சித்திரையில் 10 நாள் உற்சவம் மற்றும் அம்மனுக்குரிய அனைத்தும் விசேஷங்களும் நடைபெறுகின்றன.
தல சிறப்பு:
இந்த கோயிலின் முன் பக்கம் பழமையான சோழர்காலத்து சிவன்கோயிலும், வடக்கு பக்கம் ஜலகிரிஸ்வரர், தெற்கே காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியர் பிறந்த இருள் நீக்கி கிராமமும், கிழக்கே திருநெல்வேலிக்காவல் நெல்லிவன நாதர் கோயிலும், மேற்கே திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலும் இருப்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில்,
பெரிய குருவடி மற்றும் அஞ்சல்,
வடபாதிமங்கலம் வழி,
மன்னார்குடி தாலுகா,
திருவாரூர் மாவட்டம்610206.
போன்:
+91 95853 74125
பொது தகவல்:
கிழக்குப்பக்கம் வாயில் கற்பகிரகத்தில் ஒரு கலசம், மகா மண்டபத்தில் நான்கு தூன்கள். 200 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். கற்பக விநாயகர், கழுவுடையான், காத்தவராயன் ஆரியமாலா மற்றும் கருப்பழகியுடனும், கருப்பண்ணசாமி பொம்மியுடனும், முத்தாலு ராவுத்தர் குதிரையிலும், கருப்பாயி அம்மன், பேச்சியம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
புத்திரபாக்கியம், உடல் பிணி, கண்நோய், அம்மை, செல்வ வளத்திற்கும் பரிகாரஸ்தலம். கண்நோய் உள்ளவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இங்கு குல தெய்வ வழிபாடும் நடக்கிறது.
நேர்த்திக்கடன்:
காவடி மற்றும் பால்குடம் எடுத்தல், தொட்டில் கட்டுதல், கண்ணடக்கம் காணிக்கை செலுத்தல், தென்னம்பிள்ளை மற்றும் உப்பு, மிளகு செலுத்துவது நேர்த்திக்கடனாக செலுத்துக்கின்றனர்.
தலபெருமை:
மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் பேரன், கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் மகனும், முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன் எனும் சோழ அரசர்களின் உடன்பிறப்பான வீர ராஜேந்திர சோழன் கி.பி.1063 ம் ஆண்டு மணி முடிசூடி 1070ம் ஆண்டு வரை சோழ பேரரசனாக விளங்கினான். அவன் காலத்தில் இப்பகுதியில் கட்டப்பட்ட சிவத்தலத்திற்கும் மேற்கில் கோயில் கொண்டு அம்மன் அருள்பாலிப்பது தலத்திற்கு பெருமை சேர்கிறது.
தல வரலாறு:
வீரராஜேந்திர சோழன் கி.பி.1063 ம் ஆண்டு மணி முடிசூடி 1070ம் ஆண்டு வரை சோழ பேரரசனாக விளங்கினான். வீரராஜேந்திரசோழனின் ஆணை ஒன்று கருவூரில் உள்ள பசுபதீஸ்வரர் திருக்கோயில் எனும் திருவாநிலை மகாதேவர் கோயிலில் கருவறையில் கல்வெட்டுள்ளது. இதில் பயிர்த்தொழில் சிறக்கவும், செல்வவளம் சேர்க்கவும் இப்பகுதியில் கோயில் கொள்ள வேண்டும் என எழுதியிருந்தான். தற்போது பெரிய குருவடியில் உள்ள அகஸ்தீஸ்வரர் எனும் சிவத்தலம் கற்றளியாக விளங்குகிறது. இத்தலத்திற்கும் அருகில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் பழங்காலம் முதல் புதுப்பித்து பராமரித்து வருகின்றனர். பழமையான கோயில். தற்போது புதுப்பித்து 2013 செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இந்த கோயிலின் முன் பக்கம் பழமையான சோழர்காலத்து சிவன்கோயிலும், வடக்கு பக்கம் ஜலகிரிஸ்வரர், தெற்கே காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியர் பிறந்த இருள் நீக்கி கிராமமும், கிழக்கே திருநெல்வேலிக்காவல் நெல்லிவன நாதர் கோயிலும், மேற்கே திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலும் இருப்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
இருப்பிடம் : திருவாரூரில் இருந்து மன்னார்குடி சாலையில் லட்சுமாங்குடியில் இறங்கி உள்ளே 8 கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது. திருவாரூரில் இருந்து 25 கி.மீ.,தொலைவில் உள்ளது. மன்னார்குடியில் இருந்து 15 கி.மீ., தொலைவிலும் கோட்டூரில் இருந்து 12 கி.மீ.,தொலைவிலும் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்,மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி,சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
1. ஹோட்டல் செல்வீஸ், புதிய பஸ் நிலையம் அருகில், போன்:04366320625 கட்டணம்:ரூ.450 முதல் வி.ஐ.பி.சூட் ரூ.1750 வரை ஏ.சி. மற்றும் நான் ஏ.சி வசதி
2. ஹோட்டல் கிரின்ராயல் புதிய பஸ் நிலையம் எதிரில் போன் 04366221114,221115 கட்டணம் வரி உட்பட ரூ.999 முதல் வி.ஐ.பி.சூட் 1799 வரை அனைத்தும் ஏ.சி.
3.லாட்ஜ் பிரசிடென்சி புதிய பஸ் நிலையம் எதிரில் போன்உ04366222538 கட்டணம் ரூ.400 முதல் ரூ.1600 வரை ஏ.சி., நான் ஏசி வசதிகள்
4.மீனாட்சி லாட்ஜ், பழைய திருத்துறைப்பூண்டி ரோடு, கீழ்ப்பாலம் அருகில், கட்டணம் ரு.200 முதல் ஏ.சி., ரூம் தனிக்கட்டணம், செல்:04366 222279.