திருவோணம், ஆடி அமாவாசை, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட பெருமாளுக்குரிய அனைத்து விஷேசங்களும் கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
எந்தக்கோயிலிலும் இல்லாத வகையில் உற்சவரான ஆஞ்சநேயர் வலது கையை நீட்டி இரு விரல்களால் ‘கண்டேன் சீதையை’ என கூறிய நிலையில் அருள்பாலிப்பது சிறப்புக்குரியதாகும்.
திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் மாலை 5.00மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும்.
கிழக்கு சன்னிதி நுழைவு வாயிலில், பலி பீடத்திற்கு முன் நின்ற கோலத்தில் கருட ஆழ்வார் மேற்குபக்கம் சீனிவாச பெருமாளை பார்த்தவண்ணம் அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தில் 200 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். மகா மண்படத்தில் தெற்கு பக்கம் பார்த்த வகையில் காரிய ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு. வெளியில் விநாயகர் மற்றும் நாகர் அருள்பாலிக்கின்றனர். நுழைவு வாயிலில் சனி மூலையில் தீர்த்தக்கிணறு உள்ளது. 1500 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. 1956-ம் ஆண்டில் தொடர்ந்து 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
பிரார்த்தனை
திருமணம் ஆகாதவர்கள், மன சஞ்சலம், கோர்ட் விவகாரம் தீரவும், புத்திர பாக்கியம் காரிய வெற்றிக்கும் சிறப்பு பரிகார ஸ்தலமாக உள்ளதால் பக்தர்கள் பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
ஆஞ்சநேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சார்த்தி வழிபாடு செய்தால் காரியம் கை கூடுவதால் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்.
தலபெருமை:
நரசிம்மபுரம் என்பதே நார்சிங்கம் பேட்டை என மருவியுள்ளது. மஞ்சக்குடி பஸ் நிலையத்தின் அருகில் சோழ சூடாமணி ஆற்றின் வடக்கே அரை கி.மீ., கோயில் உள்ளது. இக்கோயிலுக்கும் வடக்கே சிறப்பு மிக்க பாலாம்பிகா சமேத ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் கோயிலும், ஆலங்குடி குருபகவான், வலங்கைமான் மகா மாரியம்மன் இக்கோயிலுக்கு சிறப்பு சேர்க்கிறது. இந்தியாவில் எந்தக்கோயிலிலும் இல்லாத வகையில் உற்சவரான ஆஞ்சநேயர் வலது கையை நீட்டி இரு விரல்களால் ‘கண்டேன் சீதையை’ என கூறிய நிலையில் அருள்பாலிப்பது பெருமை சேர்க்கிறது. மூலவரான சீனிவாச பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், கருட ஆழ்வார் விக்கிரகங்களாக உள்ளதால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஐம்பொன் உற்சவர்கள் பாதுகாப்புகருதி திருவாரூர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் நாகம் வந்து செல்கிறது.
தல வரலாறு:
ராமபிரான் வனவாசம் மேற்கொண்டபோது, அவர் பத்தினியான சீதையும் உடன் செல்கிறாள். அப்போது காட்டில் தனிமையில் இருந்த போது, ராவணனின் மாமன் மாரீசன், மான் உருவில் வந்து மாயம் செய்கிறான். மானை பிடித்து தருமாறு சீதை கேட்டபோது, ராமன் துரத்தி சென்ற நிலையில், சீதை கடத்தப்பட்டாள். ராமபிரான் தன் மனைவியை காணாமல் துயரப்படும்போது ராமனின் மோ திரத்துடன் ஆஞ்சநேயர் இலங்கைக்கு சென்று சீதை இருக்கும் இடத்தை தெரிந்து வந்த ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டி காட்டிய இடம் என்பதால் அப்பகுதியினர் ஆஞ்சநேயருக்கு கோயில் அமைத்து வழிபட்டனர். பின்னாளில் சீனிவாச பெருமாளையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயில் பின்பகுதியில் விநாயகர் மற்றும் நாகர் என விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேம் 12 ஆண்டிற்கு ஒரு முறை சிறப்பாக நடத்தப்படுகிறது. இக்கோயிலில் சீனிவாச பெருமாள் மார்பில் லட்சுமி இருப்பது தனி சிறப்பு சேர்க்கிறது. வேண்டுவோர்க்கு ஆஞ்சநேயர், சீனிவாச பெருமாள், அவர் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமி, விநாயகர் மற்றும் நாகர் அருள்பாலிக்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:எந்தக்கோயிலிலும் இல்லாத வகையில் உற்சவரான ஆஞ்சநேயர் வலது கையை நீட்டி இரு விரல்களால் ‘கண்டேன் சீதையை’ என கூறிய நிலையில் அருள்பாலிப்பது சிறப்புக்குரியதாகும்.
இருப்பிடம் : திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் நார்சிங்கம் பேட்டை உள்ளது. மஞ்சக்குடியில் இறங்கி சோழ சூடாமணி ஆற்றின் பாலத்தின் வழியாக அரை கி.மீ., தொலைவில் கோயில் <உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி, சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020