Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கல்யாண சுப்பிரமணிய சுவாமி
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  தல விருட்சம்: வில்வம், வேம்பு, அரசு, காட்டுமல்லி மற்றும் காரை
  ஊர்: குமரன் குன்று
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  முருகனுக்குகந்த சஷ்டி, விசாகம், கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் உண்டு. பங்குனி உத்திர விழாவும், தைப்பூசத் திருவிழாவும் இத்தலத்தின் முக்கியப் பெருவிழாக்கள். 13 நாட்கள் கொண்டாடப்படும் தைப்பூச விழாவில், கோயில்த் தேர்மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் பெருந்திரளான பக்தர்கள் வலம் வருவார்கள் இவ்விழாவில் அனைத்துப் பிரிவினரும் ஒன்று சேர்ந்து வடம் பிடித்து தேர்இழுப்பதும், கிராம சாந்தி கலச பூஜையை ஆதிதிராவிட மக்கள் முன்னின்று செய்வதும் குறிப்பிடத்தக்கது. பங்குனி உத்திர திருவிழாவில், கொடுமுடியில் இருந்து 108 கலசங்களில் தீர்த்தம் எடுத்து வந்து, அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பூஜை செய்வர். பின்னர் அங்கிருந்து தாரை தப்பட்டை ஓசை முழங்க, பக்திப் பரவசத்துடன் பாடல்களைப் பாடியவாறு தீர்த்தக் கலசத்தை சுமந்து வருவர். அத் தீர்த்தம் கொண்டு குமரன் குன்று மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின் உற்சவர் சிறிய தேரில் எழுந்தருளி வெளிப்பிராகாரத்தில் வலம் வருவார். காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என நான்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. குமரன் தமிழ்க் கடவுள் என்பதால், தமிழ் முறைப்படியே பூஜைகள் நடந்து வருகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  தமிழ் வருடப்பிறப்பான சித்திரை முதல் நாள் சூரிய உதயத்தின்போது சூரிய ஒளி சுவாமியின் மீது படர்வது, சூரிய பகவானே தன் கதிர்கள் மூலம் கதிர்வேலனைத் தொழுவது போன்ற உணர்வைத் தருகிறது. இக்காட்சியைக் காண முந்தைய நாள் இரவே பக்தர்கள் கோயில் வளாகத்தில் கூடியிருந்து நாமஜபம் செய்தும், பஜனைப் பாடல்கள் பாடியும் முருகனை துதிக்கின்றனர். காலையில் சூரிய ஒளிக்கதிர் சுவாமி மீது விழும் காட்சியைக் கண்டு மெய்சிலிர்க்கின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமரன் குன்று, வடவள்ளி - அஞ்சல் அன்னுõர் வட்டம் கோயம்புத்தூர்  
   
போன்:
   
  +91 4254 288206, 98426 69100 
    
 பொது தகவல்:
     
  அழகிய தோரண வாயிலைக் கடந்தவுடன் புலிப்பாணி சித்தர் புலியின் மீது அமர்ந்த நிலையில் உள்ளார். இடதுபுறம் அரசமர விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்லும் பாதையில் இடும்பன், கடம்பன் சன்னிதிகள் எதிர் எதிரே உள்ளன. கருவறையில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையோடு கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். பின்பகுதியில் வைத்தீஸ்வரர், தையல்நாயகி சன்னிதி விமானங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புறம் மகா கணபதி, நவகிரகம், வீரபாகு, அருணகிரிநாதர் சந்நதிகள் உள்ளன. கொங்கு நாட்டு வழக்கப்படி தீப ஸ்தம்பம் கோயிலுக்கு வெளியேயும், கொடிமரம் உட்புறமும் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
   உடல் நோய், மனநோய் உள்ளவர்கள் இத்தலத்தில் தங்கியிருந்து காலையும் மாலையும் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு முருகனை வழிபட்டு, நோய் நீங்கப் பெற்று நலமுடன் திரும்புகின்றனர். ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் குறைகளை இறைவனிடம் முறையிட்டு மனநிம்மதி பெறுகின்றனர். பூக்கேட்டல் நிகழ்வு மூலம் காரியசித்தி பெற்று வருகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இறைவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  எதிரே ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவரை 48 முறை வலம் வந்துவேண்டினால், சனியின் தாக்கம் குறையும் என்கின்றனர். சுப்பிரமணிய சுவாமியின் அருளால் திருமணத் தடை நீங்கி, பலன் பெற்றோர் ஏராளம். அவர்கள் இத்தலத்திலேயே திருமணம் செய்துகொள்வது உண்டு. கல்யாண சுப்பிரமணியர் என்பதால் திருமணம் கைகூடி வருவதில் வியப்பு ஏதும் இல்லை என்கின்றனர் பக்தர்கள். கோயில் வளாகத்தின் வடபகுதியில் வில்வம், வேம்பு, அரசு, காட்டுமல்லி மற்றும் காரை ஆகிய ஐந்து விருட்சங்கள் ஒரே இடத்தில் வளர்ந்துள்ளன. அதன் கீழே பஞ்சதரு விநாயகர், ஈசன், நாகர், சக்தி உடன் அமைந்திருப்பது சிறப்பு. இவர்களை ஒரு சேர வேண்டினால் நினைத்த காரியம் கை கூடும்.
 
     
  தல வரலாறு:
     
  தவநெறியில் சிறந்திருந்த அவர்களது உயர்ந்த எண்ணங்களின் அதிர்வலைகள் அவ்விடங்களை புண்ணியத் தலங்களாக மாற்றின. அப்படியொரு தலம்தான் குமரன் குன்று. மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் தென்புறம் நெடிய மரங்களும் அடர்த்தியான சோலைகளும் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது குமரன் குன்று. அக்காலத்தில் இக்குன்றைச் சுற்றிலும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக பலர் ஓட்டி வருவார்கள். ஆநிரைகள் மேயத் தொடங்கியதும், அவற்றை மேய்க்க வந்த சிறுவர்கள் விளையாடத் தொடங்குவர். ஒரு நாள் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது வேப்ப மரம் ஒன்றின்கீழ் பாதி புதைந்த நிலையில் கற்சிலை ஒன்று இருப்பதைக் கண்டனர். அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது, சிறிது பின்னமான தண்டபாணியின் சிலை வெளிப்பட்டது. விஷயம் அறிந்து வந்த ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடி சிறுகோயிலை அமைத்து, அதில் தண்டபாணியை பிரதிஷ்டை செய்து வணங்கினர். வணங்கியோர் பெற்ற வளமும் நலமும் கண்ட பக்தர்கள் பெரும் அளவில் வந்துசேர, கோயிலும் வளர்ந்தது. இந்நிலையில், பழுதடைந்த சிலையை வைத்து பூஜிப்பது ஆகம விதிகளுக்கு முரண்பாடானது என்பது தெரியவர, புதிய சிலையை நிறுவ முடிவு செய்தனர். கோயில் திருப்பணி நடந்து வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியசுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இத்தலம் குமரன் குன்று என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தமிழ் வருடப்பிறப்பான சித்திரை முதல் நாள் சூரிய உதயத்தின்போது சூரிய ஒளி சுவாமியின் மீது படர்வது, சூரிய பகவானே தன் கதிர்கள் மூலம் கதிர்வேலனைத் தொழுவது போன்ற உணர்வைத் தருகிறது. இக்காட்சியைக் காண முந்தைய நாள் இரவே பக்தர்கள் கோயில் வளாகத்தில் கூடியிருந்து நாமஜபம் செய்தும், பஜனைப் பாடல்கள் பாடியும் முருகனை துதிக்கின்றனர். காலையில் சூரிய ஒளிக்கதிர் சுவாமி மீது விழும் காட்சியைக் கண்டு மெய்சிலிர்க்கின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar