Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நல்ல மாரியம்மன்
  ஊர்: தொழுதூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் துவங்கி 18 நாட்கள் விழா நடத்தப்படும். தேரோட்டமும் உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  கண்நோய் உள்ளவர்கள் குறிப்பாக பூ விழுந்து கண்ணின் அழகு கெட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். நந்தியாவட்டை பூ மூலம் இதற்காக கோயிலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர்- 612 804, திருவாரூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 94443 54461, +91- 94437 45732 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்டது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் மாவிளக்கு ஏற்றுதல், அலகு குத்துதல் ஆகிய நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  நல்ல மாரியம்மன் மூலவராக உள்ள இக்கோயிலில் தேவியருடன் கழுவுடையான், பெரியாச்சி, முனீஸ்வரர், பொம்மி, வெள்ளையம்மாளுடன் மதுரை வீரன், காத்தவராயன், கருப்பழகி, ஆரியமாலா, தொட்டியத்து சின்னான் ஆகிய காவல் தெய்வங்களும் உள்ளனர்.

கண்நோய் உள்ளவர்கள் குறிப்பாக பூ விழுந்து கண்ணின் அழகு கெட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். நந்தியாவட்டை பூ மூலம் இதற்காக கோயிலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
 

ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. இவர்களது மகன் பரசுராமன். ரேணுகாதேவி தன் கற்பின் வலிமையால், ஆற்றங்கரையில் இருக்கும் ஈர மணலில் குயவர்கள் (வேளார்) செய்வது போல் குடம் செய்து அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு தங்கள் ஆஸ்ரமத்து பூஜைக்காக கொண்டு செல்வாள்.


பச்சை மணலில் குடம் பிடித்து அது காய்வதற்குள் தண்ணீர் கொண்டு போவதென்றால் நடக்கிற காரியமா? அவ்வளவு அரிய கற்புத்திறமுடையவள் அவள்.


ஒருநாள் வானத்தில் அழகே வடிவான கந்தர்வன் ஒருவன் தன் தேரில் சென்று கொண்டிருந்தான். அவனது உருவம் தண்ணீரில் தெரிந்தது. ஏறிட்டுப் பார்த்த ரேணுகா,


""ஆஹா..உலகத்தில் இவ்வளவு அழகானவர்களும் இருப்பார்களா?'' என சாதரணமாகத்தான் நினைத்தாள். இதனால் அவளது மனம் களங்கப்பட்டு விடவில்லை. இருப்பினும், அவள் அன்று செய்த குடம் உடைந்து விட்டது. வெறுங்கையுடன் ஆஸ்ரமம் திரும்பிய ரேணுகாவின் நிலையை ஜமதக்னி முனிவர் புரிந்து கொண்டார்.



தன் மனைவியின் கற்புத்திறன் களங்கப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டி, தன் மகன் பரசுராமனை அழைத்து அவளை வெட்டித் தள்ளும்படி உத்தரவிட்டார். தந்தை சொல்லை மதித்த அந்த மைந்தர் அவ்வாறே செய்து விட்டு, கதறி அழுதார்.


ஜமதக்னி முனிவர் மகிழ்ச்சியுடன், ""உன் சகோதரர்கள் என் சொல் கேளாமல் தாயை வெட்ட மறுத்து விட்டனர். நீ என் சொல்லைக் கேட்டாய். எனவே, ஏதாவது வரம் கேள்,'' என்றார். தன் தாயின் உயிரைத் திரும்பக் கேட்டார்.


ஜமதக்னியும் அவளுக்கு உயிர் கொடுத்து, அவளோடு தொடர்ந்து வாழ முடியாதெனக் கூறி, அவள் தனக்கு தினமும் தண்ணீர் எடுத்து வந்து உதவியதால் மாரியம்மன் என்ற பெயரில் மக்களுக்கும் நல்ல நீர் கொடுக்கும் அம்பிகையாக விளங்க அருள் பாலித்தார்.


அவள் தினமும் குடம் செய்து தண்ணீர் எடுத்து வந்தமையால் குயவர்களின் குல தெய்வமாகவும் ஆனாள். தொழுதூர் கிராம வேளார் மக்கள் அம்பிகையை தங்கள் தெய்வமாக ஏற்று வழிபட்டு வருகின்றனர்.


 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar