மகர ஜோதி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மூவாயிரம் போலீசார் வருகை

ஜனவரி 10,2023



சபரிமலை, மகரஜோதி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மூவாயிரம் போலீசார் சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை சபரிமலையில் உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. சபரிமலையில் பாதுகாப்புக்கு பத்து நாட்களக்கு ஒரு முறை போலீசார் பணியமர்த்தப்ட்டனர். ஆறாம் கட்டமாக நேற்று புதிய போலீசார் பொறுப்பேற்றனர். சன்னிதானத்தில் 12 டி.எஸ்.பி., 36 இன்ஸ்பெக்டர், 125 எஸ்.ஐ., உட்பட 1875 பேர் வந்துள்ளனர். இது கடந்த கட்டங்களை ஒப்பிடும் போது 500 பேர் அதிகமாகும். மொத்தம் 12 செக்டர்கள் பிரிக்கப்பட்டு இவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மகரஜோதி நாளில் கூடுதலாக ஐந்து டி.எஸ்.பி.க்கள் வருகின்றனர். எஸ்.பி.யாக பிஜூமோன் நியமிக்கப்பட்டுள்ளனர். பம்பையில் எஸ்.பி.யாக கே.கே. அஜி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஆறு டி.எஸ்.பி., 15 இன்ஸ்பெக்டர், 88 எஸ்.ஐ. உட்பட 581 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிலக்கல்லில் எஸ்.பி. ஆர்.டி.அஜித். இங்கு ஆறு டி.எஸ்.பி., 15 இன்ஸ்பெக்டர், 83 எஸ்.ஐ., எட்டு பெண் டி.எஸ்.பி. மற்றும் 350 போலீசார், 40 பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று பொறுப்பே்றனர். மகரஜோதி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று காலை சன்னிதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு ..!

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்