கோயில் வடக்கு நோக்கி உள்ளது. அறம் வளர்த்த மாரியம்மன் வடக்கு திசை நோக்கி உள்ளார். செல்வ விநாயகர் கிழக்கு நோக்கியும், சர்பம் வடக்கு நோக்கியும், காவல் தெய்வம் கருப்பராயன் அர்த்தமண்டப விநாயகர் வடக்கு, முருகன் வடக்கு, அரசமர விநாயகர் கிழக்கு நோக்கி அறம்வளர்த்த விநாயகர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளனர்.
பிரார்த்தனை
தொழில் தடை, திருமணதடை, குழந்தை பாக்கியம், ராகு, செவ்வாய் தோஷத்திற்கு பரிகார ஸ்தலமாக விளங்குவதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
தெய்வ உருவங்களை செய்தும், உடல்நிலை சரியிலை என்றால் எந்த பாகத்தின் நிலை சரியில்லையோ அந்த பாகத்தை மண், வெள்ளி, தகரம் போன்றவைகளில் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கோயில் வளாகத்தில் உள்ள தல விருட்ச மரத்தினுள் உள்ள மூலகை மரத்தின் இலையை சாறு ஆக்கி பாலில் கலந்து குடித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம். 100 ஆண்டுகளாக அம்மரம் உள்ளது என்று தெரிந்தும் ஆனால் அம்மரத்தின் பெயர் இரண்டு தலைமுறைகளாகவே யாருக்கும் தெரியாது. அம்மை போட்டவர்கள் இளநீர் பூஜை செய்து நீரை அருந்தினால் அம்மையின் தாக்கம் பூரண குணமாகும். அனைத்து மதத்தினரும் அம்மை நோய்குணமாக இளநீர் வைத்து வழிபட வருகை தருகின்றனர்.
தல வரலாறு:
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அரசர்கள் வண்டியில் வியாபார விஷயமாக இவ்வழியில் செல்லும் போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. பின் அந்த குழந்தையை எடுத்து செல்லும் போது ஒருவழியில் அச்சு முறிந்து நின்றது. பின் கிணற்றில் பெண் குரல் கேட்டது அதன்பின் அக்குழந்தை சிலையாக மாறி பிரதிஷ்டை செய்தனர். இக்கோயில் கி.பி. 967ம் ஆண்டு கட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:குனியமுத்தூர் வரை நடுஇரவில் அம்மன் உள் எல்லையை சுற்றி மக்களை காவல் காத்து வந்ததாக ஐதீகம்.