காஞ்சிபுரம் கோயில்கள் கோயில்கள்
உள்ளடக்கத்திற்குச் செல்க
கோயில் தோற்றம்
கோயில் தோற்றம்

தாமோதரப்பெருமாள்

தாமல், காஞ்சிபுரம், தமிழ்நாடு

மூலவர் · தாமோதரப்பெருமாள்

பகிர் தொடர்பு படங்கள்

தரிசன நேரம்

காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை

கோயில் தகவல்

மூலவர்
தாமோதரப்பெருமாள்
உற்சவர்
தாமோதரப்பெருமாள்
அம்மன்/தாயார்
திருமாலழகி
தல விருட்சம்
வில்வம், புன்னை
தீர்த்தம்
விபுல சரஸ், சர்ப்ப தீர்த்தம்
மாவட்டம்
காஞ்சிபுரம்
மாநிலம்
தமிழ்நாடு

முகவரி

அருள்மிகு தாமோதரப்பெருமாள் கோயில், தாமல், காஞ்சிபுரம்

தொலைபேசி: +91 96294 06140, 99448 12697

கோயில் சிறப்பு
அபிஷேகத்தின் போது பெருமாளின் வயிற்றில் தழும்பைக் காணலாம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று ராஜ அலங்கார சேவை நடக்கும்.
தல வரலாறு
கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என 12 திருநாமங்கள் பெருமாளுக்கு விசஷேமானவை. இதில் இத்தலம் தாமோதரப் பெருமாளுக்கு உரியதாக திகழ்கிறது. ஆயர்பாடியில் வாழ்ந்த நந்தகோபர் – யசோதை தம்பதியின் மகனாக கண்ணன் என்னும் பெயரில் வளர்ந்தார் மகாவிஷ்ணு. பாலகனான கண்ணன் ஆயர்பாடியில் பலவித விளையாடல்கள் செய்தருளினார். அதில் வெண்ணெய் திருடுதலும் ஒன்று. இதனால் கோபம் கொண்ட கோபியர்கள், கண்ணனைக் கண்டிக்கும்படி முறையிட்டனர். அவன் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்க, கயிறால் பிணைத்து ஒரு உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்தாள் யசோதை. அப்போது அவனது வயிற்றில் கயிறின் தடம் ஏற்பட்டது. அதனால் ‘தாமோதரன்’ எனப் பெயர் பெற்றான். ‘தாம’ என்றால் ‘கயிறு’ அல்லது தாம்பு. உதரன் என்றால் ‘வயிறு’. அதாவது ‘கயிறால் கட்டப்பட்ட வயிறை உடையவன்’ என்பது பொருள். இந்த தாமோதரப் பெருமாளின் தரிசனம் பெற விரும்பிய மகரிஷிகள் பலர் இங்கிருந்த காட்டில் தவமிருந்தனர். அதன் பயனாக காட்சியளித்த பெருமாள் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.
தல பெருமை
வில்வம், புன்னை தலவிருட்சமாக உள்ளன. விபுல சரஸ், சர்ப்ப தீர்த்தம் என்னும் தீர்த்தங்கள் இங்குள்ளன.    
பிரார்த்தனை
பெருமாள் அருளால் குழந்தைப் பேறு பெற்றவர்கள் கொலுசு காணிக்கை செலுத்துகின்றனர். திருமாலழகி என்னும் பெயரில் தாயார் தனி சன்னதியில் இருக்கிறாள். வெள்ளிக்கிழமையில் நெய் விளக்கு ஏற்றி தாயாரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.
நேர்த்திக்கடன்
காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் கிராமத்தில் தாமோதரப்பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு வழிபட்டு குழந்தைப்பேறு அடைந்தவர்கள் கொலுசு காணிக்கை செலுத்துகின்றனர்.
திருவிழாக்கள்
வைகாசி வசந்த உற்ஸவம், ஆனி லட்சார்ச்சனை, ஆடி அன்னக்கூடை பாவாடை உற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி, பங்குனி உத்திரம்,
எப்படிச் செல்வது?

ரயில்

காஞ்சிபுரம்

பேருந்து

சென்னை – வேலுார் நெடுஞ்சாலையில் 85 கி.மீ., காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் கோயில் உள்ளது.

விமானம்

சென்னை

தங்கும் வசதி

காஞ்சிபுரம்

ஹோட்டல் தமிழ்நாடு போன்: +91-44-2722 2554, 2722 2553
பாபு சூரியா போன்: +91-44-2722 2555
ஜெயபாலா போன்: +91-44-2722 4348
ஹெரிடேஜ் போன்: +91-44-2722 7780
எம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023
ஜி. ஆர். டி. போன்: +91-44-2722 5250