இக்கோயில் தெற்கு பார்த்து அமைந்துள்ளது. பிரகாரத்தின் வடக்கு பக்கம் நுழைவு வாயில், மகா மண்டபத்தில் 500 பேர் அமர்ந்து சுவாமிதரிசனம் செய்லாம். மூலவர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார், பெரிய ஈட்டி மாணிக்கம் மற்றும் சிறிய ஈட்டி மாணிக்கம் தேவியர் ஆயிஷாவுடன் பட்டு உடையில் அருள்பாலிக்கிறார். ஐயனாருக்கு வல பக்கத்திலும், மதுரை வீரன் இடபக்கத்திலும் பேச்சியம்மனும் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கற்பகிரகத்தின் பின் மற்றும் வலப்பக்கம் பரந்த வெளியில் நந்தவனம் மற்றும் தலவிருட்சம் உள்ளது. துர்க்கை தனி சன்னதியில் வடக்குப்பக்கம் அருள் பாலிக்கிறார்.
பிரார்த்தனை
திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், திருஷ்டி நீங்கவும், பயண பாதுகாப்பிற்கும், புதிய வாகன யோகத்திற்கும், புதிய வீடு கட்டவதற்கும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும். பெரிய, சிறிய ஈட்டி மாணிக்கத்திற்கு மாப்பிள்ளை கோலத்திற்கு அலங்காரம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
1000 ஆண்டுள் பழமையானது. கடந்த 1996 மற்றும் 2002ல் புதுப்பித்து கூடுதல் கட்டங்களுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
தல வரலாறு:
கடந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். சோழர்கள் தங்கள் காலத்தில், இப்பகுதிக்கு நகர் வலம் வந்த போது சுயம்பாக வீற்றிருந்த ஐயனார், குதிரையை கரு நாகம் தீண்ட முற்பட்ட போது நாகத்தை தடுத்து குதிரையை காப்பாற்றினார். இந்த தகவல் தெரியாமல் சோழ மன்னன் சென்று விட்டார். அவர் இறக்கும் தருவாயில் அவரிடம் அசரீரியாக தோன்றி ஐயனார் தெரிவித்துள்ளார். இந்த விபரத்தை அவர் வம்சத்தினர்களிடம் தெரிவித்த நிலையில், அவர் வழித்தோன்றலில் வந்தவர்கள் கோயில் கட்டாமல் இருந்துள்ளனர். அவ்வழியே சென்றவர் ஒருவர் கற்பினியான தன் மனைவிக்கு நல்ல நிலையில் குழந்தை பிறந்தால் கோயில் கட்டுவதாக பிரார்த்தனை செய்துள்ளார். அதன்படி சிறிய கொட்டகை கட்டியுள்ளார். பின் நாளில் படிப்படியாக வளர்ச்சிப்பெற்றுள்ளது. நீடாமங்கலத்தில் தாழ்ந்தகுலத்தை சேர்ந்த ஐயனார் பக்தர் ஒருவர் இஸ்லாமிய பெண்ணான ஆயிஷாவை காதலித்தார். இதை பார்த்த அப்பகுதியினர் ஈட்டியால் குத்தி இருவரையும் ஓடம் போக்கி ஆற்றில் வீசினர். உடனே ஐயனார், உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டார். சிறது காலம் அந்த இடத்தில் வாழ்ந்துமறைந்தனர். அதனால் அவர்கள் இருவரைம் நினைவுகூர்ந்து தனித்தனி சன்னதியில் மாப்பிள்ளை மற்றும் புதுப்பெண் (தலையில் முக்காடு போட்ட நிலையில்) சிலை அமைக்கப் பட்டுள்ளது. இன்றளவும் காவல் தெய்வமாக விளங்குவதால் அந்த சாலையில் செல்லும் அனைவரும் வணங்கி செல்கின்றனர். திருவாரூர் பெரிய கோயிலை (தியாகராஜர்) விட பக்தர்கள் காணிக்கை அதிகளவில் சேர்வதும் இங்கு என்ற பெருமைக்குரியது.