சித்திரை, ஆவணி மற்றும் ஆடி மாதங்களில் திருவிழாவும், சித்திரையில் தேரோட்டம் நடக்கிறது. ஆடிமாதத்தில் அனைத்து நாட்களும் விசேஷம் நடக்கிறது. திருவிளக்கு பூஜையும் இங்கு சிறப்பு.
தல சிறப்பு:
பஞ்ச பாண்டவர்கள் நடை பயணமாக சென்றபோது தாகம் ஏற்பட்டுள்ளது அப்போது குச்சியால் கோடு கிழித்ததும் தண்ணீர் ஊற்றெடுத்து அவர்களின் தாகம் தீர்த்து விடை கொடுத்ததால் திருவிடை வாயில் என்றாகி தற்போது திருவிடைவாசல் என அழைக்கப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 9.00 மணி முதல் காலை 12.00 மணி வரை மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும்.
பஞ்ச பாண்டவர்கள் நடை பயணமாக சென்றபோது தாகம் ஏற்பட்டுள்ளது அப்போது குச்சியால் கோடு கிழித்ததும் தண்ணீர் ஊற்றெடுத்து அவர்களின் தாகம் தீர்த்து விடை கொடுத்ததால் திருவிடை வாயில் என்றாகி தற்போது திருவிடைவாசல் என அழைக்கப்படுகிறது. வடக்குப் பக்கம் வாயிலில், கற்பகிரகத்தில் ஒரு கலசம், நுழைவு வாயிலில் வாஸ்து தேவதைகள், 200 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். பாலவிநாயகர், ஆதிவிநாயகர், பாலமுருகன், மாரியம்மன், பெத்தபெருமாள், சப்தகன்னிகள், சாஸ்தா. காத்தவராயன், பேச் சியம்மன், பெத்தபெருமாள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். பின் பக்கம் தல விருட்சம் வேம்பும், குதிரையுடன் முன்னடியான் நிற்கும் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. 500 ஆண்டுகள் பழமை தற்போது புதுப்பித்து 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
பிரார்த்தனை
திருமணத்தடையால் அவதியடைவர்கள் ஆண், பெண் இருபாலரும் வெள்ளிக்கிழமையில் இங்கு வந்து வழிபாடு செய்தால் திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம், நீண்டகால நோய், ஏவல், பில்லி மற்றும் சூனியம், குல தெய்வ வழிபாடும் நடக்கிறது.
நேர்த்திக்கடன்:
புது தானியங்கள் காணிக்கை செலுத்துதல், திருமணத்தடை நீங்கியவர்கள் கணவன் மனைவியுடன் பங்கேற்று அம்மனை மணமகள் கோலத்தில் அலங்கரித்து வழிபாடு செய்வதுடன், புத்திரபாக்கியம் பெற்றவர்கள் தொட்டில் கட்டி வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்துக்கின்றனர்.
தலபெருமை:
வரலாற்று சிறப்பு மிக்க பாடல் பெற்ற திருஞான சம்பந்தர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்கும் வந்து செல்கின்றனர்.
தல வரலாறு:
பாண்டவையர் ஆற்றில் மிதந்து வந்த கூடையை அப்பகுதியினர் எடுத்துச் சென்று பார்த்தனர். அதில் அம்மன் சிலை ஒன்று இருந்தது கண்டு திடுக்கிட்டனர். யார் இந்த அம்மன் என பலரும் விடைத்தெரியாமல் விழித்து பின் நாளில் ஆயியாரம்மன் எனபெயர் சூட்டினர். பின்னர் அப்பகுதியினர் வரி வசூல் செய்து கோயில் கட்டி பராமரித்தனர். தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு காதணி, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பஞ்ச பாண்டவர்கள் நடை பயணமாக சென்றபோது தாகம் ஏற்பட்டுள்ளது அப்போது குச்சியால் கோடு கிழித்ததும் தண்ணீர் ஊற்றெடுத்து அவர்களின் தாகம் தீர்த்து விடை கொடுத்ததால் திருவிடை வாயில் என்றாகி தற்போது திருவிடைவாசல் என அழைக்கப்படுகிறது.