பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசி மகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, நவராத்திரி மற்றும் சிவனுக்குரிய அனைத்து விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.
தல சிறப்பு:
சிவன் மேற்குப்பார்த்தும், அம்மன் கிழக்குப் பார்த்தும் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இக்கோயிலில் மேற்கு பக்க ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால், சிவன் மேற்குப்பார்த்தும், அம்மன் கிழக்குப் பார்த்தும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் இடப்பக்கம் விநாயகர், வலப்பக்கம் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், மற்றும் மகாலட்சுமியை வணங்கலாம். சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், சுக்கிரீவன், சூரியன் மற்றும் சமயக்குரவர்களும் அருள்பாலிக்கின்றனர். இதர தெய்வங்களை வணங்கியபின் நந்தவனத்திற்கு செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
நோய் குணமடையவும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
திருவாரூர் தியாகராஜரை வணங்க வரும் பக்தர்கள் இங்கு வந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்ததும், புரான சிறப்பும் பெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் இக்கோயிலும் சிறப்புடையதாகும்.
தல வரலாறு:
கி.பி.,12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலில் மிகவும் பழமை வாய்ந்தது. பல்வேறு சிவத்தொண்டர்கள் வழிப்பட்டுள்ளனர். இக்கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்தது. பிரதோஷத்தின் ஒரு நாள் இரவு அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி முதலியார் கனவில் தோன்றிய ஈசன் பல காலமாக பராமரிப்பில்லாமல் கிடப்பதாவும், பல்வேறு பகுதி திருப்பணிக்கு பல்வேறு பொருட்களை வழங்கி வரும் இப்பகுதி மக்களின் செல்வ செழிப்பிற்கும், பிணி நீங்கவும் உற்ற துணையாக இருப்பதாக கூறி உருவமாய் தோன்றி, மறைந்தார். அன்றைய மறுநாள் அப்பகுதியினர்களை அழைத்து விபரத்தை கூறி உடன் திருப்பணிக்குழு அமைத்து கோயில் கட்டி குடமுழக்கு செய்துள்ளார். திராவிட கோட்டையாக இருந்த இங்கு, கடந்த 1967ம் ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் கடந்த 2006ம் ஆண்டு பாலஸ் தாபனம் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை நிதி உதவியுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சிவன் மேற்குப்பார்த்தும், அம்மன் கிழக்குப் பார்த்தும் அருள்பாலிப்பது சிறப்பு.
இருப்பிடம் : திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து 15 கி.மீ.,தொலைவில் கொரடாச் சேரிகோயில் உள்ளது. அங்கிருந்து 7 கி.மீ.,தொலைவிலும், மன்னார்குடி வழியாக திருவாரூர் சாலையில் சென்றால் கமலாபுரத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவிலும் திருப்பணிப்பேட்டை கிராமம் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538