மூலவரின் சிலை நவபாஷாண சிலை என்பது சிறப்பு. மிகச்சிறிய கோயிலாக இருந்தாலும், நவபாஷாணத்தில் பெருமாள் சிலையை பார்ப்பது அரிது என்பதாலும், கீர்த்தி பெரிது என்பதாலும் சனிக்கிழமைகளில் மக்கள் வந்து செல்கின்றனர்.
திறக்கும் நேரம்:
லை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை காலை 8 - மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில்,
காரிசேரி- 626 119
விருதுநகர் மாவட்டம்.
போன்:
+91- 98423 64059.
பொது தகவல்:
இங்கு மார்கழி திருவோண நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சனிக்கிழமைகளில், நவக்கிரக தோஷ பரிகாரத்திற்கும் யாகம் நடத்துகின்றனர்.
பிரார்த்தனை
பொதுவாக விரதம் இருப்பவர்கள் ஒரு வாரம், ஒரு மண்டலம் என குறிப்பிட்ட நாட்கள் விரதம் இருந்து சுவாமியை வழிபடுவார்கள். ஆனால், இங்கு மார்கழி மாதத்தில், திருவோண நட்சத்திரத்திற்கு முன்பு, 28 நாட்கள் விரதம் இருந்து, பின்பு லட்சுமி நாராயணரை வணங்குகிறார்கள். இதனால், கோரிக்கைகள் நிறைவேறும் என்பதுநம்பிக்கை. பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை சாப்பிட்டால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து துளசி அர்ச்சனை செய்கின்றனர்.
தலபெருமை:
பெருமாள் நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து லட்சுமி தாயாரை மடியில் வைத்து, அணைத்த கோலத்தில் காட்சி தருகிறார்.பிரகார தெய்வங்கள் இல்லை.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோயிலில் வசித்த சில சித்தர்கள் நவபாஷாணத்தில் ஒரு லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனர்.ஒருசமயம் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காரிசேரியில் கரை ஒதுங்கியது.சிலையை எடுத்த மக்கள், இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவரின் சிலை நவபாஷாண சிலை என்பது சிறப்பு.
இருப்பிடம் : விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் வழியில் 15 கிமீ., தொலைவிலுள்ள மெப்கோ இன்ஜனியரிங் கல்லூரி பஸ்ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கோயிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். காலை, மாலையில் மட்டுமே பஸ் உண்டு.