Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
சிதம்பரம்
1. அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்,
சிதம்பரம்
அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்
மூலவர் : திருமூலநாதர் (மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்)
அம்மன்/தாயார் : உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
இருப்பிடம் : கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்திற்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.நகரின் நடுவிலேயே கோயில் அமைந்துள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கடலூர் - 50 கி.மீ.
போன் : +91-
பிரார்த்தனை : இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு ...
சிறப்பு : இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயம் தலம் ஆகும். மூவர் பாடிய தேவார ...
2. அருள்மிகு தில்லை காளி கோயில்,
சிதம்பரம்
அருள்மிகு தில்லை காளி கோயில்
மூலவர் : தில்லை காளி, பிரம்ம சாமுண்டீஸ்வரி
இருப்பிடம் : சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
போன் : +91- 4144 - 230 251
பிரார்த்தனை : மகம் நட்சத்திரத்திற்கு இவள் அதிதேவதை என்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற இவளுக்கு அர்ச்சனை செய்து ...
சிறப்பு : பிரம்மனை போல் நான்கு முகத்துடன் தில்லை காளி தனி சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை' என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் ...
3. அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் கோயில்,
கானாட்டம்புலியூர்
அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் கோயில்
மூலவர் : பதஞ்சலீஸ்வரர்
அம்மன்/தாயார் : கோல்வளைக்கையம்பிகை
இருப்பிடம் : சிதம்பரத்தில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் காட்டுமன்னார்கோயில் சென்று அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். காட்டுமன்னார் கோயிலில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பஸ்கள் செல்கின்றன.
போன் : +91& 4144 & 208 508, 208091, 93457 78863.
பிரார்த்தனை : நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை ...
சிறப்பு : இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளை "அம்புஜாட்சி', "கானார்குழலி' என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் ...
4. அருள்மிகு மங்களபுரீஸ்வரர் கோயில்,
திருச்சோபுரம்
அருள்மிகு மங்களபுரீஸ்வரர் கோயில்
மூலவர் : மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர்
அம்மன்/தாயார் : தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி
இருப்பிடம் : கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் ரோட்டில் 13 கி.மீ., தூரத்தில் ஆலப்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ., சென்றால் திருச்சோபுரத்தை அடையலாம். கடலூரில் இருந்து மணிக்கு ஒரு பஸ் செல்கிறது.
போன் : +91-9245113456, 97905 24054
பிரார்த்தனை : இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை ...
5. அருள்மிகு உச்சிநாதர் கோயில்,
சிவபுரி
அருள்மிகு உச்சிநாதர் கோயில்
மூலவர் : உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர்
அம்மன்/தாயார் : கனகாம்பிகை
இருப்பிடம் : சிதம்பரத்திலிருந்து கவரப்பட்டு செல்லும் வழியில் 3 கி.மீ., தூரத்தில் சிவபுரி கோயில் உள்ளது.
போன் : +91- 98426 24580.
பிரார்த்தனை : இக்கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை ...
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 3 வது தேவாரத்தலம் ...
6. அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில்,
திருநாரையூர்
அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில்
மூலவர் : சவுந்தர்யேஸ்வரர்
அம்மன்/தாயார் : திரிபுரசுந்தரி
இருப்பிடம் : சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில், திருநாரையூர் உள்ளது. பஸ் உண்டு.
போன் : +91- 94425 71039, 94439 06219
பிரார்த்தனை : வேண்டியதை எல்லாம் கொடுக்கும் ...
சிறப்பு : முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி ...
7. அருள்மிகு பால்வண்ணநாதர் கோயில்,
திருக்கழிப்பாலை
அருள்மிகு பால்வண்ணநாதர் கோயில்
மூலவர் : பால்வண்ணநாதர்
அம்மன்/தாயார் : வேதநாயகி
இருப்பிடம் : சிதம்பரத்திலிருந்து, கவரப்பட்டு செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள சிவபுரிக்கு அடுத்து திருக்கழிப்பாலை உள்ளது. பைரவர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.
போன் : +91- 98426 24580.
பிரார்த்தனை : லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது ...
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் ...
8. அருள்மிகு பாசுபதேஸ்வரர் கோயில்,
திருவேட்களம்
அருள்மிகு பாசுபதேஸ்வரர் கோயில்
மூலவர் : பாசுபதேஸ்வரர்
அம்மன்/தாயார் : சத்குணாம்பாள், நல்லநாயகி
இருப்பிடம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91- 98420 08291, +91-98433 88552
பிரார்த்தனை : பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை ...
சிறப்பு : தேவாரப்பபாடல் பெற்ற சிவத்தலங்களில் முதலானது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம்.இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ...
9. அருள்மிகு காயத்ரி அம்மன் கோயில்,
சிதம்பரம்
அருள்மிகு காயத்ரி அம்மன் கோயில்
மூலவர் : காயத்ரி
இருப்பிடம் : சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., தூரத்திலுள்ள கஞ்சித்தொட்டி பஸ் ஸ்டாப்பிற்கு சென்று, அங்கிருந்து அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
போன் : +91 4144- 223 450
பிரார்த்தனை : குழந்தைகளின் கல்வி சிறக்க ...
சிறப்பு : மூலவர் காயத்ரி மேற்கு நோக்கி, ஐந்து முகம், ஆயுதம் ஏந்திய பத்து கரங்களுடன் தாமரை மலரில் அமர்ந்திருக்கிறாள். இவள் மூன்று அம்ச அம்பிகையாக காட்சி ...
10. அருள்மிகு பாபாஜி கோயில்,
பரங்கிப்பேட்டை
அருள்மிகு பாபாஜி கோயில்
மூலவர் : பாபாஜி
இருப்பிடம் : சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை உள்ளது. பஸ்ஸ்டாண்டில் இருந்து செல்லும் ரேவு மெயின்ரோட்டில் ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. ஆட்டோ உண்டு.
போன் : +91 44 - 2464 3630, 9688399441
பிரார்த்தனை : தியானம் மற்றும் யோக நிலையை அடைய விரும்புபவர்கள் இங்கு வழிபாடு ...
சிறப்பு : இவ்வூரில் மட்டுமே பாபாஜியை சிலை வடிவில் ...
 
மேலும் சிதம்பரம் அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar