Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு சந்தான ராமசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சந்தான ராமசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சந்தான ராமசுவாமி
  உற்சவர்: சந்தான ராமசுவாமி
  அம்மன்/தாயார்: சீதாபிராட்டியார்
  தல விருட்சம்: கள்ளி சப்பளாத்தி
  தீர்த்தம்: சாகேத தீர்த்தம் (அயோத்தி)
  ஆகமம்/பூஜை : பாஞ்சராரத்ரம்
  புராண பெயர்: நீராடுமங்கலம்
  ஊர்: நீடாமங்கலம்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ராமநவமி உற்சவம்(பங்குனியில்), ஆடிப் பூரத்தில் தெப்ப உற்சவம், ஆவணியில் பவித்ர உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி, மார்கழியில் அத்யயான உற்சவம் போன்ற திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  நீராடுமங்கலம் என்றதே பின்னாளில் நீடாமங்கலம் என மறுவியுள்ளது. (1705ம் ஆண்டு சரபோஜி மன்னன் யமுனாம்பாளுடன் சகேத தீர்த்தில் நீராடியதால் இப்பெயர் பெற்றுள்ளது)  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரைதிறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சந்தான ராமசுவாமி திருக்கோயில், நீடாமங்கலம், திருவாரூர்.  
   
போன்:
   
  +91 94448- 54208 
    
 பொது தகவல்:
     
  நீராடுமங்கலம் என்றதே பின்னாளில் நீடாமங்கலம் என மறுவியுள்ளது. (1705ம் ஆண்டு சரபோஜி மன்னன் யமுனாம்பாளுடன் சகேத தீர்த்தில் நீராடியதால் இப்பெயர் பெற்றுள்ளது)  ஊருக்கும் நடுவில் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு பக்கம் வாயிலில், பிறக்கோயில்கள் அனைத்தும் இக்கோயிலை சுற்றி அமைந்துள்ளது. கோயிலின் மூன்றுப் பக்கமும் நீரோட்டம் நிறைந்துள்ளது. வெண்ணாறு, கோரையாறு என இரு ஆறுகள் ஓடுகிறது. கோயிலின் எதிரில் சாகேத புஷ்கரணி(ஐயோத்திக்கு சாகேதபுரி என்று பெயர் அதேப்பெயர் இங்கும் வைக்கப்பட்டுள்ளது) என்ற தெப்பக்குளம் அதன் நடுவில் கோயிலும் உள்ளது.

கோயில் உள்ளே முன் மண்டபம், வலதுபக்கம் வசந்த மண்டபம், மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம், உள் பிராகாரத்தில் கொடி மரம், பலி பீடம் உள்ளது. உள் பிராகாரத்தின் கிழக்கில் கொடி மரம், தென் கிழக்கில் மடப் பள்ளி, வட கிழக்கில் யாகசாலை அமைந்துள்ளது. மேற்கே அகலமான சன்னிதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், ஸ்ரீமந்நிகமாந்த மகாதேசிகன் உள்ளிட்ட விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாகன மண்டபம், கச்சேரி மண்டபங்களும் உள்ளன. கோயில் உள்ளே பெருமாள் சன்னிதிக்கு முன்பாக நடுவில் மகா மண்டபம் அதன் தெற்கில், கிழக்கில் வாயில்கள் அøமைந்துள்ளது. கருடன் பெருமாளுக்கு நேர் எதிரில், அனுமர், சேனை முதலியோர் சன்னிதிகள் வடக்கில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. தெற்கு நோக்கி அனுமர், மூலஸ்தனத்தில் திரயங்க விமானத்தில் சந்தான ராமசாமி சீதை, லட்சுமுணர் ஆகியோர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

உற்சவர்கள் மூலவருக்கு முன்னே சந்தான ராமர், சீதை, லட்சுமுணர், அனுமர், சயன சந்தான கோபாலன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். விமானத்திற்கு வெளியில் தெற்கு பாகத்தில் தும்பிக்கை ஆழ்வார், வடக்கில் துர்க்கை அருள்பாலிக்கின்றனர். கோயிலுக்குள் இரண்டு பிராகாரங்கள், வெளியில் தேரோடும் வீதியும் உள்ளது. கோயில் வட கலை பாஞ்சராத்ர முறையில் ஏற்பட்டுள்ளது. கோயில் சுற்றளவு 272-க்கு 163 கோயில் அமைப்பும், படமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. கோயிலில் அனுமருக்கு தனி சன்னிதி உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  புத்திரபாக்கியத்திற்கு சிறப்பு பரிகாரஸ்தலம், சகல ஐஸ்வர்யங்கள், செல்வ வளம் மற்றும் மனை அமைதிக்கும் உரிய சிறப்பு ஸ்தலம் என்பதால் பக்தர்கள் அதிகமானோர் வந்து பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரதிமாதம் ரோகினி அல்லது ரேவதி நட்சத்திரத்தன்று குளத்தில் நீராடி சந்தான கோபலானை கையில் எடுத்து வணங்கி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  மகாராஷ்டிர ராஜ்யத்தை ஆதியில் உருவாக்கிய வெங்கோஜி மகாராஜாவின் பரம்பரையில் தோன்றிய ப்ரதாபசிம்ம மகாராஜா நீடா மங்கலம் என்னும் இவ்வூரில் இரண்டு கோயில்களும், சத்திரம் ஒன்றையும் 1761-ம் ஆண்டில் கட்டினார்.  இதில் சந்தானராமசாமியான கோயில் இக்கோயிலுக்கு காசி விஸ்வநாதர் கோயிலும் பெருமை சேர்க்கிறது. திருகாவிரி பாயும் சோழவளநாடு. இதற்கு வளநாடு, சென்னி நாடு, அபயநாடு, செம்பியநாடு, பொன்னிநாடு என்று வழங்கும் சோளணு தேசமாகும். இந்த தேசத்தில் கோயில்கள் பல உள்ளன. அவைகளில் புராணங்கள் நிறைந்தவை, தனிப்பாடல், ஆழ்வார்கள் மற்றும்  ஆன்றோர்களால் பாடல் பெற்ற கோயில்கள் பல அடங்கியுள்ளன. இவைகளில் தஞ்சை அரசனான பிரதாபசிம்ம மகாராஜாவால் அமைக்கப்பட்ட அபிமான கோயிலாக விளங்குவது தலத்திற்கு சிறப்பாகும்.
 
     
  தல வரலாறு:
     
  பரம்பொருளாகிய இறைவனுக்கு பரத்தும், வ்யூகம், அந்தர்யா மித்வம், வாவம், அர்ச்சை, என்ற  ஐந்து நிலைகளில் உள்ளன. பரத்துவம் என்பது பரமபதத்தில் எழுந்தருளி இருக்கும் நிலை. வ்யூகம் என்பது  திருப்பாற்கடலில் எழுந்தருளி இருக்கும் நிலை. அந்தர்யா மித்வம் என்பது ராமகிருஷ்ணாதி அவதாரங்களை குறிக்கும் நிலை. அந்தர்யாமித்வம் என்பது ராமகிருஷ்ணாதி அவதாரங்களை குறிக்கும் நிலை எல்லா இடங்களிலும் சகல வஸ்துக்களிலும் எள்ளினுள் எண்ணை போல் மறைந்து இருப்பது அடியார்களின் மனதில் வீற்றிருப்பதும் இதில் அடங்கும். உபாச கானாம் கார்யார்த்தம் ரூப கல்பனா என்ற முறைப்படி எங்கும் நிறைந்தவன் கோயில்களில் உள்ள மூர்த்திகளில் அருந்தன்மையுடன் விளங்குவதாகிய அர்ச்சை நிலையே சிறந்ததாக சான்றோர் கூறுவர்.

கலியுகத்தில் மனித சிரமங்களுக்காகவும், தெய்வம் அர்ச்சை நிலை என்ற உருவ வழிபாடு என்றும் சொல்வர். உருவ வழிபாட்டில் நின்ற திருக்கோலம். பள்ளி கொண்ட(சயன) திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம் என்ற மூன்று வகையில் பெருமாள் ஆங்காங்கு எழுந்தருளி உள்ளார். இந்த கோயிலில் மூலவரும் உற்சவரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். பிரதாப சிம்ம மகாராஜா 1739-ம் ஆண்டு முதல் 1763-ம் ஆண்டில் அவருடைய காலத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் கீர்த்தி மானாக விளங்கியவர் வெங்கோஜியின் புதல்வர். இ வர் 24 ஆண்டுகள் அரசு புரிந்துள்ளார். படிப்படியாக கோயில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. 1924-ம் ஆண்டு சம்ப்ரோஷனம் நடந்துள்ளது. 1956-ம் ஆண்டு மகா சம்ப்ரோஷனம் நடந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நீராடுமங்கலம் என்றதே பின்னாளில் நீடாமங்கலம் என மறுவியுள்ளது. (1705ம் ஆண்டு சரபோஜி மன்னன் யமுனாம்பாளுடன் சகேத தீர்த்தில் நீராடியதால் இப்பெயர் பெற்றுள்ளது)
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar