ஆனி மாதம் 15 நாள் திருவிழா, ஆனி மாதம் அமாவாசையில் பூச்சாட்டுதல் விழா, அக்கினி குண்டம் இறங்குதல், கார்த்திகை தீபம், வருடப்பிறப்பு.
தல சிறப்பு:
கால்நடைகளுக்கும் நோய் நொடி வராமல் இருப்பதற்காக வெள்ளை குதிரை ஒன்று அக்னி குண்டத்தில் இறங்குவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சீதேவி அம்மன் திருக்கோயில்
காஞ்சிக்கோயில், ஈரோடு மாவட்டம்.
போன்:
+91 96550 99100
பொது தகவல்:
குப்பண்ணசாமி, வீரமாத்தி சின்னம்மன், பெரிய காண்டிஅம்மன், கரிச்சி அப்பிச்சி சுவாமிகள், வேடன் சின்னாரி, புலிக்குத்தி வீரன், கருப்பண்ணசாமி, கன்னிமார், மாகாளியம்மன், காமாட்சியம்மன் போன்ற பிரகார தெய்வங்களை வணங்கியபிறகு, மூலவர் சீதேவியம்மனை வணங்க வேண்டும். செம்பொன், முளசி கண்ணன், கண்ணன் ஆகிய மூன்று குதிரைகள் கோயில் வாசலில் எழுந்தருளியுள்ளன. ராஜகோபுரத்தை கடந்து சென்றதும் லட்சுமி, பார்வதி, சரஸ்வதி சிற்பங்கள் உள்ளன. வடக்கு திசை நோக்கிய கருவறையில், கோபுரத்தின் கீழ் எட்டுக்கைகளுடன் சீதேவியம்மன் வடக்குநோக்கி எழுந்தருளியுள்ளாள். அம்மனுக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன.
பிரார்த்தனை
பெண்களுக்கு பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ, பிறவகைகளிலோ பிரச்சனை இருந்தால் இங்குள்ள சீதேவி அம்மனிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும். உடல்நிலை, இடமாறுதல், நீதிமன்ற வழக்கு, பொருட்கள் விற்பனை, விளைநிலங்களில் விளைச்சல் உட்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக பூவாக்கு கேட்கும் பழக்கம் உள்ளது.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் அபிஷேகம் செய்து மாவிளக்கு ஏற்றியும், அக்னி குண்டத்தில் இறங்கியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
தேங்காய் தட்டும் விழா: ஆனி மாதம் தேர்திருவிழா நடக்கிறது. தேர் திருவிழாவின் போது முதல் மூன்று மாதத்திற்கு முன்னால் தேங்காய் தட்டுதல் விழா நடக்கிறது. இதனை தேர் முகூர்த்தம் என்பர். சித்திரை மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புண்யாச வாசனை செய்து விழா நடத்துவர்.
மனக்குறை நீக்கும் அம்மன்: சீதேவியம்மன் தன் தங்கை கொண்டத்து காளியை அடிமைப்படுத்தியவரிடமிருந்து விடுவித்ததால், பல்வேறு சூழ்நிலைகளில் கொடுமைப்படுத்தப்படும் எண்ணப்படும் பெண்களும், நீண்டகாலம் குழந்தை இல்லாதவர்களும் இங்கு மாவிளக்கு ஏற்றி அம்மனை வேண்டிக் கொள்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல மணமகன் அமைய முளைப்பாரி வளர்க்கின்றனர்.
பூக்குழி: ஆனி மாதம் பூக்குழி திருவிழா நடக்கிறது. பக்தர்கள் பூஜாரியோடு 60 அடிநீளம் கொண்ட குண்டத்தில் வெள்ளை ஆடை உடுத்தி அக்னிக்குண்டம் இறங்குகின்றனர். இந்த பக்தர்களை வீரமக்கள் என்பர். கால்நடைகளுக்கும் நோய் நொடி வராமல் இருப்பதற்காக வெள்ளை குதிரை ஒன்றும் அக்னி குண்டத்தில் இறங்குகிறது. இதனைத்தொடர்ந்து அம்மன் திருத்தேருக்கு அம்மன் எழுந்தருள்கிறாள். உடல்நிலை, இடமாறுதல், நீதிமன்ற வழக்கு, பொருட்கள் விற்பனை, விளைநிலங்களில் விளைச்சல் உட்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக பூவாக்கு கேட்கும் பழக்கம் உள்ளது.
தல வரலாறு:
காஞ்சிக்கோயில் சீதேவி அம்மனின் தங்கை பாரியூர் கொண்டத்து காளியம்மன். விவசாயி ஒருவன் கொண்டத்துக் காளியம்மனை தன் மந்திரச் சொல்லால் கட்டி அடிமைப்படுத்தினான். மந்திரத்துக்கு காளி கட்டுப்படும் வழக்கமுடையவள். ஒருமுறை காஞ்சிக்கோயில் திருவிழாவிற்கு சீதேவியம்மன், காளியம்மனை அழைக்க சென்றாள். அடிமைப்பட்டிருந்த தங்கையின் நிலை கண்டு கொதித்த அவள், விவசாயியை அழித்தாள். சர்வசக்தியும் வாய்ந்த அவளுக்கு கோயில் கட்டப்பட்டது. விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கால்நடைகளுக்கும் நோய் நொடி வராமல் இருப்பதற்காக வெள்ளை குதிரை ஒன்று அக்னி குண்டத்தில் இறங்குவது சிறப்பு.