அகத்தீஸ்வரர்
உள்ளாவூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு
மூலவர் · அகத்தீஸ்வரர்
தரிசன நேரம்
காலை 8:00 மணி முதல்10:00 மணி வரை, மாலை 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் தகவல்
- மூலவர்
- அகத்தீஸ்வரர்
- உற்சவர்
- சந்திரசேகர், பார்வதி தேவி
- அம்மன்/தாயார்
- அகிலாண்டேஸ்வரி
- தல விருட்சம்
- சரங்கொண்றை
- தீர்த்தம்
- தாமரை குளம்
- பழமை
- அகத்தீஸ்வரபுரம்
- மாவட்டம்
- காஞ்சிபுரம்
- மாநிலம்
- தமிழ்நாடு
முகவரி
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளாவூர் கிராமம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டம். 631503.தொலைபேசி: +91 9003856887
கோயில் சிறப்பு
அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம். பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
தல வரலாறு
அகத்தீஸ்வரர் இறைவனை நேரில் காண்பதற்காக, இங்கு அமர்ந்த நிலையில் தவம் புரிந்துள்ளார். இவருக்கு, சிவ பெருமான் நேரில் காட்யளித்து, வர அளித்ததாக வரலாறு கூறுகிறது.
தல பெருமை
800 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. போரில், பல்லவர்களை வென்ற பாண்டியர்கள், தங்களது வெற்றியை குறிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோயில்களை புதுப்பித்து, தங்களது ஆட்சியை பறை சாட்டும் வகையில் அதில், மீன் சின்னங்களை பொறித்துள்ளனர். இதேபோல், இந்த கோயிலிலும் இந்த சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இறைவன் திருவடி பட்ட பூமி என்பதால், பல்வேறு கால நிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்திலும், கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், வறட்சி இன்றி நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது.
பிரார்த்தனை
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
திருவிழாக்கள்
பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, பங்குனி உத்திர திருக்கல்யாணம்.
பூஜைகள்
வைதீகம்
எப்படிச் செல்வது?
ரயில்
பழைய சீவரம் ரயில் நிலையம்
பேருந்து
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்திலிருந்து சீவரம் வழியாக செல்லலாம். காஞ்சிபுரத்தில் இருந்து, ரயில் மற்றும் பகுதி நேர பேருந்துகள் உள்ளன.
விமானம்
சென்னை
தங்கும் வசதி
காஞ்சிபுரம்
ஹோட்டல் தமிழ்நாடு போன்: +91-44-2722 2554, 2722 2553
பாபு சூரியா போன்: +91-44-2722 2555
ஜெயபாலா போன்: +91-44-2722 4348
ஹெரிடேஜ் போன்: +91-44-2722 7780
எம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023
ஜி. ஆர். டி. போன்: +91-44-2722 5250.
ஹோட்டல் தமிழ்நாடு போன்: +91-44-2722 2554, 2722 2553
பாபு சூரியா போன்: +91-44-2722 2555
ஜெயபாலா போன்: +91-44-2722 4348
ஹெரிடேஜ் போன்: +91-44-2722 7780
எம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023
ஜி. ஆர். டி. போன்: +91-44-2722 5250.