Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆனந்தீஸ்வரர்
  அம்மன்/தாயார்: ஆனந்தவல்லியம்மன்
  தல விருட்சம்: கல்லால மரம்
  ஊர்: திருநின்றவூர்
  மாவட்டம்: திருவள்ளூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாக நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  அகத்திய மகரிஷி வழிபட்ட சிவன் மற்றும் இது குரு ஸ்தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் பாக்கம், திருநின்றவூர், திருவள்ளூர்.  
   
போன்:
   
  +91 89393 96625, 80154 74263 
    
 பொது தகவல்:
     
  ஆனந்தவல்லியம்மன், அகத்தியர் , 10 கால் மண்டபம் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  வியாழனன்று, இந்த மரத்தின் முன் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்குவதோடு குழந்தைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. 
    
 தலபெருமை:
     
 

குரு ஸ்தலம்: இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் (பீடம்) தாமரை இதழ் வடிவமாக காட்சியளிப்பது அதிசயமாகும். இவரை வழிபட்டவருக்கு குபேர சம்பத்து கிடைக்கும். அகத்திய மகரிஷி பூஜித்த மூர்த்தி என்பதால், பாவம் நீங்கி புண்ணியம் பெருகும். தலவிருட்சமாக கல்லால மரம் இருப்பதால் குரு மிதுனத்திற்கு பெயர்ச்சியாகி உள்ள இந்த சமயத்தில், இங்கு வழிபடுவது சிறப்பு. தட்சிணாமூர்த்தி, தனது சீடர்களான சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தடியில் அமர்ந்து உபதேசம் செய்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இதை குரு ஸ்தலம் என்றும் சொல்கின்றனர்.

திருப்பணி: ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோயில் சிதிலமடைந்துள்ளது. மூலவர் சிவன், நந்தி, சண்டிகேஸ்வரர் தவிர மற்ற சிலைகள் கிடைக்கவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன், பாக்கம் கிராம மக்கள் கோயிலைச் சுத்தப்படுத்தி வழிபாடு செய்யத் தொடங்கினர்.

 
     
  தல வரலாறு:
     
  கயிலாயத்தில் சிவபார்வதி திருமணத்தைக் காண விண்ணுலக தேவர் முதல் மண்ணுலக உயிர்கள் வரை அனைவரும் ஒன்றாகக் கூடினர். அதனால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. பூமியை சமநிலைப்படுத்தும் நோக்கில் சிவன், அகத்திய முனிவரை தென்னகத்திற்குப் புறப்பட்டுச் செல்ல உத்தரவிட்டார். வரும்வழியில், அவர் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு வழிபடப்பட்ட லிங்கங்களில் ஒன்றே திருநின்றவூர் பாக்கம் ஆனந்தீஸ்வரர். இவருக்கு சோழமன்னன் முதலாம் ராஜேந்திரன் கி.பி.1022ல் திருப்பணி செய்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் ஈக்கோடு கோட்டத்தில் புலியூர் நாட்டு சதுர்வேதி மங்கலம் என இப்பகுதியை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயிலில் விளக்கேற்றவும், அன்னதானம் செய்யவும் 56 காணி நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டு கூறுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அகத்திய மகரிஷி வழிபட்ட சிவன் மற்றும் இது குரு ஸ்தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar