சித்திரையில் 10 நாள் உற்சவம் மற்றும் அம்மனுக்குரிய அனைத்தும் விசேஷங்களும் கொண்டாடப்படுகின்றனர்.
தல சிறப்பு:
இந்த கோயிலின் வடக்கே, பழமையான சோழர்காலத்து சிவன் மற்றும் வடக்கு பக்கம் ஜலகிரிஸ்வரர் கோயிலும், தெற்கே காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியர் பிறந்த இருள் நீக்கி கிராமமும், கிழக்கே திருநெல்வேலிக்காவல் நெல்லிவனநாதர் கோயிலும், மேற்கே திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலும் இருப்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை திறந்திருக்கும்
கிழக்குப்பக்கம் வாயில் கற்பகிரகத்தில் ஒரு கலசம், மகா மண்டபத்தில், 200 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். மகாமண்டபத்தில் விநாயகர், பாலமுருகன், வைணவராகப் பெருமாள், பெத்தனர்சுவாமி பொம்பியுடனும், உத்தரண்டாயர்(சிவன்) மற்றும் பேச்சியம்மாள் அருள் பாலிக்கின்றனர். கோயிலுக்கும் வெளியில் வீரன் வாயில் தெய்வமாகவும், பெத்தனார்சாமி நின்ற நிலையிலும், குளத்தின் அருகில் வெள்ளை விநாயகர் தனி சன்னிதியிலும், அருகில் வாய்க்காலில் கிடந்த லிங்கத்தை சிறு கொட்டகை அமைத்துள்ளனர்.
பிரார்த்தனை
குடும்ப வழிபாடு, திருமணத்தடை, புத்திரபாக்கியம், தொழில் அபிவிருத்தி, பொற்கொல்லர்கள் போன்ற ஏராளமான பிரார்த்தனைகளுக்காக வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும், புதிய தாணிங்கள் மற்றும் கிடா காணிக்கை, முளைப்பாரி அமைத்தல், பால் பள்ளையம் மற்றும் சேவல் விடுதல் போன்றவை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பழங்காலத்தில் பொற்கொல்லர்கள் குல தெய்வ வழிபாடு நடத்தியுள்ளனர். பிற்காலத்தில் சேதமடைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்த சாமிதேவர் கனவில் தோன்றிய அம்மன் கோயிலை புதுப்பிக்க கூறியதன் பேரில் சொந்த முயற்சியில் கோயிலை புதுப்பித்துள்ளார்.
தல வரலாறு:
சோழர்காலத்தில் சோழர் வம்சத்தினர்களுக்கு தங்க நகை மற்றும் ஆபரணங்கள் செய்து வழங்கிய பொற்கொல்லர்கள் அப்பகுதியில் தங்கினர். சோழர் குலத்தினர்களுக்கு நகை செய்ய செல்லும் முன் இக்கோயிலில் முதலில் வழிபாடு செய்துள்ளனர். காலப்போக்கில் பழுதடைந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி கனவில் தோன்றி பழுதடைந்துள்ள கோயிலை கட்டி புதுப்பிக்க அம்மன் தெரிவித்ததன் பேரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பின்னர் அப்பகுதியினர் பராமரித்து குல தெய்வ வழிபாடுநடத்தி வருகின்றனர் பழமையான கோயிலாகும். தற்போது புதுப்பித்து 2013 செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இந்த கோயிலின் வடக்கே, பழமையான சோழர்காலத்து சிவன் மற்றும் வடக்கு பக்கம் ஜலகிரிஸ்வரர் கோயிலும், தெற்கே காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியர் பிறந்த இருள் நீக்கி கிராமமும், கிழக்கே திருநெல்வேலிக்காவல் நெல்லிவனநாதர் கோயிலும், மேற்கே திருராமேஸ் வரம் ராமநாதசுவாமி கோயிலும் இருப்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
இருப்பிடம் : திருவாரூரில் இருந்து மன்னார்குடி சாலையில் லட்சுமாங்குடியில் இறங்கி உள்ளே 10 கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது. மன்னார்குடியில் இருந்து 15 கி.மீ., தொலைவிலும், கோட்டூரில் இருந்து 12 கி.மீ.,தொலைவிலும் கோயில் உள்ளது. திருவாரூரில் இருந்து 25 கி.மீ.,தொலைவிலும் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்,மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி,சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
1. ஹோட்டல் செல்வீஸ், புதிய பஸ் நிலையம் அருகில், போன்:04366320625 கட்டணம்:ரூ.450 முதல் வி.ஐ.பி.சூட் ரூ.1750 வரை ஏ.சி. மற்றும் நான் ஏ.சி வசதி
2. ஹோட்டல் கிரின்ராயல் புதிய பஸ் நிலையம் எதிரில் போன் 04366221114,221115 கட்டணம் வரி உட்பட ரூ.999 முதல் வி.ஐ.பி.சூட் 1799 வரை அனைத்தும் ஏ.சி.
3.லாட்ஜ் பிரசிடென்சி புதிய பஸ் நிலையம் எதிரில் போன்உ04366222538 கட்டணம் ரூ.400 முதல் ரூ.1600 வரை ஏ.சி., நான் ஏசி வசதிகள்
4.மீனாட்சி லாட்ஜ், பழைய திருத்துறைப்பூண்டி ரோடு, கீழ்ப்பாலம் அருகில், கட்டணம் ரு.200 முதல் ஏ.சி., ரூம் தனிக்கட்டணம், செல்:04366 222279.,