ராமநவமி, சித்திரை அட்சயதிருதியை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி
தல சிறப்பு:
ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு அயோத்திக்கு செல்லும் போது பரத்துவராஜர் முனிவர், ஆசிரமத்தில் தங்கி, திருமண கோலத்தில் சேவை சாதித்தது இங்கு தான் என கூறப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரதராஜர் திருக்கோயில்
கண்கொடுத்த வனிதம்(காவாளக்குடி)
கண்கொடுத்த வனிதம் அஞ்சல்
திருவாரூர் மாவட்டம்-610113
போன்:
+91- 94431-35129
பொது தகவல்:
மூலவர் கிழக்கு சன்னதியில் அருள்பாலிக்கிறார், கோயிலில் நுழைவுவாயில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. பிரகாரத்தில் கொடிமரம், பலி பீடம், உள் மண்டபத்தில் வலது பக்கம் நரசிம்மர் மடியில் லட்சுமி அமர்ந்து அருள்பாலிக்கிறார். வலது பக்கம் ஆஞ்சநேயரும் அவருக்கும் பின்பக்கம் ஆழ்வார்கள் அமர்ந்திருக்கின்றனர். உள் பிரகாரத்தில் ராஜகோபால சுவாமி அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
திருமண வரம் கிடைக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், நவகிரக தோஷ பீடைகள் தீரவும், கண் நோய் குணமடையவும் இங்க பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தயிர் சாதம் படைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என செவிவழிச் செய்திகள் கூறப்படுகிறது. சோழ மன்னர்கள் வழிபட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.
தல வரலாறு:
இங்குள்ள நயனவரதேஸ்வரர் திருக்கோயிலில் ஒருத்தாய் தன் குழந்தைக்கு கண் வேண்டி இறைவனிடம் வழிப்பட்டார். பின்னர் தன் குழந்தைக்கு கண் பார்வை கொடுத்தால், தன் கண்ணை வழங்குவதாக பிரார்த்தனை செய்துள்ளார். குழந்தைக்கு இறைவன் அருளால் பார்வை கிடைத்தது. பின்னர் அந்த தாய் தன் கண்ணை இறைவனுக்கு வழங்க முற்பட்ட போது, இறைவன் தடுத்து காட்சி அளித்ததால் இந்த ஊருக்கு கண் கொடுத்த வனிதம் என அழைக்கப்பட்டுள்ளது.
தாய் தன் பிள்ளைக்கு கண் பார்வை பெற்றப்பின் உறவினர்களிடம் சென்று தான்பட்ட துயரத்தை கூறுவது போன்று சிவனிடம் வரம்பெற்ற அந்த தாய் இங்குள்ள பெருமாள் கோயிலில் ஆசிப் பெற்று நடந்த விதத்தை கூறி கதறி அழுதுள்ளார் என்பதும் கூறப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு அயோத்திக்கு செல்லும் போது பரத்துவராஜர் முனிவர், ஆசிரமத்தில் தங்கி, திருமண கோலத்தில் சேவை சாதித்தது இங்கு தான் என கூறப்படுகிறது.
இருப்பிடம் : திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து 22 கி.மீ., தொலைவில் கோவில் உள்ளது. திருவாரூர்- தஞ்சாவூர் செல்லும் வழியில்15 கி.மீ., தொலைவில் உள்ள கொரடாச்சேரியில் தென் கிழக்கே 7 கி.மீ., தொலைவில் உள்ளது கண்கொடுத்தவனிதம் கிராமம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி, சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538.