Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
முதல் பக்கம் >> அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில்
 
[Image1]
 
மூலவர்: சுப்ரமணியர்
  ஊர்: அம்மையார்குப்பம்
  மாவட்டம்: திருவள்ளூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கந்தசஷ்டி, வைகாசி, ஆடிக் கிருத்திகை, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, பிரதோஷம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, திருவாதிரை  
     
 தல சிறப்பு:
     
  முருகன் கோயிலான இங்கு, முருகனின் வாகனமான மயில் அதிக அளவில் இருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை மணி 5 முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அம்மையார்குப்பம், திருவள்ளூர் மாவட்டம்.  
   
 பொது தகவல்:
     
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அற்புதமாகத் திகழ்கிறது கோயில். உள்ளே நுழைந்ததுமே அஷ்டலட்சுமியரும் சன்னதி கொண்டிருப்பது தனிச்சிறப்பு! கந்தசஷ்டி, வைகாசி, ஆடிக் கிருத்திகை என கந்தக் கடவுளுக்கு உரிய விசேஷ தினங்களில், இந்தத் தலத்துக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பலமுறை வந்து, சுப்ரமணியரை கண்ணாரத் தரிசித்து, கதாகாலட்சேபங்களை நிகழ்த்தியுள்ளார் என்கின்றனர் பக்தர்கள். இளம் வயதில், இந்த ஊரிலேயே அவர் சில வருடங்கள் தங்கி இருந்ததாகவும், அப்போது முருகனின் சன்னதிக்கு அடிக்கடி வந்து தரிசித்தாகவும் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள். எனவே, அவரைப் போற்றும் வகையில், வாரியார் சுவாமிகளின் திருவுருவச் சிலையும் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகப்பெருமானின் திருநாமம் சுப்ரமணியர், வள்ளி-தெய்வானையுடன், பன்னிரண்டு திருக்கரங்களும் ஆறு முகங்களுமாக, வேலும் மயிலும் கொண்டு கருணையும் கனிவும் பொங்கக் காட்சி தருகிறார்.

இங்கு அருள்பாலிக்கும் அமிர்தலிங்கேஸ்வரர் மற்றும் அமிர்தவல்லிக்கு பிரதோஷம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, திருவாதிரை என முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் அமர்க்களப்படுகின்றன. மகா சிவராத்திரி நன்னாளில், சிவனாருக்கு நடைபெறும் எட்டுகால பூஜையும் மிகவும் விசேஷம் ! வைகாசி விசாகம் மற்றும் ஆடிக் கிருத்திகை ஆகிய திருநாட்களில் இங்கு வந்து, வேல் கொண்டு வினைதீர்க்கும் குமரக்கடவுளைத் தரிசித்து, சண்முகக் கவசம் பாடினால், தீராத நோயும் தீரும்; இழந்த பதவியைப் பெறலாம் என்பது ஐதீகம் ! குழந்தை பாக்கியம் இல்லையே என வேதனைப்படுவோர், சஷ்டி விரதம் மேற்கொண்டு, ஆலயத்துக்கு வந்து அடிப்பிரதட்சிணம் செய்து, சிவமைந்தனை வழிபட... குமரனைப் போலவே, அழகும் அறிவும் ஒருசேர, குழந்தை பிறக்கும் எனப் போற்றுகின்றனர், பெண்கள். மாசி மக நன்னாளில், திருவிழா கோலாகலமாக நடைபெறும். உத்ஸவம், அபிஷேகம், தேரோட்டம் எனக் கோயிலே களைகட்டியிருக்கும். ஆடிக் கிருத்திகையின்போது பால் குடம், காவடி எடுத்தல் எனத் தங்களது நேர்த்திகடனைச் செலுத்துகின்றனர் பக்தர்கள். அந்த நாளில், ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து, சுப்பிரமணியரைத் தரிசித்துச் செல்கின்றனர். பிள்ளைப் பாக்கியம் வேண்டி, அது நிறைவேறிய அன்பர்கள், குழந்தையின் எடைக்கு எடை, காசு, பழங்கள் ஆகியவற்றைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். சுப்ரமணியரின் சன்னதியில், அவரைச் சாட்சியாகக் கொண்டு திருமணம் செய்தால், அந்தத் தம்பதி ஒற்றுமையுடன் திகழ்வர்; வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும்; எந்தத் தீய சக்தியும் அவர்களை அண்டாதவாறு வேலும் மயிலும் துணை நிற்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனை
    
தீராத நோய்கள் தீர, இழந்த பதவியைப் பெற, குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, செல்வ கடாட்சம் கிடைக்க இங்குள்ள முருகப் பெருமானை வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தல், எடைக்கு எடை, காசு பழங்கள் ஆகியவற்றை காணிக்கையாகவும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அற்புதமாகத் திகழ்கிறது கோயில். உள்ளே நுழைந்ததுமே அஷ்டலட்சுமியரும் சன்னதி கொண்டிருப்பது தனிச்சிறப்பு! கந்தசஷ்டி, வைகாசி, ஆடிக் கிருத்திகை என கந்தக் கடவுளுக்கு உரிய விசேஷ தினங்களில், இந்தத் தலத்துக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பலமுறை வந்து, சுப்ரமணியரை கண்ணாரத் தரிசித்து, கதாகாலட்சேபங்களை நிகழ்த்தியுள்ளார் என்கின்றனர் பக்தர்கள். இளம் வயதில், இந்த ஊரிலேயே அவர் சில வருடங்கள் தங்கி இருந்ததாகவும், அப்போது முருகனின் சன்னதிக்கு அடிக்கடி வந்து தரிசித்தாகவும் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள். எனவே, அவரைப் போற்றும் வகையில், வாரியார் சுவாமிகளின் திருவுருவச் சிலையும் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகப்பெருமானின் திருநாமம் சுப்ரமணியர், வள்ளி-தெய்வானையுடன், பன்னிரண்டு திருக்கரங்களும் ஆறு முகங்களுமாக, வேலும் மயிலும் கொண்டு கருணையும் கனிவும் பொங்கக் காட்சி தருகிறார்.

இங்கு அருள்பாலிக்கும் அமிர்தலிங்கேஸ்வரர் மற்றும் அமிர்தவல்லிக்கு பிரதோஷம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, திருவாதிரை என முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் அமர்க்களப்படுகின்றன. மகா சிவராத்திரி நன்னாளில், சிவனாருக்கு நடைபெறும் எட்டுகால பூஜையும் மிகவும் விசேஷம் ! வைகாசி விசாகம் மற்றும் ஆடிக் கிருத்திகை ஆகிய திருநாட்களில் இங்கு வந்து, வேல் கொண்டு வினைதீர்க்கும் குமரக்கடவுளைத் தரிசித்து, சண்முகக் கவசம் பாடினால், தீராத நோயும் தீரும்; இழந்த பதவியைப் பெறலாம் என்பது ஐதீகம் ! குழந்தை பாக்கியம் இல்லையே என வேதனைப்படுவோர், சஷ்டி விரதம் மேற்கொண்டு, ஆலயத்துக்கு வந்து அடிப்பிரதட்சிணம் செய்து, சிவமைந்தனை வழிபட... குமரனைப் போலவே, அழகும் அறிவும் ஒருசேர, குழந்தை பிறக்கும் எனப் போற்றுகின்றனர், பெண்கள். மாசி மக நன்னாளில், திருவிழா கோலாகலமாக நடைபெறும். உத்ஸவம், அபிஷேகம், தேரோட்டம் எனக் கோயிலே களைகட்டியிருக்கும். ஆடிக் கிருத்திகையின்போது பால் குடம், காவடி எடுத்தல் எனத் தங்களது நேர்த்திகடனைச் செலுத்துகின்றனர் பக்தர்கள். அந்த நாளில், ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து, சுப்பிரமணியரைத் தரிசித்துச் செல்கின்றனர். பிள்ளைப் பாக்கியம் வேண்டி, அது நிறைவேறிய அன்பர்கள், குழந்தையின் எடைக்கு எடை, காசு, பழங்கள் ஆகியவற்றைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். சுப்ரமணியரின் சன்னதியில், அவரைச் சாட்சியாகக் கொண்டு திருமணம் செய்தால், அந்தத் தம்பதி ஒற்றுமையுடன் திகழ்வர்; வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும்; எந்தத் தீய சக்தியும் அவர்களை அண்டாதவாறு வேலும் மயிலும் துணை நிற்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  தல வரலாறு:
     
  முருகப்பெருமான், வள்ளியை வள்ளிமலையில் திருமணம் செய்த பிறகு, திருத்தணிக்குச் சென்றதாகச் சொல்கிறது புராணம். அப்படிச் செல்லும் வழியில், இரண்டு இடங்களில் கந்தக் கடவுள் தங்கினார். அப்படி, வனப்பகுதியில் அவர் தங்கிய பகுதி விடியங்காடு என்று அழைக்கப்படுகிறது. இன்னொரு இடம், வள்ளியை அம்மையாகவும், அப்பன் முருகப்பனைத் தந்தையாகவும் ஏற்ற பக்தர்களால், வள்ளியின் நினைவாக அம்மையார்குப்பம் என அழைக்கப்படுகிறது. ஊரின் மையப்பகுதியில், மயில்வாகனன் முருகப்பெருமான் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: முருகன் கோயிலான இங்கு, முருகனின் வாகனமான மயில் அதிக அளவில் இருப்பது சிறப்பு.
 
 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar