Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நஞ்சுண்டேஸ்வரர்
  உற்சவர்: பிரதோஷ நாயனார்
  அம்மன்/தாயார்: லோகநாயகி
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: தெப்பம்
  ஆகமம்/பூஜை : சிவாகமம்
  ஊர்: காரமடை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலில் உள்ள சிவலிங்கம், பிற தலங்களைப்போல இல்லாமல் சற்று பட்டையாக இருக்கிறது. இந்த லிங்கம் செந்நிறமாக காட்சியளிப்பது மற்றொரு விசேஷம். இவருக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இந்த அமைப்பை காண்பது அரிது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், காரமடை 641 104. மேட்டுப்பாளையம் தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 4254 272 318, 273 018, 94420 16192. 
    
 பொது தகவல்:
     
  மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே, சிவன் சன்னதியைச் சுற்றிலும் கோஷ்டத்தில் 8 யானைகள் சுவாமி விமானத்தை தாங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஒரு யானை சிற்பத்திற்கு கீழ் பிரம்மாவும், மற்றொரு யானைக்கு கீழே லட்சுமி நாராயணரும் காட்சி தருவது விசேஷம். சிவன், பாற்கடல் விஷத்தை ஒரு பிரதோஷ வேளையில் அருந்தினார். எனவே பிரதோஷ நேரத்தில் இங்கு சிவனுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. அவ்வேளையில் விஷக்கடி பட்டவர்கள் வேண்டிக்கொள்ள அவை நீங்குவதாக நம்பிக்கை. பிற நாட்களில் மாலை இதே வேளையிலும் இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

அம்பாளின் திருநாமம்-லோகநாயகி அம்பாள். விநாயகர், ஆறுமுகவேலவர், சண்டிகேஸ்வரர், கால பைரவர் ஆகியோருக்கும் இங்கே சன்னதிகள் உண்டு.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமண, சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் சிவன், அம்பாள், சிவதுர்க்கைக்கு வஸ்திரம் அணிவித்து, வேண்டிக்கொள்கிறார்கள்.

சித்திரையில் நஞ்சுண்டேஸ்வரருக்கு தேனபிஷேகம் செய்வது சிறப்பு. வைகாசியில் கரும்புச் சாறு அபிஷேகமும், ஆனியில் தீர்த்தவாரியும், ஆவணியில் நெய்யபிஷேகமும், புரட்டாசியில் பால் தயிர் அபிஷேகமும் செய்து வேண்டிக் கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்!
 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  அம்பிகை, லோக நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். சிவனின் உடலில் விஷம் இறங்காமல் செய்து, மக்களைக் காப்பாற்றியதால் இவள் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். இரண்டு கரங்களில் தாமரையுடன் காட்சி தரும் இவளது சிற்பம் திருவாட்சியுடன் சேர்த்து வடிக்கப்பட்டிருக்கிறது. சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்த தலம் இது. சிவன், அம்பிகைக்கு நடுவில் ஆறுமுக வேலவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இம்மூவரது சன்னதியும் ஒரே வரிசையில் அமைந்திருக்கிறது. 12 கரங்களுடன் காட்சி தரும் முருகனுடன் வள்ளி, தெய்வானையும் உள்ளனர். சிவனுக்கு இடதுபுறத்தில் ரங்கநாதர் தனிக்கோயிலில் இருக்கிறார். இவ்விருவருக்குமான தீர்த்தம் கோயிலுக்குப் பின்புறம் உள்ளது. மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜையின்போது தினமும் நஞ்சுண்டேஸ்வரர், ரங்கநாதர் கோயில் அர்ச்சகர்கள் இருவரும் ஒன்றாக சென்று தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்கிறார்கள். நவராத்திரி விழாவின் பத்தாம் நாளில் ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இக்கோயிலுக்கு வந்து அம்பு போடும் நிகழ்ச்சிக்கு சிவனை அழைத்துச் செல்வது விசேஷம். அப்போது சிவன், பெருமாள் இருவரும் அருகருகில் செல்கின்றனர். அந்நேரத்தில் மட்டுமே இவ்விருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

இத்தலத்து விநாயகர், "செண்பக விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். சிவன் சன்னதியை சுற்றி வரும்போது கோஷ்டத்தின் அடியில் பாதாள விநாயகர் இருக்கிறார். மிகவும் சிறிய மூர்த்தியான இவரை வணங்கிவிட்டே பரிவார தேவதைகளை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் தனித்து காட்சி தருகிறார். இவருக்கு வியாழக்கிழமை குரு ஓரையில் (காலை 6.30  7 மணி) சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

கோஷ்டத்தில் பிரதோஷமூர்த்தி, சிவதுர்க்கையும் இருக்கிறாள். துர்க்கைக்கு அருகில் சிவலிங்கத்தை ராகு, கேது வழிபடும் சிற்பம் இருக்கிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் துர்க்கையை வணங்கி, இந்த லிங்கத்தையும் தரிசித்துச் செல்கிறார்கள். நவக்கிரக சன்னதி கிடையாது. கால பைரவர், சூரியன் உள்ளனர். மைசூரில் உள்ள நஞ்சன்கூடு தலத்தை மாதிரியாகக் கொண்டு, இந்தக் கோயிலை அமைத்ததாகச் சொல்வர்.

கர்நாடகாவில் நஞ்சன்கூடில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குவது. நஞ்சுண்டேஸ்வரர், கோயில். அதே பெயரில் தமிழ்நாட்டில் காரமடையிலும் ஓர் கோயில் உள்ளது.  நஞ்சுண்டேஸ்வரர் கோவை காரமடைக்கு வந்தது எப்படி? ஒரு காலத்தில் நஞ்சன்கூடில் வாழ்ந்த ஒரு பிரிவினர், சூழ்நிலை காரணமாக அங்கிருந்து காரமடைக்கு இடம் பெயர்ந்தனர். தாங்கள் வணங்கி வந்த நஞ்சுண்டேஸ்வரரை, தாங்கள் இடம் பெயர்ந்த இடத்திலும் வணங்க வேண்டும். என்ற ஆவலில் அவருக்கு காரமடையில் கோயில் அமைத்தனர்.  ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான இந்த கோயில் வீரநஞ்சராயர் என்பவரால் கட்டப்பட்டது. காரமடையின் மையப்பகுதியில் ரங்கநாதர் கோயில் அருகிலேயே இந்த கோயில் உள்ளது. கோயிலின் முன்பு உயர்ந்த தீபத்தூண் காணப்படுகிறது. கருவறையும் அர்த்த மண்டபமும் பழமையானவை. அர்த்த மண்டபத்தில் ஒருபுறம் விநாயகரும் முருகனும் இருக்க, அவர்களுக்கு முன்னே நந்தி உள்ளார். கருவறையில் ஆலகால விஷத்தை உண்டு உயிர்களைக் காப்பாற்றிய நஞ்சுண்டேஸ்வரர் லிங்கவடிவில் காட்சி தருகிறார். பிராகாரங்களில் சூரியன், கால பைரவர், சனீஸ்வரன், பிள்ளையார் தரிசனம் கிடைக்கிறது. அன்னை லோகநாயகி தனி சன்னிதியில் அருள் புரிகிறாள். ஆறுமுகவேலவர், வள்ளி தெய்வானையோடு தனி சன்னிதியில் காட்சி தருகிறார். காரமடை நஞ்சுண்டேஸ்வரரை வணங்கினால் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். கடுமையான, நோய்களும் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 
     
  தல வரலாறு:
     
  அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மத்தாக பயன்பட்ட வாசுகி நாகம், களைப்பில் விஷத்தை உமிழ்ந்தது. தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

சிவன் தேவர்களைக் காக்க, விஷத்தை விழுங்கினார். அப்போது அம்பிகை, அவரது கழுத்தைப் பிடித்து விஷம் உடலுக்குள் செல்லாமல் நிறுத்தினாள். விஷயம் கழுத்திலேயே தங்கியது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

தேவர்களை காப்பதற்காக விஷத்தை உண்டவர் என்பதால் இவர், "நஞ்சுண்டேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். திருநீலகண்டன் என்றும் இவருக்கு பெயர் உண்டு.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் உள்ள சிவலிங்கம், பிற தலங்களைப்போல இல்லாமல் சற்று பட்டையாக இருக்கிறது. இந்த லிங்கம் செந்நிறமாக காட்சியளிப்பது மற்றொரு விசேஷம். இவருக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இந்த அமைப்பை காண்பது அரிது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar