Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பொன்னியம்மன் (ஹரிஹரபுத்திரர்)
  அம்மன்/தாயார்: பொன்னியம்மன்
  தல விருட்சம்: வேம்பு, இரிவாட்சி ( பூ பூக்காமல் கனி காய்காமல் உள்ள மரம்)
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமப்படி பூஜை
  புராண பெயர்: நரசிம்மபுரம் என்பதே நார்சிங்கம் பேட்டை என மருவியுள்ளது.
  ஊர்: நார்சிங்கம்பேட்டை
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அம்மன் மற்றும் வீரனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இரு தெய்வங்களும் குல தெய்வ வழிபாட்டிற்குரியவர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள தலவிருட்சமரத்தில் பூ பூக்காமல் கனி காய்காமல் உள்ளது சிறப்பம்சமிக்கது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையும் மாலை 4.00மணிமுதல் இரவு 7.00 மணிவரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பொன்னியம்மன் (ஹரிஹரபுத்திரர்) திருக்கோயில், மஞ்சக்குடி அஞ்சல், குடவாசல் தாலுகா, நார்சிங்கம்பேட்டை, திருவாரூர் -612610.  
   
போன்:
   
  +91 95857 35434 
    
 பொது தகவல்:
     
  மேற்குப்பக்கம் வாயிலில் மகா மண்டபத்தில் 50 பேர் அமரும் இடவசதி ஹரிகரபுத்திரன் பூரணகலா மற்றும் புஷ்பக்கலாடுன் மேற்குபக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றார். வடக்குப் பக்கம் வீரன், எதிரில் தல விருட்சம் உள்ளது. வடக்குப்பக்கம் வாயிலில் 10 தூண்கள் அமைக்கப்பட்ட மகா மண்டபத்தில் வடக்குபக்கம் பார்த்த வகையில் பொன்னியம்மன் அருள்பாலிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகரும் வடக்குப்பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கிறார். 500-1000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. கிராம தேவதை மற்றும் கிராம காவல்தெய்வமாக அப்பகுதியினர் வழிபாடு நடத்தி வருகின்றனர். 2008ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணம் மற்றும் புத்திரபாக்கியம் உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும், புது தானியங்கள், ஆடு, கோழி உயிருடன் காணிக்கை யாக செலுத்துகின்றன. 
    
 தலபெருமை:
     
  மஞ்சக்குடி பஸ் நிலையத்தின் அருகில் சோழ சூடாமணி ஆற்றின் வடக்கே ஒரு  கி.மீ., தொலைவில் பாõம்பிகா சமேத ம்ருத்யுஞ்ஜ யேஸ்வரர் கோயில் அருகில் இக்கோயில் உள்ளது. சீனுவாச பெருமாள், ஆலங்குடி குருபகவான், வலங்கைமான் மகா மாரியம்மன் இக்கோயிலுக்கு சிறப்பு சேர்க்கிறது. இங்குள்ள விக்கிரகங்கள் அனைத்துக்கும் எல்லாவிதமான அபிஷேகம் செய்யப்படுகின்றன.  
     
  தல வரலாறு:
     
  500-1000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகவும் மன்னார்காலத்தில் கட்டப்பட்டதாகவும்  கூறப்படுகிறது. வயல் சூழ்ந்த பகுதியில் கோயில் உள்ளது. காவல் தெய்வமாக பொன்னியம்மனும், எல்லை தெய்வமாக (ஐயனார்) ஹரிஹர புத்திரனும் அருள்பாலிக்கின்றனர். சிறிய கொட்டகையாக இருந்ததை கிராமத்தினர் வரி வசூல் செய்து கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். கடந்த 2008ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பலரும் குலதெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள தலவிருட்சமரத்தில் பூ பூக்காமல் கனி காய்காமல் உள்ளது சிறப்பம்சமிக்கது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar