சபரிமலையில் உண்டியல் காணிக்கை எண்ணுவது எப்படி?



Warning: Undefined variable $cl_mp in /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/detail.php on line 170

சபரிமலை: சபரிமலையில் குவியும் காணிக்கை ரூபாய்களை எண்ணும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், 14 இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சபரிமலையில் ஸ்ரீகோயில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள வட்ட வடிவ பாத்திரத்தில் போடப்படும் காணிக்கை அதன் அடிப்பகுதி வழியாக கீழே செல்லும் போது, கன்வெயர் பெல்ட் மூலம் காணிக்கை எண்ணும் இடத்துக்கு செல்கிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 இயந்திரங்கள், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 இயந்திரங்கள் உட்பட 14 இயந்திரங்கள் காணிக்கை எண்ண பயன்படுத்தப்படுகின்றன. இங்கு ஊழியர்கள் நாணயங்களை மதிப்பு படி தரம் பிரித்தல், மடங்கியிருக்கும் நோட்டுகளை சரி செய்தல் போன்ற பணிகளை செய்கின்றனர்.இவ்வாறு செய்த பின்னர் 6 இயந்திரங்கள் மூலம் நோட்டுகள் எண்ணப்பட்டு 100 நோட்டுகளாக கட்டப்படும். இதுபோல 4 இயந்திரங்களில் நாணயங்கள் எண்ணப்படும். ஊழியர்கள் எண்ணி கட்டிய நோட்டுகள், பின்னர் வெளிநாட்டு இயந்திரத்தின் மூலம் மீண்டும் எண்ணப்படும். இந்த இயந்திரத்தில் கள்ள நோட்டுகள் தனியாக பிரிந்து விடும். இவ்வாறு எண்ணிய பின்னர் பேங்க் அதிகாரிகள் இயந்திரம் மூலம் மீண்டும் ஒரு முறை எண்ணி எடுத்து செல்வர். இதுபோல நாணயங்கள் 2000 வீதம் இயந்திரம் மூலம் பிரிக்கப்பட்டு சாக்கு பையில் போட்டு தையல் போட்டு டிராக்டரில் பம்பை கொண்டு செல்லப்படும். அங்கிருந்து தனலட்சுமி வங்கி கிளைகளுக்கு கொண்டு செல்லப்படும். சபரிமலை காணிக்கையில் 12 சதவீதம் நாணயங்களாக வருகிறது. 14 சதவீதம் இ காணிக்கையாக வருகிறது. மீதமுள்ளவை ரூபாய் நோட்டுகளாக வருகின்றன. வெளிநாட்டு கரன்சிகளும் கிடைக்கின்றன.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு ..!

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்