Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பகவதி அம்மன்
  தீர்த்தம்: கிள்ளியாறு
  ஊர்: ஆற்றுக்கால்
  மாவட்டம்: திருவனந்தபுரம்
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  மாசி மாதம் பத்து நாட்கள் நடக்கும் பொங்காலை எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். நவராத்திரி, சிவராத்திரி, ஆடி வெள்ளி தினங்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  மாசி மாதம் பத்து நாட்கள் நடக்கும் பொங்காலை எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். பூரம் நட்சத்திரத்தில் நடக்கும் பொங்கல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொள்வர். 1997, பிப்ரவரி 23ல் நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் பொங்கல் இட்டதற்காக இந்த கோயிலுக்கு கின்னஸ் ரிக்கார்டு கிடைத்துள்ளது. 2008 பிப்ரவரியில் 25 லட்சம் பேர் பொங்கலிட்டு பழைய கின்னஸ் சாதனை யையும் முறியடித்து விட்டார்கள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில் ஆற்றுக்கால், திருவனந்தபுரம் - 695 009, கேரளா.  
   
போன்:
   
  +91 471- 245 6456, 246 3130, 2455 600, 2455 700. 
    
 பொது தகவல்:
     
  நுழைவு வாயிலில் சேத்திரபாலகிகள் உள்ளனர். மூலஸ்தானத்தில் இரண்டு விக்ரகங்கள் உள்ளன. புராதனமான மூலவிக்ரகத்தின் மீது ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூலவிக்ரகத்தின் கீழ் அபிஷேக விக்ரகம் உள்ளது. இதைத்தான் பக்தர்கள் தரிசிக்க முடியும். கோயில் முழுவதும் செம்புத்தகடு வேயப்பட்டுள்ளது. பிரகாரத்தில் கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. கோபுரங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கண்ணகியுடன் இக்கோயிலுக்கு உள்ள தொடர்பை எடுத்துக் காட்டுகிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  அம்மை நோய், கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், மன அமைதி இல்லாதவர்கள், எதிரி தொந்தரவு உள்ளவர்கள், வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் துலாபாரம் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து கொள்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்திலேயே இந்தக் கோயில் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான். ஆதிசங்கரர் இத்தலத்தில் யந்திர பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், அவருக்கு பின் வித்யாதிராஜ சட்டம்பி சுவாமிகள் இத்தலத்தில் நீண்ட காலம் தங்கியிருந்த தாகவும் கூறுவர். இத்தலத்து அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரத்தை ஏந்திய நிலையில் அரக்கி ஒருத்தியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். தீய குணங்களை அடக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. எனவே தான் பொங்கல் விழாவில் கண்ணகி வரலாற்றை அடிப்படையாக கொண்ட பாடல்கள் பாடப்பெறுகிறது. இத்தலத்திலும் சிற்பங்களிலும் கண்ணகியின் கதை நிகழ்ச்சி காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

கேரளாவில் பெண்களின் சபரிமலையாக ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் அமைந்துள்ளது. பெண்கள் இத்தலத் திற்கு இருமுடி கட்டி செல்கிறார்கள். மாசி மாதம் பத்து நாட்கள் நடக்கும் பொங்காலை எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். பூரம் நட்சத்திரத்தில் நடக்கும் பொங்கல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொள்வர். 1997, பிப்ரவரி 23ல் நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் பொங்கல் இட்டதற்காக இந்த கோயிலுக்கு கின்னஸ் ரிக்கார்டு கிடைத்துள்ளது. 2008 பிப்ரவரியில் 25 லட்சம் பேர் பொங்கலிட்டு பழைய கின்னஸ் சாதனை யையும் முறியடித்து விட்டார்கள். ஆடிச்செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இந்த அம்பாளை வழிபடுவது சிறப்பு.

முழுக்காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், அஷ்டதிரவிய அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், லட்சார்ச்சனை, பகவதி சேவை, பந்திருநாழி, 101 பானை பொங்கல், சுற்றுவிளக்கு, ஸ்ரீபலி, வித்யாரம்பம், குழந்தைகளுக்கு சாதமூட்டல், துலாபாரம் ஆகிய வழிபாடுகள் இங்கு சிறப்பு.
 
     
  தல வரலாறு:
     
  மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி என தல புராணம் கூறுகிறது. கண்ணகியின் கணவன் கோவலன் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ் செழியனின் ஆணையால் கொல்லப்பட்டான். கண்ணகி நீதிகேட்டதும், மன்னன் தான் செய்த தவறை உணர்ந்து உயிர்விட்டான். இருந்தும், அவள் மதுரையை எரித்தாள். பின்னர், சேரநாட்டிலுள்ள கொடுங்கலூரில் தங்கினாள். அங்கு சேரமன்னன் கண்ணகிக்கு கோயில் கட்டினான். கொடுங்கலூர் செல்லும் வழியில் ஆற்றுகாலிலுள்ள கிள்ளியாற்றின் கரையிலும் தங்கினாள். அங்கும் ஒரு கோயில் எழுப்பப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மாசி மாதம் பத்து நாட்கள் நடக்கும் பொங்காலை எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். பூரம் நட்சத்திரத்தில் நடக்கும் பொங்கல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொள்வர். 1997, பிப்ரவரி 23ல் நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் பொங்கல் இட்டதற்காக இந்த கோயிலுக்கு கின்னஸ் ரிக்கார்டு கிடைத்துள்ளது. 2008 பிப்ரவரியில் 25 லட்சம் பேர் பொங்கலிட்டு பழைய கின்னஸ் சாதனையையும் முறியடித்து விட்டார்கள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar