கிழக்குப்பக்கம் வாயிலில், மகாமண்டபத்தில் 300 பேர் அமர்ந்து தரிசனம் செய்யவும், வடது மற்றும் இடது பக்கம் தலா 100 பேர் அமர்ந்து குத்து விளக்கு பூஜை செய்யும் வகையில் இட வசதி உள்ளது. மூலவர் கிழக்குப் பக்கமும், அம்மன் தெற்கு பக்கமும் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். மேலும் நுழைவு வாயிலின் இடதுபக்கம் சூரியன், கன்னி மூலையில் சித்தி விநாயகர் ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியிலும், பரந்த வெளியில் லிங்கோத்பவர், கல்வித்தாய் சரஸ்வதியும் அதன் அருகில் தனி சன்னிதியில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் தனி கலசம் கூடிய தனி சன்னிதியிலும் அருள்பாலிக்கின்றனர். துர்க்கை வடக்கு பக்கமும், சண்டிகேஸ்வரர் தெற்கு பக்கமும் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
தோல் நோய்கான பரிகார ஸ்தலம். சகல ஐஸ்வர்யங்களுக்கும், திருமணத்தடை மற்றும் புத்திர பாக்கியத்திற்கு பிரார்த்தனை செய்யும் ஸ்தலம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறியவர்கள் அன்னாபிஷேகத்தில் பங்கேற்பது நல்லது. மேலும் பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிலத்தலங்களில் ஒன்றான இக்கோயில் அருகில் வரதராஜபெருமாள் கோயில் இருப்பது சிவ விஷ்னு தலமாக செயல்படுவதால் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கிறது.
தல வரலாறு:
சோழ வளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூக்கும் மேற்கே 19 கி.மீ.,தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் சோழ மன்னர்கள் கட்டிய சிவத்தலங்கள் 108- ல் இதுவும் ஒன்று. இக்கோயில் பழுதடைந்து முட்புதர்கள் மண்டி காணப்பட்டது. அப்பகுதியினர் வரிவசூல் செய்து கோயிலை புதுப்பித்து புதிய விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்துள்ளனர். அப்பகுதி சிவசுப்ரமணியன் என்பவர் முயற்சியால் கோயில் பராமரிக்கப்படுகிறது.
அதற்கு சிவ- விஷ்னு சக்தி வழிபாட்டு மன்றம் அமைத்து அப்பகுதியினர் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். இக்கிராமத்தை சுற்றி முற்றிலும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் மிகவும் பழமையான (ஆயிரம் ஆண்டுகள்)சிவத்தலம் இருப்பதை பராமரித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து வெளிநாடு, வெளி மாநிலங்களில் குடி பெயர்ந்து ள்ள பக்தர்கள் முக்கிய விசேஷ தினங்களில் இங்கு வந்து ஈசனை வணங்கி செல்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சோழ வம்சத்தினர்கள் சோழ மண்டலத்தில் கட்டிய 108 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று, மேலும் இப்பகுதியில் வரதராஜ பெருமாள் கோயில் இருப்பது சிறப்பு சேர்க்கிறது.
இருப்பிடம் : திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் 16 கி.மீ., தொலைவில் உள்ள கொரடாச்சேரியில் இருந்து 4 கி.மீ தெற்கே செல்லவேண்டும். திருவாரூர்-மன்னார்குடி சாலையில் லட்சுமாங்குடியில் இருந்து 3 கி.மீ வடக்கில் செல்ல வேண்டும்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020