Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆதி வழிவிடும் விநாயகர்
  ஊர்: ராஜபாளையம்
  மாவட்டம்: விருதுநகர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி  
     
 தல சிறப்பு:
     
  பிள்ளையார்பட்டியை போல இத்தலத்திலும் தினமும் கணபதி ஹோமம் நடப்பது சிறப்பு. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கடைசி கோயில் இது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயில், பெத்தநல்லூர் இராஜபாளையம்,626 117 விருதுநகர்.  
   
போன்:
   
  +91 93608 64490 
 
  தல வரலாறு:
     
  மாயூரநாத சுவாமி திருக்கோயிலுக்குப் பாத்தியப்பட்ட ஆதிவழிவிடும் விநாயகர் கோயில் 760 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னரால் கட்டி குடமுழுக்கு செய்யப்பட்டது. வரலாற்றுச் சான்றுகள் மூலம் அனைவரும் அறிந்ததே. காலப்போக்கில் இந்த ஆதி வழிவிடும் விநாயகர் கோயில் நில அதிர்வு, இயற்கை சீற்றங்களால் புதர்கள் மண்டியும், அருவுருவம் தெரியாத அளவில் இடிந்தும் யாருமே பராமரிப்பின்றி கேட்பாற்ற நிலையில் இடிந்து போனது.

ஆதியில் இக்கோயில் கற்பகிரகம், அர்த்த மண்டபம், அனுமினி மண்டபம், மகா மண்டபம், வழிப்போக்கர்கள் மற்றும் பக்தர்கள் தங்கும் தங்கல் மண்டபத்துடன் அழுகுற இருந்து வந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகளாக கண்டு கொள்ளாத நிலையில் பாழடைந்து போனது. முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாய் மனித நடமாட்டமே இல்லாத நிலையில் இருந்தது. இக்காட்டின் வழியாக சிவநேசி என்ற பெண் தன் தாய் வீடான குன்றையூரை நோக்கிச் சென்றபோது பிரசவ வலி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டபோது அங்கிருந்த சிவன் கோயில் வாசலில் அமர்ந்து வேண்டினாள். தனது பக்தையின் துயர்கண்டு இரக்கம் கொண்ட சிவபெருமான் அப்பெண்ணின் தாய் உருவில் வந்து புத்திரப்பேறுக்கு உதவினார். தன் பெண்ணின் பிரசவ செய்தி அறிந்த அவளது அன்னை தன் உருவில் வந்து உதவியது சாட்சாத் அந்த பரம்பொருளான மாயூரதநாதரே என அறிந்து மகிழ்ந்தாள். அவர்களது பக்தியை உலகறியச் செய்யும் பொருட்டு சிவசக்தி சமேதராய் காட்சி தந்து அருள்பாலித்தனர்.எத்தனையோ கோயில்கள் செப்பனிட்டு, திருப்பணி, குடமுழுக்கு நடைபெற்ற போதும் இக்கோயில் மட்டும் கனிப்பாரற்ற நிலையிலேயே இருந்தது வேதனையளித்தது. இக்கோயிலை தூய்மை செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பது நம்முடைய அவா. அவ்விருப்பம் நிறைவேற விநாயகப் பெருமானை வேண்டிய போது, அவ்விநாயகர் பெருமானே அசரீரியாக வாக்கு கொடுத்து இக்கோயிலை திருப்பணி செய் என்று உத்தரவிட்டதோடு இத்திருப்பணிக்காக சாதி, மதம் வேறுபாடு பாராது அனைத்து ஊர் பொதுமக்களிடமும் யாசகம் கேள். அனைவருமே எனக்காக அள்ளிக் கொடுப்பர். இத்திருப்பணி நல்லபடி நடந்தேறும் என்று அருளினார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பிள்ளையார்பட்டியை போல இத்தலத்திலும் தினமும் கணபதி ஹோமம் நடப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar