Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அங்காள பரமேஸ்வரி
  உற்சவர்: அங்காள பரமேஸ்வரி அம்மன்
  அம்மன்/தாயார்: அங்காள பரமேஸ்வரி அம்மன்
  தல விருட்சம்: வேப்பமரம்
  தீர்த்தம்: சிறுவானி
  ஆகமம்/பூஜை : பேரூர் அகமத்தின் படி, ஒரு கால பூஜை
  புராண பெயர்: பேரூர்
  ஊர்: பேரூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அனைத்து அம்மன் கோயில்களை போல் இங்கும் பலவகை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு விளக்கு பூஜைகள் நடக்கும். நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்களுக்கும் ஒன்பது வகையான அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  பொதுவாக சிவன் கோயில்களில் நந்தியும், அம்மன் கோயிலில் சிம்மமும் வாகனமாக அமைப்பார்கள். ஆனால் இந்த அம்மன் கோயிலில் சிம்மத்திற்கு பதில் நந்தியை வாகனமாக அமைத்திருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், அங்காலம்மன் கோவில் வீதி, பேரூர், கோவை– 641010.  
   
போன்:
   
  +91 422 2606115 
    
 பொது தகவல்:
     
  பல ஆண்டுகளுக்கு முன்னர், இக்கோயிலில் உள்ள பேச்சியம்மனே ஒரு பெண்னுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு உள்ளது. இக்கோவிலில் குண்டம் திருவிழாவின் போது மக்கள் தீமிதி திருவிழாவே சாலையில் தான் நடைபெறுகிறது.  
     
 
பிரார்த்தனை
    
  முக்கிய பிரார்த்தனையாக கல்யானம் ஆகாதவர்கள் விரைவில் கல்யானம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். இக்கோயிலில் பேச்சியம்மன் உள்ளது. பேச்சியம்மன் சிறந்த மருத்துவச்சி என்றும் கூறுகின்றனர். கர்ப்பினிப்பெண்கள் இங்கு வந்து வேண்டுதல் வைத்தால் அவர்களுக்கு கட்டாயம் சுகப்பிரசவம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பவர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக இங்கு வந்து பக்தர்களுக்கு விருந்து கொடுத்தும், மண் சோறு சாப்பிட்டும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். அங்காளம்மனை தங்கள் குல தெய்வமாக வைத்துள்ளவர்கள், தங்களின் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும், சிறப்பு விஷேச காலங்களில் அன்ன தானமிட்டும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  இவை தவிர, அம்மன் உருவம் படைத்துள்ள பாம்பு புற்றில் ஒரு கருநாகமும், கோதுமை நாகமும் உள்ளது. இந்த நாகங்கள் பக்தர்களின் பார்வையில் படுவதில்லை. ஆனால், அந்த கோயிலின் அர்ச்சகரின் கண்களில் பல முறை தென்பட்டுள்ளது. மேலும் அந்த பாம்புகள் இரண்டும் சுமார் 25 அடிக்கு மேல் இருக்கும் என்று அக்கோயில் அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

முக்கிய திருவிழாக்கள் :  சித்திரைக்கனி, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்க்கிழமை, நவராத்திரி, மார்கழி மாத சிறப்பு வழிபாடு, புரட்டாசி மாத விரத வழிபாடு ஆகிய நிகழ்வுகள் இக்கோயிலின் முக்கியத் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் சித்திரைக்கனியன்று அங்காளம்மனுக்கு பழங்கள் மற்றும் காய்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கும்.
 
     
  தல வரலாறு:
     
  இக்கோயிலில் பல விசித்திரமான நிகழ்வுகள் கூறப்படுகிறது. அதில் இந்த அம்மனுக்கான பெயர் காரணம் தான் வியக்கத்தக்கது. சிவனும் பார்வதியும் நொய்யல் ஆறு வழியாக செல்லும் போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆழம் உள்ளதை பார்த்த பார்வதி, சிவனிடம்  நாதா அங்கு ஆழம் எனக்கூறியுள்ளார். அதன் விளைவு தான் அங்காளம்மன் எனப்பெயர் புணர்ந்துள்ளது.  இங்கு உள்ள அங்காளம்மன் பாறையால் சிலை வடிவம் அமைக்கப்படவில்லை. பல நுõற்றாண்டுகளுக்கு முன்னர் பாம்பு புற்று ஒன்று இருந்தது. அந்த பாம்பு புற்றுக்கு மக்கள் பால் ஊற்றுவது வழக்கம். நாளடைவில் அந்த பாம்பு புற்றின் தோற்றம் அம்மனின் வடிவம்போல் காட்சியளிக்க துவங்கியுள்ளது. இதனை அடுத்து, அங்கு அம்மன் எழுந்தருளியதாக கருதப்பட்டு மக்கள் அந்த பாம்பு புற்றுக்கு மஞ்சள் பூசி வழிபட துவங்கியுள்ளனர். பின்னர் நாளடைவில் தோற்றம் வலு பெற துவங்கியதால், பக்தர்கள் சார்பில் சிலைக்கு கண் மலர்கள் உள்ளிட்டவை அமைத்து வழி படுகின்றனர். இன்றும் அங்காளம்மனின் சிலை வடிவம் மண்ணில் தான் உள்ளது. அதனை உடைத்து மறு சீரமைக்கவில்லை. மேலும் அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்க்காக மட்டும் சிலை வடிவிலான ஓர் அம்மன் வைக்கப்பட்டுள்ளது. விழாக்காலத்தில் மட்டும் அந்த சிலைக்கு அபிஷேகங்கள் செய்வர்.  இக்கோயிலுக்கு கரிகால சோழன் வந்ததாகவும் ஒர் வரலாறு உண்டு. ஆனால், காலப்போக்கில் அவ்வரலாறுகள் மறைந்துள்ளது. கோயில் மக்கள் வாழும் இடத்தில் அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் கொலுசு சத்தம் கேட்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். இயற்கை சூழ்ந்துள்ள இடத்தில் அமையாவிட்டாலும் கூட, மக்களுக்கு பக்கபலமாக இருக்கும், மக்களுள் ஒருவராக கோயில் அமைந்துள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக சிவன் கோயில்களில் நந்தியும், அம்மன் கோயிலில் சிம்மமும் வாகனமாக அமைப்பார்கள். ஆனால் இந்த அம்மன் கோயிலில் சிம்மத்திற்கு பதில் நந்தியை வாகனமாக அமைத்திருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar