விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் இங்கு தரிசனம் தருகின்றனர்.
பிரார்த்தனை
பக்தர்கள் இங்குள்ள வாலாம்பிகையை வந்து வேண்டிச் சென்றால், திருமண தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்!
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் வாலாம்பிகை மற்றும் சமேத வாலிபுரீஸ்வரருக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.
தலபெருமை:
வாலாம்பிகை அவளும் கருணையே உருவானவள். இங்கு வந்து வேண்டிச் சென்றால், திருமண தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்! விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் இங்கு தரிசனம் தருகின்றனர். குறிப்பாக, வாலிக்கும் இங்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. வாலி மற்றும் வாலாம்பிகை சமேத வாலிபுரீஸ்வரருக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால்.. சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனும், சிறந்த சிவபக்தனுமாகிய ராவணனைத் தன் வாலால் கட்டிப்போட்ட வல்லமை கொண்டவன், வாலி. இந்தச் செயலால்தான், அவனுக்கு வாலி எனும் பெயர் அமைந்ததாகவும் சொல்வார்கள். வாலியும் சிவ பக்தர்தான்! சதாசர்வ காலமும் சிவநாமத்தையே உச்சரித்து வந்தான் வாலி. பல தலங்களுக்குச் சென்று, இதுவரை நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைப் பெருக்கித் தருவாயாக! என்று மனமுருக வேண்டினான். எதிரிகள் என்று எவரும் எனக்குத் தேவையில்லை. எதிரிகளுடன் சண்டை போடுகிற மனநிலையும் எனக்கில்லை. ஒருவேளை, எனக்கு எதிரிகள் இருப்பதுதான் இந்தப் பிறவியின் நோக்கம் என்றால், என்னுடன் நேருக்கு நேர் மோதும் எனது எதிரிகளின் பலத்தில் பாதி எனக்கு வந்துவிடும்படி அருள்புரியுங்கள் ஸ்வாமி! என தலங்கள் தலங்களாகச் சென்று, தவம் புரிந்து வேண்டிக்கொண்டான். தீவிர சிவபக்தனான வாலி, தினமும் லிங்கத் திருமேனியை நீராட்டுவதற்காக, அந்த வனத்தில் அழகிய திருக்குளம் ஒன்றை அமைத்தான். தினமும் அந்த நீரை எடுத்து வந்து, சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தான். வில்வம் பறித்து அர்ச்சித்து வழிபட்டான். பிறகு, ஸ்வாமிக்கு எதிரே அமர்ந்து கொண்டு, கண்கள் மூடி, கடும் தவத்தில் மூழ்கினான். பக்தனின் தவத்துக்கு மகிழாமலா இருப்பார், சிவனார்?! வாலியின் பக்தியில் குளிர்ந்துபோன சிவபெருமான், திருக்காட்சி தந்தருளினார். அவன் கேட்ட வரத்தையும் தந்து வாழ்த்தினார். வாலி வழிபட்ட தலங்கள், அவனுக்கு சிவபெருமான் தரிசனம் தந்த தலங்கள் எனப் பல உண்டு. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகிலும் வாலி வழிபட்ட தலம் உண்டு என்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு வாலிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.
இருப்பிடம் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பண்டிதக்குடி. இங்கிருந்து திருராமேஸ்வரம் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வா. கோட்டை. பண்டிதக்குடி வரை அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. வா.கோட்டைக்கு ஆட்டோ வசதி உண்டு.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி, சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5.