குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள அம்மனை வழிபட்டால் அவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகளாய் குழந்தை இல்லாதவர்கள் பலர் இங்கு வந்து அம்மனை தரிசித்து குழந்தை பேறு பெற்றுள்ளனர்.
இக்கோயிலின் முன்புறமுள்ள வேப்ப மரம், அரச மரம் ஆகியவற்றில் தொட்டிலை கட்டி தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில் கொடுக்கப்படும் விபூதிக்கு தனி சிறப்புண்டு என்கின்றனர் பக்தர்கள். தலைவலி, வயிற்றுவலியின் போது நெற்றி நிறைய விபூதியை பூசிக் கொள்ள வேண்டும்.
சிறிது விபூதியை வாயில் போட்டு கொண்டால் பல வியாதிகள் குணமடைய செய்கிறார் அம்மன் என்கிறார்கள் பக்தர்கள்.
|