Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வாசுதேவபெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வாசுதேவபெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வாசுதேவபெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  ஊர்: கடகம்பாடி
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மூல நட்சத்திரத்தன்று விசேஷ ஹோமம், மாசிமாதம் லட்சார்ச்சனை, அனுமன் ஜெயந்தி, ஆனி திருமஞ்சனம்.  
     
 தல சிறப்பு:
     
  ஆஞ்சநேயர் கைகட்டி, வாய்பொத்தி, பவ்ய ஆஞ்சநேயராக சேவை சாதிப்பது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வாசுதேவபெருமாள் திருக்கோயில், கடகம்பாடி-609 503, திருவாரூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 4366 273600 
    
 பொது தகவல்:
     
  பவ்ய ஆஞ்சநேயருக்கு மாதம்தோறும் மூல நட்சத்திரத்தன்று விசேஷ ஹோமம் நடக்கிறது. மாசிமாத புனர்பூசம் துவங்கி மூல நட்சத்திரம் வரை லட்சார்ச்சனை நடக்கிறது.மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, உடல் உபாதை, மனசஞ்சலம், வியாபாரத்தில் சரிவு, குழந்தையின்மை போன்ற குறைகள் நீங்கவும், ஞானம், பலம், பக்தி, வீரம், கீர்த்தி, சேவை, அடக்கம் ஆகிய குணங்களைப் பெறவும்  இங்குள்ள பவ்ய ஆஞ்சநேயரை வழிபட்டு வரலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தும், இவரை 11 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தும் வேண்டிக்கொள்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஆஞ்சநேயர் சிறப்பு:ஆஞ்சநேயர் கைகட்டி, வாய்பொத்தி, பவ்ய ஆஞ்சநேயராக சேவை சாதித்து வருகிறார். மக்களின் குறைகளை போக்கி அருள்பாலித்து வரும் இவரை வழிபட சனி மற்றும் வியாழக்கிழமைகள் ஏற்றவை. இந்த நாட்களில் பக்தர்கள் தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து குறைகளை ஆஞ்சநேயரிடம் எடுத்துச் சொல்லி நிவர்த்தி அடைகிறார்கள். அமாவாசை அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. அன்று இவரை 11 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் எதிரிகள் தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.  
     
  தல வரலாறு:
     
  ராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தவர் அனுமன்.மற்றவர்களெல்லாம், ராமனின் மூலமான ஸ்ரீமன் நாராயணனிடம் வைகுண்டம் வேண்டி பிரார்த்தித்தனர். அனுமன் மட்டும் மறுத்து விட்டார். காரணம், பூலோகத்தில் ராமநாமம் சொல்ல வழியிருக்கிறது. வைகுண்டத்துக்குச் சென்றால் "நாராயணா' என்ற கோஷம் தானே கேட்கும் என்பதால், என்றும் அழியாத சிரஞ்சீவியாக
பூலோகத்திலேயே தங்கியிருக்க ஸ்ரீராமனிடம் வரம் பெற்றார். சோழ மன்னர் ஒருவர் காவேரி ஆற்றின் கிளைநதியான அரசலாற்றின் கரையோரம் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத வாசுதேவபெருமாளுக்கு கோயில் எழுப்பினார். அங்கே பவ்ய ஆஞ்சநேயருக்கு சன்னதியும் எழுப்பப்பட்டது. இவர் பக்தர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறார். சரபோஜிராஜபுரம் என அழைக்கப்படும் கடகம்பாடியில் இக்கோயில் உள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஆஞ்சநேயர் கைகட்டி, வாய்பொத்தி, பவ்ய ஆஞ்சநேயராக சேவை சாதித்து வருகிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar