பிரசன்ன விநாயகர், காட்சி விநாயகர், சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், விஷ்ணு துர்கை மற்றும் நவகிரகங்கள் ஆகிய தெய்வங்கள் உள்ளன.
பிரார்த்தனை
இங்கு அமைந்துள்ள பிரசன்ன விநாயகரை வணங்கினால் திருமணம் கைகூடும், குழந்தை பேறு கிட்டும், தொழில் விருத்தி பெறும், கல்விவளம் செல்வ வளம் பெருகும், நினைத்த காரியம் தடங்கள் இல்லாமல் வெற்றி பெறும்.
நேர்த்திக்கடன்:
அபிஷேக அலங்காரம் செய்தும், அன்னதானம் செய்தும், சிதரு தேங்காய் உடைத்தும் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.
தலபெருமை:
பக்தர்களின் நினைத்த காரியம் நிறைவெற்றும் சிறப்பு பெற்ற விநாயகப்பெருமான் திருத்தலம்.
தல வரலாறு:
இத்தலமானது 1937ம் ஆண்டு சிரவை ஆதினம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களது அருளார்ந்த தலைமையில் நிறுவப்பட்டது. பிறகு கோயில் சேதமடைந்ததால் 2012ம் வருடம் திருப்பணி தொடங்கி 11.04.2016 அன்று தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பேரூர் ஆதினம் கயிலை குருமணி திருப்பெருந்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்களின் அருளார்ந்த ஆசிகளோடும், சிரவை ஆதினம் குருமகா சன்னிதானம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களது அருளார்ந்த தலைமையில், பேரூர் ஆதினம் இளையபட்டம் கயிலை புனிதர் தவத்திரு மருதாச்சல அடிகளார், தென்சேரிமலை திருநாவுக்கரசர் மடம் தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார், பேரூர் பச்சாபாளையம் பிள்ளையார் பீடம் தவத்திரு பொன்மணிவாசக அடிகளார் ஆகியோரது முன்னிலையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு பிரசன்ன விநாயகருக்கு எதிரே நந்தி வாகனம் அமைந்துள்ளது இத்தல சிறப்பாகும்.