சித்திரை மாத திருவிழா, பூச்சாட்டுதல் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
இரவு 12, 1 மணியளவில் சலங்கை ஒலி, அதிகாலை 3 மணி அளவில் அம்மன் பூசாரியின் கனவில் வந்து பூஜைக்கு எழுப்புதல் (தவறாது வந்து எழுப்புகிறாள்) போன்றவை சிறப்புமிக்கதாகும்.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு மணி 8 வரை திறந்திருக்கும்.
விநாயகர், கருப்பராயர் சரஸ்வதி, தெய்வங்கள் அமைந்துள்ளன. முக்கிய சிறப்பாக முத்துமாரியம்மன் கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராமம், ஊர்களிடமிருந்து இக்கோயிலுக்கு தவறாமல் வருவதே சிறப்புமிக்கது.
பிரார்த்தனை
என்ன பிரச்சனைக்காக வேண்டினாலும் இக்கோயில் நிறைவேறுகின்றனர். பில்லி, சூனியம் போன்றவைகளை அரசமரத்து விநாயகரும், கருப்பராயனும் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி உள்ளதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிஷேக பூஜை, பட்டு ஆடை கொடுத்தல், தாலி கம்மல் போன்றவை வாங்கி கொடுத்தல், 60 அடி நீளத்தில் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் கல்லு, குச்சி தீச்சட்டி போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று 10 வயது பெண் குழந்தை சாமி வந்து ஆடினாள். பின்பு சிறுமி கூறியதாவது என்னை குழந்தை போல் நினைத்து விளையாடுகிறீர்கள். நான் பண்ணாரி கோயிலிலிருந்து அவதாரமாய் நான் இங்கு கோயிலில் வந்து குழந்தைகளுடன் முத்துமாரியம்மன் ஆக விளையாடிக் கொண்டிருக்கிறேன். சில நாட்களுக்கு பிறகு பின் சுமார் 10 ஆண்டுகளுக்கு அதே இடத்தில் கிடந்த கல்லை எடுத்து வைத்து வழிபட்டனர். கல்லை சிலைக்கு சக்தி கூடியது. சாமி ஆகும் பொழுது வாக்கு சொல்லி அனைத்தும் பலித்ததால், அம்மன் சிலை செய்து அந்த சுயம்பு கல்லை அம்மன் சிலையின் கீழே வைத்து பிரதிஷ்டை செய்தனர். இக்கோயில் 1962ம் ஆண்டு கட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இரவு 12, 1 மணியளவில் சலங்கை ஒலி, அதிகாலை 3 மணி அளவில் அம்மன் பூசாரியின் கனவில் வந்து பூஜைக்கு எழுப்புதல் (தவறாது வந்து எழுப்புகிறாள்) போன்றவை சிறப்புமிக்கதாகும்.