Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நீலகண்டேஸ்வரர்
  அம்மன்/தாயார்: மங்களாம்பிகை
  ஊர்: திருவாரூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தைமாதம், விசாக நட்சத்திரம் திருநீலகண்டரின் குருபூஜை தினம். நாடெங்குமிருந்து ஏராளமான மக்களும், இவரைக் குலதெய்வமாகக் கொண்டவர்களும், உள்ளூர் சிவபக்தர்களும் ஏராளமாக கூடிவிடுவர். அன்று நாயனாருக்கு 21 திருவோடு வைத்து, குரு பூஜை செய்யப்பட்டு, சிவனடியார்க்கு திருவோடுகள் வழங்கப்படுகின்றன. பின்னர் அன்னதானம் விமர்சையாக நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  திருநீலகண்டரால் பிரதிஷ்டை செய்தவர் இந்த ஈசன் மேற்கு முகமாக அருள்பாலிப்பது தனிச்சிறப்புப்பெற்றுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், சன்னதி தெரு, திருவாரூர்-610 001  
   
போன்:
   
  +91 99425 20479 
    
 பொது தகவல்:
     
  அம்பாள் மங்களாம்பிகை, கிழக்கு நோக்கி அழகுத் தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார். விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளைக் கொண்டு பஞ்சமூர்த்தி தலமாக விளங்குகிறது. இங்கே நீலகண்டர் அவர் மனைவியுடன் எழுந்தருளியுள்ள தனிச் சன்னதி உள்ளது சிறப்பு. திருநீலகண்டர், மண்பாண்டங்கள் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர். எனவே இன்றும் இந்த இனத்தவர் பலருக்கு இது குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. திருநீலகண்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் என்பதோடு, மேற்கு முகமாக விளங்குவதால் தனிச்சிறப்பு மிக்கவர் இந்த நீலகண்டேஸ்வரர் என்கிறார்கள். கேட்டவர்க்கு கேட்டபடி அருளும் வரப்பிரசாதி இந்தப் பெருமான்.
 
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களுக்கு கேட்டதை கேட்டபடி அருளுவதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  பொது பக்தர்கள் அல்லாமல் சந்நியாசம் ஏற்றோரும், சிவத்தொண்டு புரிவதையே கடமையாக ஏற்றவிட்ட சிவனடியார்களும், இந்தக் கோயிலுக்கு எப்போதும் வந்த வண்ணம் உள்ளனர். திருநீலகண்டரே தங்களது ஞான குரு என்கின்றனர் அவர்கள். அந்த நாயன்மாரின் அருள்திறம் இந்த கோயில் முழுவதும் நிறைந்திருப்பதால், தங்கள் மனதில் ஞான ஒளி காட்டி, சிவத்தொண்டில் சிறக்கச் செய்வார் என்பது அவர்களது நம்பிக்கை ஆரூர் தியாகேசரின் திருக்கோயிலின் கிழக்கு வாசல் ஓரமாகவே உள்ளது, இந்தப் பெரிய கோயில். தியாகேசரின் பார்வைபடும் விதமாகவே திருநீலகண்டர் இவ்விடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். ஒவ்வோர் ஆண்டு குருபூஜை அன்றும் திருநீலகண்டர் இக்கோயிலுக்கு அரூப நிலையில் வந்து, சிவனடியார்களுக்கு அருளாசி அளிப்பதாக ஐதிகம்.  
     
  தல வரலாறு:
     
  அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான திருநீலகண்டநாயனார் ஒருசமயம் திருவாரூரில் கோயில் கொண்டுள்ள ஈசன் தியாகராஜரை தரிசனம் செய்ய வந்தார். பங்குனி உத்திர நாளில் பிரானின் அருள் தரிசனம் பெற்ற பின்னர், தங்கள் அருள்காட்சி பெற்றதற்கு அடையாளமாக தங்களுக்கு இத்தலத்திலேயே நான் ஒரு கோயில் எடுப்பிக்க அருள வேண்டும் என்று தனது உள்ளக் கிடக்கையைக் கூறுகிறார். உன் பொருட்டு நான் இவ்விடத்தில் மேற்கு திசை நோக்கி அருள்கிறேன். அவ்வாறே எனக்கு கோயில் அமை என்று ஆசியளித்தார் ஈசன். அவ்வாறு நீலகண்ட நாயனார், சிவலிங்கத்தை மேற்கு முகமாக அமைத்து வழிபட்ட கோயிலே திருவாரூர் நீலகண்டேஸ்வரர் கோயில். நாயனார் பெயரிலேயே ஈசனுக்கும் பெயர் அமைந்தது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருநீலகண்டரால் பிரதிஷ்டை செய்தவர் இந்த ஈசன் மேற்கு முகமாக அருள்பாலிப்பது தனிச்சிறப்புப்பெற்றுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar