சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, தமிழ்வருடப்பிறப்பு, தைப்பொங்கல், தீபாவளி, திருவாதிரை போன்ற உற்சவ நாட்களில் மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தி விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
தல சிறப்பு:
இங்குள்ள விநாயகர் ஜடாமுடியோடு கூடிய வித்தியாசமான கோலத்தில் உள்ளவை என்பது சிறப்புமிக்கதாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு படித்துறை விநாயகர் திருக்கோயில்,
அருப்புக்கோட்டை,
விருதுநகர்.
போன்:
+91 9894192727
பொது தகவல்:
கிழக்குப் பார்த்த வண்ணம் அமைந்த திருக்கோயில். சிலை கிடைத்த இடத்தில் உயர்ந்த பீடத்தை உருவாக்கி, அதன்மீது விநாயகரை பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோயிலுடன் இணைந்த உபகோயில் இது.
பிரார்த்தனை
நினைத்தது நிறைவேறவும், வளமான வாழ்வு அமைந்திடவும் வேண்டுவோர் இங்கு அதிகம். குழந்தைப்பேறுக்காக வேண்டியும், மாங்கல்யம் பாக்கியம் கைகூடவும் இங்கு வந்து பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் கணபதிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்தும், தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
தலபெருமை:
மாங்கல்ய பாக்கியம் கைக்கூடி வேண்டுவோர், விநாயகருக்கு மாலை வாங்கி சாத்தி, அந்த மாலையைப் பெற்று வீட்டில் பத்திரப்படுத்தி வைக்கின்றனர். மாங்கல்ய பாக்யம் கூடிவந்ததும், அந்த மாலையை எடுத்து வந்து தெப்பக்குளத்தில் சேர்த்துவிடுகின்றனர்.
தல வரலாறு:
ஜடாமுடியோடுகூடிய வித்தியாசமான திருக்கோலத்தில் விநாயகர் அருளும் தலம், அருப்புக்கோட்டை. சூரிய புஷ்கரணி எனும் தெப்பக் குளத்தின் வடகரையில் கோயில் கொண்டுள்ளதால் இவர் படித்துறை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கி.பி. 1193-ம் ஆண்டில் திரு ஆலவாயுடையான் சோழகங்கன் மகன் அருளாளரழகப் பெருமான் என்பவரால் இக்குளம் உருவாக்கப்பட்டது. அப்போது பூமியிலிருந்து இவ்விநாயகர் கண்டெடுக்கப்பட்டு, குளக்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள விநாயகர் ஜடாமுடியோடு கூடிய வித்தியாசமான கோலத்தில் உள்ளவை என்பது சிறப்புமிக்கதாகும்.
இருப்பிடம் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சுழி செல்லும் நெடுஞ்சாலையில் 2 கி.மீ. தூரத்தில் சொக்கலிங்கபுரத்தில் அமைந்துள்ளது, படித்துறை விநாயகர் கோயில்.