இக்கோயிலின் ஆண்டுவிழா, ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும். அச்சமயங்களில், நேர்ச்சிக்கடன் செலுத்துபவர்களும், வெளியூர் வாசிகளும் வந்திருந்து விழாவை சிறப்பிப்பார்கள். அதை தவிர, இக்கோயிலில், கிடாய் வெட்டு நோன்பி வெகு விமர்சியாக கொண்டாடப்படும். கோவை மாவட்டத்தில் கிடாய் வெட்டப்படும் கோயில்கள் மிகவும் குறைவு. மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோயிலை தவிர, வேறு எங்கும் பெரும்பாலும் கிடாய் வெட்டமாட்டார்கள். ஆனால், கோவை நகர் பகுதிக்கு மிகவும் அருகில் உள்ள வடவடள்ளி கருப்பராயன் கோயிலில் தான் கிடாய் வெட்டுகிறார்கள். இக்கோவில் சுமார், 400 ஆண்டுகள் பழமைவாய்ந்ததால் இங்கு பாரம்பரியமாக கிடாய் வெட்டப்பட்டு வருகிறது. இதை தவிர, கோயில் வளாகத்தில் உள்ள ஈஸ்வரனுக்கு ஒவ்வொரு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் செய்யப்படும்
தல சிறப்பு:
மருதமலை முருகன் கோயில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதால், கருப்பராயன் தான் மருதமலை முருகனுக்கு காவலாக இருந்ததாகவும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கருப்பராயன் திருக்கோயில்,
லிங்கேகவுண்டன்புதூர், வடவள்ளி, கோயம்புத்தூர் -641041
போன்:
+91 9894222948, 8807776777
பொது தகவல்:
கருப்பாரயன் கோயிலானது மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ளது. மருதமலை முருகன் கோயில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதால், கருப்பராயன் தான் மருதமலை முருகனுக்கு காவலாக இருந்ததாகவும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கை எழில் சூழ்ந்தநிலையில் கோயில் இல்லை என்றாலும், வனத்திற்கும் நகர் பகுதிக்கும் நடுவில் மிகவும் ரம்யமான ஒரு சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பெரிதாக எவ்வித, விசித்திரமான நிகழ்வுகளும் நடக்கவில்லையென்றாலும். கோயில் எழுப்புவதற்கு முன், பாறையை மரத்தடியில் வைத்து வணங்கியதால், கருப்பராயனுக்கு சக்தி அதிகம் என்கிறார்கள் மக்கள். மேலும், வேண்டியவை அனைத்தும் கட்டாயம் கிடைப்பதால் எப்போதும் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.
பிரார்த்தனை
இங்கு முக்கிய பிரார்த்தனையாக தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வார்கள். அதை தவிர, குடும்பத்தில் அமைதி வேண்டியும் பிரார்த்தனைச் செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
தொழில் சிறப்பாக நடந்தால், கிடாய் வெட்டியும், குழந்தை வரம் வேண்டியவர்களுக்கு குழந்தை கிடைக்கும் பட்சத்தில் கோயில் உண்டியலில் தங்க நாணயங்கள் போட்டும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். குழந்தை இல்லாதவர்கள், கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் ஊஞ்சலை கட்டி குழந்தை வேண்டியும், அதேபோல், கடன் பிரச்சனை நீங்கி, குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டியும் பிரார்த்தனை செய்கிறார்கள். தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதும் கோயில் திருப்பணிகள் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் குழந்தைகளுக்கு *படம் அடித்து கயிறு கட்டுதலும், முடிக்காணிக்கை செலுத்தியும் சிலர் நன்றியை வெளிப்படுத்துவர்.
தலபெருமை:
கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறினால், குழந்தைகளுக்கு *படம் அடித்து கயிறு கட்டுதலும், முடிக்காணிக்கை செலுத்தியும் சிலர் தங்கள் நன்றியை வெளிப்படுத்துவர்.
தல வரலாறு:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அருகில் கோயில் அமைந்துள்ளது. இங்கு உள்ள கருப்பராயன் சுயம்பு வடிவமாகவோ, அல்லது ஒரு கல்லால் உருவாக்கப்பட்டதோ அல்ல. சுமார், 400 ஆண்டுகளுக்கு முன் தற்போதைய வடவள்ளி பகுதி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். அப்போதைய நிலையில், முன்னோர்கள் வேட்டைக்காக வனப்பகுதிக்குள் செல்லும்போது, ஒரு மரத்தின் கீழ், தங்களின் அச்சத்தை போக்குவதற்காக கல்லை வைத்து வழிபட்டு, வேட்டைக்காக சென்றுள்ளனர். பின், அது காலப்போக்கில், கல்லிற்க்கு பெயர் சூட்டி, அதனை ஊர் காவல் தெய்வமாக வழிபடத்துவங்கியுள்ளனர். அதற்கு பின், வந்த முன்னோர்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் பால வேளாளக்கவுண்டர்கள், கருப்பராய சுவாமிக்கு கல்லினால் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து, வந்த இளைய தலைமுறையினர், பல்வேறு காரணங்களால் கோயிலில் கும்பாபிஷேகம் செய்யாமல் விட்டுவிட்டனர்.இன்றைய நாள் வரையிலும், கருப்பராயன் தான் வடவள்ளியின் காவல் தெய்வதாக இருக்கிறார் என்பதில் அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். வடவள்ளி கருப்பராயனை வெளியூரை சேர்ந்த பலரும் தங்களின் குல தெய்வமாக வைத்து வணங்கி வருகின்றனர். தற்போது, கோயிலின் பெருமையை உணர்ந்த, அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன், வெற்றிகரமாக கும்பாபிஷேகம் நடத்தினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மருதமலை முருகன் கோயில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதால், கருப்பராயன் தான் மருதமலை முருகனுக்கு காவலாக இருந்ததாகவும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பிடம் : கோவை டவுன்ஹாலில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் மருதமலை சாலை பி.என்.,புதூர் உள்ளது. பி.என்.,புதூரில் இருந்து சுமார் இரண்டு கி.மீ.,தூரத்தில் சாலையின் இடது புறத்திலேயே கோயில் அமைந்துள்ளது.