஜனவரி 10,2023



சபரிமலை: எருமேலியில் இன்று மாலை சந்தனகுட பவனியும், நாளை மதியம் பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளலும் நடைபெறுகிறது. இதற்காக இங்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மண்டல கால தொடக்கம் முதல் எருமேலியில் பேட்டை துள்ளல் நடைபெற்றாலும் மகரஜோதிக்கு மூன்று நாட்கள் முன்னதாக நடைபெறும் பேட்டைதுள்ளல் பிரசித்தி பெற்றதாகும். அம்பலப்புழா பக்தர்கள் நாளை மதியமும், ஆலங்காடு பக்தர்கள் மாலையிலும் பேட்டை துள்ளுவர். இவர்கள் பேட்டை துள்ளியதும் இங்கு இந்த நிகழ்வு நிறைவு பெறும். இதற்காக இரண்டு குழுக்களும் நேற்று இரவு எருமேலி வந்து சேர்ந்தனர், பேட்டை துள்ளலுக்கு முன்னோடியாக சந்தனகுட பவனி நேற்று இரவு எருமேலி வாவர் பள்ளி வாசலில் இருந்து தொடங்கியது. நெற்றிப்பட்டம் கட்டிய யானைகளில் நடைபெற்ற இந்த பவனியில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் இந்த பவனி நிறைவு பெற்றது. பேட்டைதுள்ளலுக்காக இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் எருமேலியில் குவிந்துள்ளனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு ..!

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்