இக்கோயில் ஆகமம் விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புவனேஸ்வரி அம்மன், துர்க்கை அம்மன் மற்றும், சிவன், தட்சிணாமூர்த்தி, முருகன், சரஸ்வதி, லெட்சுமி நாராயண சாமி, ஆஞ்சனேயர், கருடாழ்வார், நவகிரகம், சண்டிகேஸ்வரர், அரசமர விநாயகர் சன்னிதிகள் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
அனைத்துவிதமான பிரார்த்தனைகளும் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன், விநாயகருக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வணங்குகின்றனர்.
தல வரலாறு:
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்கள் தாங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் எந்த வித பிரச்சனைகளும் வராமல் இருக்க விநாயகரை வழிபாடு செய்து வந்தனர். இதன் காரணமாக விநாயகருக்கு தனி கோயில் கட்ட நினைத்து விநாயகரை வைத்து பூஜையும் செய்து வந்தனர். பக்தர்களது கோரிக்கைகளை எல்லாம் விநாயகர் கம்பீரமாக இருந்து நடத்திக்கொடுத்ததால்,இத்தல விநாயகருக்கு கம்பீர விநாயகர் என திருநாமம் சூட்டி கோயில்கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.
இருப்பிடம் : கோவை ரயில் நிலையத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 7. கி.மீ., தூரத்தில் உள்ள குறிச்சி ஹவுசிங் யூனிட்டில் கோயில் உள்ளது. டவுன் பஸ் வசதிகள் உள்ளது.. 50, 71ஏ, 73பி, 4என், 47ஏ, 48ஏ, 66ஏ, 50சி பேருந்து வசதிகள் உள்ளது.